Thursday, November 4, 2010

பெரியாரின் மொழியியல் பார்வை

பெரியாரின் மொழியியல் பார்வை

திருவாரூர் பவுத்திரமாணிக்கம் தெ.வெற்றிச்செல்வன் அவர்களின் வீட்டில் 29.4.2007 அன்று நடந்த பெரியாரியம் குறித்த முக்கூடல் நிகழ்ச்சியில் பெரியாரின் மொழியியல் பார்வை குறித்து பெரியார் பார்வை இதழாசிரியர் கவி ஆற்றிய உரையிலிருந்து...
அனைவருக்கும் வணக்கம். முதலில் முக்கூடல் நிகழ்ச்சியில் என்னை பேக அழைத்த திரு. வெற்றிச்செல்வன் அண்ணன் அவர்களுக்கு எனது நன்றி.
நான் எழுதிய பெரியாரின் மொழிக்கொள்கை அறிவுபூர்வமானது என்ற நூலைப்பற்றி ஒரு விமர்சனக் கூட்டம் வையுங்கள் என்று திரு. வெற்றிச்செல்வன் அவர்களிடம் கூறினேன். அவரும் 10 படிகளை காசு கொடுத்து பெற்றுச் சென்றார். கடைசியில் என்னையே பெரியாரின் மொழியியல் பற்றிப் பேசச் சொல்லிவிட்டார். எனக்கு மேடை பேச்சு அவ்வளவாக வராது. எனது நான் அமர்ந்து கொண்டே பேச அனுமதி வேண்டுகிறேன். (திரு. பொதியவெற்பன் அவர்கள், பெரியார் மாதிரி பேசுங்கள். உட்கார்ந்து கொண்டே பேசுங்கள் என்றார்).
என்னுடைய பெயர் க.விநாயகம். கவி என்று சுருக்கமாக வைத்துக் கொண்டேன். முதலில் இந்திய இலங்கை உடன்பாடு ஏற்பட்ட போது துக்ளக், தினமணி இதழ்களில் வந்த செய்திகளை மறுத்து ஒரு நூல் எழுதினேன். அதன் பிறகு காவிரிச் சிக்கலை மையமாக வைத்து மற்றொரு நூலை எழுதினேன்.
சென்னை பல்கலைக்கழக திராவிட மொழி ஆய்வுக் கருத்தரங்கில் பார்வையாளராக கலந்து கொண்ட போது பாரதிதாசன் திருக்குறளுக்கு உரை எழுதிய சேதி தெரிந்தது. அந்நூலைத் தேடி அலைந்தேன். அதைப்படித்தவுடன்  அந்நூலைச் சுருக்கி சிறிய வடிவில் அச்சிட்டு எனது திருமணத்தன்று அளித்தேன். அதே போல்  வ.உ.சி திருக்குறளுக்கு உரை எழுதிய விவரமும் அறிந்தேன். அந்நூலையும் தேடினேன். திருநெல்வேலி சைவ சித்தாந்த பதிப்பகத்தில் அந்நூலைக் கிடைக்கப்பெற்றேன். அதையும் சுருக்கி சிறு நூலாக வெளியிட்டேன்.
புதுச்சேரியில் பணியாற்றிய போது பல தமிழறிஞர்களின் தொடர்பு கிடைத்தது.  பெரியார் பற்றி ஏதாவது சொன்னால் போது ஏதாவது சொல்லி ஒரு கொட்டு கொட்டுவார்கள். அதற்காவே நான் பெரியார் பார்வை என்ற பெயரில் இதழ் தொடங்கினேன். கடந்த ஏழு வருடமாக நடத்தி வருகிறேன். இதுவரை 42 இதழ்கள் நடத்தியுள்ளேன். டாடாஸ் ரவி, செந்தில் மற்றும் கலைச்செல்வன் போன்றவர்கள் நிதி உதவி அளித்துள்ளார்கள்.  சரி. இப்போது பெரியார் மொழிப் பார்வை பற்றி பேசுவோம். எதிரே ஜீவி இருக்கிறார். எப்போதும் என்னை வேறு பார்வையோடு பார்ப்பவர் . இங்கே இருப்பவர்களில் பெரும்பாலனவர்கள் இடது சாரி சிந்தனைக் கொண்டவர்கள். அறிஞர்கள். உங்கள் முன்னிலையில் எச்சரிக்கையோடு பேசுகிறேன்.
மொழி என்றால் என்ன?  கருத்துக்களை பரிமாறக் கொள்ளப்பயன்படும் ஒரு கருவி. இது எல்லோரும் சொல்கிற ஒரு சேதி. கருவி என்றால் என்ன? ஆயுதமா? அரிவாளா? துப்பாக்கியா? இதற்கு விடையாக பெரியார் இத்துடன் கூடுதலாக ஒன்றைச் சொல்கிறார். மொழி என்பது சப்தம் (ஒலி) என்கிறார். விலங்குகளும் ஒலியை எழுப்புகின்றன. அது ஒலிக்குறிப்பு என்கிறார். அதற்கு உதாரணம் தருகிறார், கோழி தன் குஞ்சுக்கு கருடன், கழுகு போன்றவைகளால் ஆபத்து வரும் போது ஒரு வகையா ஒலியை எழுப்புமாம். உடனே கோழிக்குஞ்சுகள் தாய்க்கோழியிடம் தஞ்சமடைகின்றன என்கிறார். இங்க பெரியார் மற்றவர்களைப் போல் நூல்களில் படித்திருக்கிறேன் என்று சொல்லவில்லை. நான் நேரில் பார்த்திருக்கிறேன் என்கிறார். இன்னொன்றையும் கூறுகிறார். குரங்கு, தன் குட்டி குரங்கை அழைக்கும் போது பற்களைக் காட்டி, மேல் உதட்டையும் கீழ் உதட்டையும்  சேர்த்து ஏதோ முணுமுணுப்பது போல் செய்யும். உடனே குட்டி குரங்கு தாய்குரங்குடன் வந்து சேரும் என்கிறார் பெரியார். அடுத்து காக்காவுக்கு சோறு வைத்தால் எல்லா காகங்களையும் கூப்பிட்டு தானும் உண்ணும் என்று சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் பெரியார் சொல்கிறார், அந்த காகம் அந்த சோற்றை உண்டு பார்த்து, அதனால் ஆபத்தில்லை என்றவுடன் மற்ற காகங்களை கூவி அழைக்கிறது என்கிறார் பெரியார்.
மொழி என்றால் சப்தம் என்று கூறிய பின், பல மொழி எப்படி ஏற்பட்டது? என்ற கேள்விக்கும் பெரியார் விடை கூறுகிறார். மக்களிடையே போக்குவரத்து தொடர்பின்மை, மலைகள், ஆறுகள் போன்றவைகளால் பிரிக்கப்படுதல் மற்றும் தட்பவெட்ப நிலை ஆகியவையே காரணம் என்கிறார்.
தட்ப வெப்ப நிலை எப்படி காரணமாக முடியும்?  வடமொழியிலுள்ள ஹ போன்ற எழுத்துக்களை அடிவயிற்றிலிருந்து உச்சரிக்க வேண்டியுள்ளது. இது குளிர் பிரதேசங்களில் உள்ள ஆரிய பார்பனர்களுக்கும் வெள்ளைக்காரர்களுக்கும் எளிதாகிறது. அவர்கள் கொஞ்சி பேசினால் கூட சண்டை போடுவது போலத் தெரிகிறது என்கிறார் பெரியார்.
ஒரு மொழி எவ்வாறு சிறப்படைகிறது என்ற கேள்விக்கு, அம்மொழியில் கிடைக்கும் அறியக் கருத்துக்களாலும் முன்னேற்றக் கருத்துக்களாலும் என்கிறார் பெரியார். ஒரு மொழி எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற போது பெரியார் சொல்கிறார், அது நமது தன்மானத்திற்கு, முன்னேற்றத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும் என்கிறார்.
தமிழை ஏன் சிறந்த மொழி என்பதற்கு பெரியார் சொல்கிறார், அது தகைமைசால் மொழி என்று குறிப்பிடுகிறார். இங்கு தமிழிறஞர்கள் கூடியுள்ளீர்கள். இந்த தகைமைசால் என்ற சொல்லுக்கு பொருள் கூற வேண்டும். பெரியார் காட்டுமிராண்டி மொழி என்று சொன்னதை மட்டும்  அந்த ஒரு சொல்லை மட்டும் உருவி வைத்துக் கொண்டு பேசுகிறவர்கள் இந்த தகைமைசால் என்ற சொல் குறித்தும் விளக்க வேண்டும்.
தமிழ் மொழி தொன்மையான நாகரிகம் உடைய மொழி. இயற்கையான நமது பழக்க வழக்கத்திற்கு ஏற்றதாக உள்ளது என்று கூறுகிறார். வட மொழி சொற்களை நீக்கிவிட்டால் நம்முடைய பழந்தமிழ் தானாகவே கிடைக்கும் என்கிறார். இங்கு தூய தமிழ், தனித் தமிழ் என்றும் கூறுகிறார்.
ஆரியப்பார்பனர்கள் தங்களது கருத்துக்களைத் திணிப்பதற்கு வடசொற்களை புகுத்தினர். அதனால் தமிழ் மொழி சீரழிந்தது என்கிறார் பெரியார்.
சாதி, திவசம், திதி, கலியாணம் என்று பண்பாட்டு சீரழிவைக் குறிக்கும் சொற்களை கூறுகிறார். அடுத்து மோட்சம், நரகம், ஆத்மா என்ற மூடநம்பிக்கைச் சொற்களை வகைப்படுத்துகிறார் பெரியார். இன்று வரை நாம் இந்தச் சொற்களைதான் பயன்படுத்தி வருகிறோம். அந்த அளவிற்கு ஆரிய பண்பாட்டையும் நாகரிகத்தையும் புகுத்திவிட்டனர்.
தாய்ப்பால் என்ற கருத்தையும் உடைக்கிறார் பெரியார். ஒரு தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றை தமிழ்நாட்டிலும் மற்றொன்றை வெளிநாட்டிலும் வளருங்கள். தமிழ் நாட்டில் வளர்ந்த குழந்தை தமிழிலும் மத வாதியாகவும் இலண்டனில் வளர்ந்த குழந்தை ஆங்கிலத்திலும் அறிவியல்பூர்வ அறிவைக் கொண்டதாகவும் வளருகிறது என்கிறார். எனவே ஒருவர் சிறப்படைவதற்கு சுற்றுபுறச் சூழலும் காரணம் என்கிறார் பெரியார்.
பெரியாரைப் பற்றிய இன்னொரு குற்றச்சாட்டு 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போரில் இந்தி திணிப்புக்கு ஆதரவாக நடந்து கொண்டார் பெரியார் என்பது. இது அயோக்கியத்தனமான குற்றச்சாட்டு.
அப்போது பெரியார் கூறுகிறார், எந்த பார்ப்பானாவது இந்தி சமஸ்கிருதம், இந்தி வேணும் என்று சொல்கிறானே தவிர அதில் கல்வி படிக்க விரும்புகிறானா? என்று கேட்டுவிட்டு, தமிழையும் இந்தியையும் கூறி சண்டையை ஏற்படுத்தி விட்டு, அவன் ஆங்கிலம் படித்து மேலே மேலே முன்னேறுகிறான் என்கிறார் பெரியார். 1965 இந்தி எதிர்ப்பு போரில் இதுதான் பெரியாரின் நிலைப்பாடு.பேராசிரியர் சுப. வீரபாண்டியன் எழுதிய பெரியாரின் இடது சாரி தமிழ்த் தேசியம் என்ற நூலில் நடுநிலை என்ற பெயரில் இந்த தவறான செய்தியை பதிவு செய்கிறார். இதனால் சோலை மாரியப்பன் கோபித்துக்கொள்ளக் கூடாது.
தமிழ்ப்புலவர்களின் மீதும் தமிழறிஞர்களின் மீதும் பெரியாருக்கு பெருங்கோபம் இருந்தது.  1920 வரை என்னிடம் வாதம் செய்யாத,  கைநீட்டாத புலவர் இல்லை. எனக்கு மீனாட்சி சுந்தரம்பிள்ளையை தெரியாது. ஆனால் எனக்கு உ.வே.சாமிநாதஅய்யரைத் தெரியும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. வை தெரியும். மறைமலையடிகளைத் தெரியும்.
தமிழைக் கெடுத்தவர்கள், தமிழன் அறிவுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள், சொந்த புத்தி இல்லாதவர்கள், புளுகர்கள் என்பதுதான் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ்ப்புலவர்களைப்பற்றிய கருத்தாக பெரியாருக்கு இருந்தது. எனவே தமிழறிஞர்கள் பெரியார் சொன்ன தமிழ் காட்டுமிராண்டி மொழி என்ற சொற்றொடரை உருவி எடுத்துக்கொண்டு பெரியார் மீது அவதூறு பேசுகின்றனர்.
தமிழ் எழுத்துக்களைப்பற்றி பெரியார் சொல்வார், ஐ, ஒள ஆகிய இரண்டு எழுத்துகள் நேரடியாக உதவுவதில்லை. இவை உயிர் மெய் எழுத்துக்களாகத்தான் பயன்படுகின்றன என்று ஆய்வு செய்து கூறுகிறார்.தமிழறிஞர்கள் இது குறித்து பேச வேண்டும்.  பெரியாருக்கு தமிழ் எழுத்துக்கள் குறித்து ஒரு கணக்கு இருக்கிறது. மொத்த தனி உருவ எழுத்துக்கள் தமிழில் அதிகம். மொத்த எழுத்துக்களில் 135 எழுத்துக்கள் தனி உருவம் கொண்டுள்ளது. அவற்றை தனியாக ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றை எளிமைப்படுத்த வேண்டும் என்கிறார். ங,ஞ ஆகிய எழுத்துக்கள் மெய் எழுத்து உருவத்தைத் தவிர வேற உருவங்கள் பயன்படுவதில்லை. இப்படியயல்லாம் பெரியார் எழுத்துக்களைப்பற்றியும் கூறுகிறார். இதற்கெல்லாம் தமிழ்மணி பதில் கூற வேண்டும்.
தமிழ் எழுத்துக் கூட்டுவதும், உச்சரிப்பும் அதன் இலக்கணமும் இயற்கையை, இயல்பாகக் கொண்டுள்ளது என்றும் கூறும் பெரியார் அதை செம்மைப்படுத்த வேண்டாமா என்று கேட்கிறார்.
தமிழ் நாட்டிற்கு போதனா மொழியாக, ஆட்சி மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் பெரியார் இதை புரட்சி பெரியார் முழக்கம் 2001 ஆம் இதழில் வெளியிட்டிருக்கிறது. நானும் எனது பெரியார் பார்வை இதழில் வெளியிட்டிருக்கிறேன் என்று வாய்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.

பெரியார் இஸ்லாம் மதத்திற்கும் சிறுபானமையினருக்கும் எதிரியா?

பெரியார் இஸ்லாம் மதத்திற்கும் சிறுபானமையினருக்கும் எதிரியா?
மதம்  என்பதை பெரியார் எவ்வாறு வரையறுக்கிறார்? ‘மதம் என்பது மனிதனின் உலக வாழ்க்கையின் நடப்பிற்கு ஒரு வழிகாட்டியான கொள்கைகளைக் கொண்டது. அது நம்மைப் போல் ஒரு மனிதனால் ஏற்படுத்தப்பட்டது. அது கால தேச வர்த்தமானப்படி மக்கள் சவுகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையுள்ளது. மனிதனுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் இடம் தரக்கூடியது என்று சொல்லுகின்ற மதத்தைப் பற்றி நான் எப்போதும், அது கூடவே கூடாது என்று சொன்னதே கிடையாது. அந்தப் பொருளின் மீது இருப்பதாக ஒப்புக் கொள்ளுகின்ற மதங்களிடம் எனக்கு அதிகத் தகராறே கிடையாது. கூடி வாழ நினைக்கும் மனிதனின் உலக வாழ்க்கை நலத்திற்கும் ஏதாவது விதிகள் வேண்டும் என்பதில் குற்றமில்லை. அவ்விதிகளுக்குப் பெயர், கொள்கை என்றாலும் திட்டம் என்றாலும் மதமென்றாலும் மார்க்கமென்றாலும் ஒன்றேதான் என்றும்’ என்று மதம் குறித்து 1931 இலேயே வரையறை செய்கிறார்.
அப்படியானால் மதத்தை எந்நிலையில் பெரியார் எதிர்க்கிறார்? இதோ அதற்கும் விடையளிக்கிறார் பெரியார். ‘மதம் மனிதனுடைய ஆத்மார்த்தத்திற்கு ஏற்பட்டது. அது கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள சம்பந்தத்தை விளக்குவது. கடவுளைக் காண்பதற்கும் அடைவதற்கும் ஒரு சாதனமாயிருப்பது. அதை உண்டாக்கினது கடவுள் அல்லது கடவுள் அவதாரம் அல்லது கடவுள் தன்மை அல்லது கடவுள் மகன் அல்லது மனிதத் தன்மைக்கு மேற்பட்ட ஒரு தெய்வீகத் தன்மை. அதில் என்ன சொல்லியிருந்தாலும் அது மனிதனுக்குப் புரியாவிட்டாலும் அது பயன்படாவிட்டாலும் அதை மனிதன் ஒப்புக் கொண்டுதான் தீர வேண்டும். அதன் பேரால் ஏற்பட்ட நூல்கள், சாஸ்திரங்கள் என்பவைகளை எல்லாம் நம்பிதான் ஆக வேண்டும். அதில் ஒரு வி­யத்தைக் கூட நழுவ விடக் கூடாது. மாற்றவும்கூடாது. புதிய சவுகரியத்திற்குத் தகுந்த படி எதையும் சேர்த்துக் கொள்ளவும் கூடாது என்பது போன்ற நீதியையும் நிபந்தனைகளையும் கட்டளைகளையும் கொண்டதுதான் மதம் என்று சொல்லப்படுமென்பதையும் நான் என்னைப் பொறுத்தவரை சிறிதும் ஒப்புக் கொள்ளாதவன் என்பதோடு அப்படிப்பட்ட மதம் மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும் சுதந்திரத்திற்கும் முற்போக்கிற்கும் சுயமரியாதைக்கும் விரோதமானது என்று சொல்லுவதோடு கூட மனித சமூக நன்மையை உத்தேசித்து அவை அழிக்கப்பட வேண்டியது அவசியமென்றும் கருதுகிறேன்’ என்று கூறிய பெரியார் இஸ்லாம் மதத்தை மட்டும் ஒரு கட்டத்தில் ஆதரிக்கிறார்.
‘இஸ்லாம் மக்களிடத்தில் தங்களுக்குள் சமத்துவம், சகோதரத்துவம், ஒற்றுமை, அன்பு முதலிய குணங்கள் இருக்கின்றன. இஸ்லாம் மதத்தில் ஜாதி உயர்வு தாழ்வு இல்லை. அவர்களுக்குள் தீண்டாதவன் இல்லை. கிட்ட இருந்த சாப்பிடக் கூடாதவன் இல்லை. அவர்களது தெருவில் நடக்கக் கூடாத மனிதன் -குளத்தில் இறங்கக்கூடாத மனிதன் -கோவிலுக்குள் புகக் கூடாத மனிதன் இல்லை’ என்றெல்லாம் கூறிய பெரியார், ‘இதை யோக்கியமான இந்துக்கள் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்’ என்றும் கூறுகிறார்.
‘மனித நேயம் இஸ்லாம் மதத்தில் கடைபிடிக்கப்படுகிறது என்று கூறிய பெரியார், இஸ்லாம் மார்க்கக் கடவுளுக்கு ரூபம் கற்பித்து வணங்குவதில்லை. அதற்குப் பெண்டு பிள்ளை, வைப்பாட்டி கற்பிப்பதுமில்லை. அதற்குப பூஜை நைவேத்தியம் , உற்சவம், நகை, துணிமணி முதலியவற்றிற்கு கோடிக்கணக்கான பணங்களைச் செலவு செய்வதில்லை’ என்றெல்லாம் கூறுகிறார்.

‘ஆதிதிராவிடர்களை நான் இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொன்னதற்காக அநேகம் பேர் என் மீது கோபித்துக் கொண்டார்கள். மோட்சம் அடைவதற்காகவென்று நான் ஆதிதிராவிடர்களை இஸ்லாம் கொள்கைகளைத் தழுவுங்கள் என்று சொல்லவில்லை. ஆதி திராவிடர்களின் தீண்டாமையைப் போக்குவதற்கு சட்டம் செய்வது சத்தியாகிரகம் செய்வது முதலியவை போலவே இஸ்லாம் கொள்கையைத் தழுவுவது என்பதும் ஒரு வழி என்றே சொல்லுகிறேன்’ என்று இஸ்லாம் கொள்கையை ஆதரிப்பதற்கான காரணத்தை விளக்குகிறார்.

அடுத்து கூறுகிறார்,‘ உலகில் மதங்கள் அடியோடு ஒழிக்கப்படும் போது இஸ்லாம் மதமும் ஒழியும், தீண்டாமை ஒழிய வேண்டுமென்றால் தீண்டாதார் எனப்படுபவர்கள் இஸ்லாம் கொள்கையைத் தழுவ வேண்டியது ஒரு வழியேயாகும்’.

உடனே மற்றவர்கள் ஏன் கிறித்துவ மதத்தைத் தழுவக் கூடாது என்று கேட்பவர்களுக்கும் பெரியார், ‘கிறிஸ்து மதக் கொள்கைகள் புத்தகத்தில் எப்படியிருக்கின்றது என்பது பற்றி நான் சொல்ல வரவில்லை. பிரத்தியட்சத்தில்  பறக் கிறிஸ்துவன், பார்ப்பாரக் கிறிஸ்துவன் , வேளாளக் கிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், கைக்கோளக கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்பதாக தமிழ்நாடு முழுவதும் இருப்பதைப் பார்த்து வருகின்றேன்’ என்று விடையளிக்கிறார்.

இவ்வளவையும் சொன்ன பெரியார் அடுத்துக் கூறுகிறார், ‘நான் இஸ்லாம் சமூகக் கொள்கைகள் முழுவதையும் ஒப்புக் கொண்டதாகவோ அவைகள் எல்லாம் சுயமரியாதைக் கொள்கைகள் என்று சொல்லுவதாகவோ யாரும் தீர்மானித்து விடாதீர்கள். சமாது வணக்கம், பூசை, நைவேத்தியம் முதலியவைகள் இஸ்லாம் சமூகத்திலும் இருக்கின்றன. இஸ்லாம் சமூகத்திலும் அல்லாசாமி பண்டிகை நடக்கின்றது. மற்றும் நாகூர் முதலிய ஸ்தல விஷேங்களும் சந்தனக் கூடு, தீமிதி முதலிய உற்சவங்களும் நடைபெறுகின்றன’ என்றெல்லாம் இஸ்லாம் சமூகத்தில் உள்ள குறைகளையும் பட்டியலிடுகிறார் பெரியார்.

இவைகள் ஒழிக்கப்பட்ட பின்புதான் எந்தச் சமூகமும் தங்களிடம் மூடக் கொள்கைகள் இல்லை என்று பெருமை பேசிக்கொள்ள முடியும் என்றும் கூறுகிறார் பெரியார் (பெரியார் களஞ்சியம் - தொகுதி 4 - பக்கம் 11-14)
இது வரை இஸ்லாம் மதம் தீண்டாமையை நீக்குகிறது என்று கூறிய பெரியார், அடுத்து தமிழ் மக்களுக்கு இஸ்லாம் மதமே பொருத்தமானது என்றும் கூறுகிறார்,

‘முகமது நபி மக்கள் யாவரையும் எல்லாத் துறையிலும் சமம் என்றும் சகோதரர்கள் என்றும் எப்படி கருதுகிறாரோ அப்படியே தான் பழந்தமிழ் மக்களும் கருதியிருப்பதாய பண்டிதர்கள் சொல்லுகின்றனர். மண வி­யத்தில் ஆரிய மதக் கொடுமையில் 100- இல் ஒரு பங்கு கூட இஸ்லாம் மதத்தில் இருப்பதாய் சொல்ல முடியாது’  என்றெல்லாம் கூறிய பெரியார், ‘1500 வரு­த்திற்கு முன் சொன்னத எதுவோ அதுதான் இன்னமும் லட்சத்து அய்ம்பதினாயிரம் வரு­ம் பொறுத்தும் இருக்க வேண்டியதாகுமே ஒழிய அதில் ஒரு சிறு மாறுதல் கூட செய்ய முடியாது என்பதோடு செய்ய இடம் கொடுக்கப்படவும் மாட்டாது என்றும் சொல்லி வருகின்ற முரட்டுப் பிடிவாதமே மக்களை அதன் பெருமையை உணரமுடியாமல் செய்து விட்டது’  என்றும் இஸ்லாம் மதத்தை அலசுகிறார்.

இஸ்லாம் மதம் யாருக்கு ? என்பதற்கு பெரியார், ‘முகமதிய மதத்தில் பல கெடுதிகள் இருக்கலாம். கோஷா இருக்கலாம். கடவுள் இருக்கலாம். மூட நம்பிக்கை இருக்கலாம். மதச் சின்னம் , மதச் சடங்கு இருக்கலாம். சம தர்மமில்லாமலும் இருக்கலாம்? இதெல்லாம் யாருக்குக் கூடாது? சுயமரியாதைக்காரருக்குக் கூடாததாய் இருக்கலாம். பெண்ணுரிமை மாத்திரம் பேணுவோருக்கு முகமதிய மதம் வேண்டாததாய் இருக்கலாம்’ .
‘ஆனால் தீயர்கள், பறையர்கள், புலையர்கள், நாயாடிகள் என்று அழைக்கப்படுகின்ற -ஒதுக்கப்பட்டிருக்கின்ற, தாழ்த்தப்பட்டு, கொடுமைப்படுத்தப்பட்டு நாயிலும் மலத்திலும் புழுத்த வி­க் கிருமிகளிலும் கேவலமாக மதிக்கப்பட்டு வருகிற மக்களிடம் - தங்கள் மீது இருக்கும் தீண்டாமை மாத்திரம் ஒழிந்தால் போதும் என்று கருதிக் கொண்டிருக்கும் மக்களிடம் நமக்கு வேலை உண்டா இல்லையா என்று கேட்கின்றோம்’ என்று கூறுகிறார்.

சிலை வணக்கத்தைக் கண்டிப்பது மகமதிய மதமே என்றும் கூறும் பெரியார், முகமது நபிகள பற்றி பல கருத்துக்களை வரிசைப் படுத்துகிறார்,
‘முதலில் அவர் என்ன சொன்னார்? ஒரு கடவுள்தான் உண்டு. பல கடவுள்கள் இல்லை என்றார். நான் சொல்லுகிறேன், கடவுள் என்று ஆயிரக் கணக்கான கடவுள்களைக் கட்டியழுகிறவர்களை விட, நபி அவர்கள் எவ்வளவோ மேலானவர் என்பேன். முதலில் பல கடவுள்கள் என்பது பொய். ஒரு கடவுள் தான் உண்டு என்ற நிலைக்கு வரட்டும். மேற்கொண்டு அப்புறம் பார்க்கலாம்’ என்கிறார் பெரியார்.

முகமது நபி அவர்கள் சொன்னது, மனித சமூதாயத்தில் மக்களுக்குள் ஒருவருக்கொருவர் உயர்வு தாழ்வு, பேதாபேதம், வித்தியாசம் இல்லை. யாவரும் சமமான பிறவியே என்று சொன்னார். இதுவும் மிக முக்கியமானதாகும் என்று முகமது நபி கருத்துக்களை எடுத்துக் காட்டுகிறார் பெரியார்.

‘அடுத்தாற்போல் முகமது நபி அவர்கள் விக்கிரக ஆராதனையை அந்தக் காலத்திலேயே மிகவும் வன்மையாகக் கண்டித்திருக்கிறார். இது மிகவும் பாராட்டத்தக்க காரியமாகும் என்பதோடு இவை எல்லாம் நம் மக்கள் பின்பற்ற வேண்டிய ஒரு பெரிய படிப்பினை என்பேன்’ என்றும் பெரியார் கூறுகிறார்.

அடுத்து ஒன்றையும் பெரியார் கூறுகிறார், ‘அவர் சொன்னவற்றிலே இது மிகவும் முக்கியமாய் கவனத்தில் வைக்க வேண்டிய காரியமாகும். என்ன அவர் சொல்லுகிறார், நான் என்ன சொல்லியிருந்தாலும் அவற்றில் உனக்குச் சந்தேகமிருந்தால் நீ உன் பகுத்தறிவைக் கொண்டு ஆராய்ந்து பார் என்பதாகச் சொல்லியிருக்கிறார்’. இங்கு பெரியாரையும் முகமது நபி அவர்களையும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

இஸ்லாம் மதத்தைப் பற்றி சொன்ன பெரியார் இறுதியில் ,‘ மக்கள் சமுதாயத்துக்கு ஒரே கடவுள். மக்கள் சமுதாயம் ஒரே குலம். உருவ வழிபாட்டுக்கு மக்கள் ஆளாகக் கூடாது. நான் என்ன சொல்லியிருந்தாலும் அவைகளை உங்கள் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பாருங்கள்’ என்பதாக நபி அவர்கள் சொன்னதைத் தொகுத்துக் காட்டுகிறார் பெரியார். 

எனவே மக்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்காக ஆதரவு கரம் நீட்டுபவர் பெரியார்தான். மதத்தைக் கடந்து, இனத்தைக் கடந்து, சாதியைக் கடந்து நிமிர்ந்து நிற்கக் கூடிய ஒரு மாமனிதர் பெரியார்.

காலச்சுவடு இரவிக்குமாரின் புரட்டு

 காலச்சுவடு இரவிக்குமாரின் புரட்டு

நாளை விடியும் இதழில் தோழர் வ. மாரிமுத்து எழுதிய விமர்சனக் கட்டுரை

தோழர் இரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளாக தன் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள பார்ப்பனர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி ஆள் காட்டி அரசியலில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  அந்த வகையில்  தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட  மக்களின்  உயர்வுக்கும் மேன்மைக்குமாக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த  தொண்டு செய்த பழுத்த பழமாம் பெரியார் பற்றி அவதூறாகக் கட்டுரைகள்  எழுதி வருகிறார். அதுவும் பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதைச் செய்து வருகிறார். இவரின் இந்தத்திட்டமிட்ட அவதூறுகளை திரிபுவாதத்தை அவ்வப்போது நடுநிலையான சிந்தனையாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பெரியார் தொண்டர்களும் தக்கச்சான்று களுடனும் ஆதாரங்களுடனும் அம்பலப்படுத்தி வருகின்றனர்,

அக்கட்டுரைகளில் நூலாக வெளிவந்தவை:

1. தோழர் கோகுல் காந்திநாத் எழுதிய இரவிக்குமாரின் பொய்முகம்.

2. தோழர் புனித பாண்டியன்-வ.மா.ஓ எழுதிய பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு

3. பேரா. அ. மார்க்ஸ் , கவிதாசரண், வளர்மதி ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பெரியார் முஸ்லிம்களுக்கும் தலித்து களுக்கும் எதிரியா? என்ற தலைப்பில் தென்றல் வெளியீடாக வந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது தோழர் கவி அவர்கள் எழுதி வெளி வந்துள்ள காலச்சுவடு இரவிக்குமாரின் புரட்டு என்ற நூலும் முக்கியத்துவம் பெறுகிறது.மேற்கண்ட மூன்று நூல்களும் தோழர் இரவிக்குமாரின் அவதூறுகள் குற்றச்சாட்டுக்களுக்கு மட்டுமே சான்றுகளுடன் பதில் அளித்துள்ளது. ஆனால் தோழர் கவி அவர்கள் எழுதிய இந்நூல் இரவிக் குமாரின் அவதூறுகளுக்கு பதில் அளிப்பதோடு பெரியாரை மறுபரிசீலனை செய்பவர்கள் அம்பேத்கரையும் இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி.இராசாவையும் அயோத்தி தாசரையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறது.

பெரியார் உட்பட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் உலகில் யாரும் இல்லை. உண்மையான ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் நடுநிலையில் நின்று யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதற்கு முன் தோழர் இரவிக்குமாரின் அவதூறுகளை இந்நூல் எப்படி மறுக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1. நம்மில் கீழ்த்தர மக்கள் என்று தலித் மக்களைப் பற்றி பெரியார் கூறியதாக இரவிக்குமார் வைத்திருக்கும் அவதூறுக்கு, கீழ்த்தரம் என்பதற்கு கடைநிலை என்ற பொருளில் தான் பெரியார் அச்சொல்லைக் கையாளு கிறாரே தவிர, இரவிக்குமார் சொல்வது போல் அல்ல என்பதை பெரியாரின் சொற்பொழிவைக் கொண்டே நிரூபிக்கிறார் தோழர் கவி (பக்கம் 8- இல்).

2. எல்லோருக்கும் பொதுவான அம்பேத்கரை, அம்பேத்கர் வடநாட்டுக்காரர் என்று பெரியார் கூறுகிறார் என்ற இரவிக்குமாரின் அடுத்த அவதூறையும், இரவிக்குமார் சுட்டிக்காட்டும் அதே பெரியார் சொற்பொழிவில் நமது அம்பேத்கர் என்று பெரியார் பேசியதை எடுத்துக்காட்டி, அந்த அபத்தமான அவதூறையும் அடித்து நொறுக்கிவிடுகிறார் தோழர் கவி(பக்கம் 13 - இல்).

3. தீண்டாதாருக்கு தாமே இரட்சகன் என்ற தோற்றத்தைப் பெரியார் உருவாக்கினார் என்று இரவிக்குமார் வைத்த குற்றச்சாட்டில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்பதையும் ரட்சகன் என்ற சொல்லை எங்கிருந்த இரவிக்குமார் உருவினார் என்பதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது (பக்கம் 16 -இல்).

இது போல் இரவிக்குமாரின் பல அவதூறுகளையும், குற்றச்சாட்டு களையும் ஆதாரங்களுடன் அதுவும் பெரியார் சொற்பொழிவைக் கொண்டே மறுப்புத் தெரிவித்திருப்பது மிகச் சிறப்பான செயலாகும்.

4.அயோத்திதாசர் குறித்து  பெரியார் மவுனம் கடைப்பிடித்ததாக கூறும் இரவிக்குமாரின் குற்றச்சாட்டுக்கு, ஏற்கனவே அருமைத் தோழர் தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன் சான்றுகளுடன் மறுப்புத் தெரிவித்திருந்த செய்திகளை எடுத்துக்காட்டிவிட்டு,


‘தாத்தா என்று அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டவர் அயோத்திதாசர். எனவே அயோத்திதாசரின் அறிவைப் பற்றி இரட்டைமலை சீனிவாசனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஒரு பைசா தமிழன் என்று முதலிலும் பின்பு தமிழன் என்று பெயர் மாற்றியும்  பத்திரிக்கை நடத்திய விவரம் இரட்டைமலை சீனிவாசனுக்குத் தெரிந்திருக்கும் . ஆனால் தனது ஜீவசரித்திர வரலாற்றில் ஒரு இடத்தில் கூட அயோத்திதாசரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தலித் அரசியலில் முதல் ஜீவ சரித்திர வரலாற்று நூல் என்று சொல்லப்படுகின்ற அந்த நூலில் பெரியார் பெயரும் இல்லை. நீதிக்கட்சியுடனும் பெரியாருடனும் இணைந்து பணியாற்றியவர். பதவிகளைப் பெற்றவர் இரட்டைமலை சீனிவாசன். அயோத்திதாசர் குறித்தும் பெரியார் குறித்தும் இவருடைய மவுனம் எதேச்சையானது தானா என்று இரவிக்குமார் எழுத வேண்டாமா? .... பெரியாருடைய போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருந்த அம்பேத்கருக்கு, அயோத்திதாசரின் செயல்பாடுகள் அந்த அளவில்தான் இருந்ததா? இரவிக்குமார் இதையயல்லாம் விளக்க வேண்டாமா?’ (பக்கம் ‡20 இல்) என்ற நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது இந்நூல்.

இது குறித்து  நாம் முன்பு குறிப்பிட்டது போல நடுநிலையுடன் தக்கச் சான்றுகளுடன் இந்த ஆய்வையும் செய்ய வேண்டும் என்பதே நமது நிலை.

நூலின் பின் அட்டையில் பார்ப்பனரல்லாத பிற மக்களுக்காக  அம்பேத்கரும் மற்ற தலித் தலைவர்களும் ஒரு போராட்டமும் நடத்த வில்லையே ஏன்?

மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்படும் போது பெரியார் வேண்டியும் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களின் வகுப்புரிமைக்கு உரிய பாதுகாப்பு செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தோழர் கவி.

அனைத்து நிலைகளிலும் ஆதிக்கச்சக்திகளும், பார்ப்பனியமும், தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படியயல்லாம் அடக்கி ஒடுக்கியது என்பத பற்றி நாம் அறியாததல்ல, அத்தகைய தடைகளை எல்லாம் மீறி தனது உரிமைக்காகவும் நமது சமுதாய மேன்மைக்காகவும் தலித் தலைவர்கள் உழைத்திருக்கிறார்கள், பாடுபட்டிருக்கிறார்கள் என்பதே பெரிய காரியமாகும்.

தலித் தலைவர்கள் ஒரு சில கருத்து வேறுபாடுகளுடன் செயல் பட்டி ருந்தாலும் அவர்களின் உழைப்பை யாரும் மறுத்திட முடியாது. தனது உரிமைக்காவும் போராட இயலாத சூழலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஏன் போராடவில்லை என்ற கேள்வி தேவையில்லாதது.
அதேபோல் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்படும் போது பெரியார் வேண்டியும் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களின் வகுப்புக்கு உரிய பாதுகாப்பு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் நியாயமானது அல்ல.
 இவ்வியத்தில் பெரியாருக்கு சங்கடம் இருந்தது உண்மை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசியல் சட்ட ரீதியாக செய்ய முடிய வில்லையே என்று அம்பேத்கர் வருத்தப்பட்டிருக்கிறார் என்பதையும் பெரியார் தெரிவுபடுத்தியுள்ளார்.

1951 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசியல் சட்ட முதல் திருத்தம் நடைபெற்ற போது பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு நிலைக்க உதவி செய்துள்ளார் அம்பேத்கர். அப்போது நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டினால் தோழர் கவி அவர்களின் அய்யம் தீர்ந்து விடும்.
What Gandhi and Congress have done to the untouchables ?

தோழர் இரவிக்குமாரின் அவதூறுகளை மறுத்தது மட்டுமல்லாது, பெரியாரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பவர்களைப் பார்த்து சில நியாயமான கேள்விகளை எழுப்பும் இந்நூலை அனைவரும் -ஆகச்ட் 2006)
என்ற நூலில் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதை மிகவும் ஆணித்தரமாக புள்ளி விவரங்களோடு விளக்கி வற்புறுத்தியுள்ளார் (நூல் இடஒதுக்கீடு பற்றிய கேள்விக்கான பதில்கள் பக்கம் -30).