Wednesday, November 2, 2011
Wednesday, July 20, 2011
அம்மா
கடந்த ஆண்டு சூலை மாதம் 10 ஆம் நாளிலிருந்தே அம்மா உடல் நலக் குறைவாக இருந்தார்கள். கைப் பேசியில் பேசும் போது என்னம்மா குரல் ஒரு மாதிரியாக இருக்கிறதே! உடம்பு சரியில்லையா என்று கேட்பேன். அதெல்லாம் ஒன்னுமில்லையப்பா. கொஞ்சம் சொரம். இரண்டுமூன்று நாளா இருக்கு என்றார்கள். நாள் தோறும் காலையிலோ அல்லது பிற்பகலிலோ அம்மாவிடமோ தம்பியிடமோ அல்லது அண்ணனிடமோ பேசிவிடுவேன். 14 ஆம் நாள் பிற்பகல் பேசும் போது, தம்பி அம்மாவிடம் கைப்பேசியைக் கொடுத்தான். அம்மாவின் குரல் மெல்லியதாக இருந்தது. என்னம்மா உடம்பு சரியா வர மாட்டேங்குதா என்று கேட்டேன். ஆமாம்மா சரியா வர மாட்டேங்குது என்றார்கள். எப்போதுமே ஒன்னுமில்லையப்பா என்று சொல்கிறவர்கள் இப்படிச் சொல்லுகிறார்களே என்று நினைத்துகொண்டேன்.
டாக்டர்ட போங்கம்மா என்று சொன்னேன். நாளைக்கு பெரியண்ணனுக்கு லீவு. அன்னைக்கு போறம்பா என்று சொன்னார்கள் நான் பேசியது புதன் கிழமை. மீண்டும் அன்று மாலை பேசும் போது அம்மா தூங்குவதாக தம்பி சொன்னான். சரி சரி எழுப்பாதே என்று கூறி விட்டு , அம்மா எப்படி இருக்காங்க என்று கேட்டு விட்டு, அம்மாவை பாத்துக்க என்று சொல்லிவிட்டு கை பேசியை அணைத்து விட்டேன். மறு நாள் பேசும் போது அம்மா அன்றும் தூங்கி கொண்டிருக்கிறார்கள் என்று தம்பி சொன்னான். திடீரென்று இரு, இரு அம்மா எழுந்துட்டாங்க, பேசு பேசு என்றான். ஆனால் கைப்பேசியை அவர்கள் வாங்கும்போது மயக்கத்தில் தவற விட்டார். நான் தம்பியிடம் ஒன்னும் தொந்தரவு செய்யாதே என்று கூறி டாக்டர்கிட்ட அழைச்சுட்டு போ என்று கூறினேன்.
மறு நாள் மருத்துவமனைக்கு செல்வதாக இருந்ததால் தம்பிக்கு சூலை 17 ஆம் தேதி பணம் அனுப்பி வைத்தேன். நீ எவ்வளவு பணம் அனுப்பியிருக்க என்று அம்மா கேட்டார்கள். மூவாயிரம் அனுப்பியிருக்கான் என்று தம்பி சொன்னான். அம்மாவுக்கு கொஞ்சம் வருத்தமாம். இன்னும் நிறைய எதிர்ப்பார்த்திருப்பார்கள் போலும். நான் நினைத்தது சாதாரண மருத்துச் சிகிச்சைக்குத் தானே அழைத்துப் போகிறார்கள். அதுவும் நான் சிங்கப்பூரிலிருந்து பணம் அனுப்பினேன் என்றால் ஒரு மகிழ்ச்சி இருக்கும்.
குழந்தைகளும் அக்கறையாக இருக்கிறார்கள் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் அத்தொகையை அனுப்பினேன். அம்மாவுக்கு இந்த மாதிரியான வருத்தம் எப்போதும் ஏற்படக் கூடாது என்பதற்காக அவர்களுடைய பென்சன் பணத்திலிருந்து சிறு சிறு தொகையாக ரப்பர் பேன்டினால் கட்டி கட்டி ஒரு பெட்டியில் என் தம்பி போட்டு வைத்திருப்பதை அவ்வப்போது அம்மாவிடம் காட்டிக் கொண்டே யிருந்திருக்கிறான்.
அன்று மாலை மருத்துவர் நீலகண்டனிடம் காட்டிய போது மருந்து கொடுத்தவர் காலையில் கீழ வீதியில் உள்ள இரமேஷ் மருத்துவரிடம் காட்டி விட்டு அங்கேயே சேர்த்து விடுங்கள் என்று கூறியிருக்கிறார். மருத்துவரிடமிருந்து இரவு திரும்பும் போது அம்மா நன்றாகவே இருந்துள்ளார்கள். 15 நாட்களுக்கு முன் பெரிய அண்ணன் மகள் தேவியிடம் அவளுக்கென்று வாங்கி வைத்திருந்த நகையை அவளிடம் கொடுத்து இனிமே நீயே பத்திரமாக வைத்துக்கொள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்கள். மறு நாள் அதாவது சனிக்கிழமை காலை தேவி பள்ளிக்குச் செல்லும் போது வழக்கம் போல் நெற்றியில் திருநீறு வைக்கச் சொல்லி, கையில் திருநீற்று தட்டுடன் செல்ல அம்மா மயங்கிய படியே எழுந்திருக்க முயற்சி செய்து கையை அசைத்து வழியனுப்பி வைத்திருக்கிறார்கள். ஆயி நீங்க அப்படியே படுத்துக்கோங்க. சாயந்திரம் வந்து பாத்துக்கிறேன் என்று கூறி விட்டு தேவி பள்ளிக்குச் சென்று விட்டாள்.
மருத்துவர் இரமேசின் மருத்துவமனையில் சேர்த்து விட்டு மருத்துவர்க்காக காத்திருந்தார் என் பெரிய அண்ணன். சிறிது நேரம் கழித்து வந்த மருத்துவர் ஓர் ஊசியை செலுத்திவிட்டு சென்றுவிட்டார். 11.30 மணி அளவில் போய் சாப்பிட்டு வாப்பா என்று பெரிய அண்ணனிடம் கூறியுள்ளார். அதுதான் கடைசியாக அம்மா பேசியது என்று பெரிய அண்ணன் சொன்னார். சின்ன அண்ணனும் தஞ்சாவூரிலிருந்து தனது இரண்டாவது மகள் சிவரஞ்சனியை அழைத்துக் கொண்டு இயல்பாக வந்தார். பிற்பகல் இரண்டுமணியளவில் அம்மா நினைவிழந்து விட்டார்கள். அவரைக் கண்ட மருத்துவர் அதிர்ச்சியடைந்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் கூறி பரிந்துரைக் கடிதமும் கொடுத்தார். அங்கிருந்து வீட்டிற்கு ஆட்டோவில் பெரிய அண்ணனும் சின்ன அண்ணனும் அழைத்து வரும் போது அம்மா அவர்கள் கட்டுப்பாட்டிற்குள் அடங்காமல் முரண்டு பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
அக்கா அம்மாவின் வாயில் கையை விட்டு எதையோ எடுத்துக் கொண்டே யிருந்ததை பள்ளியிலிருந்து அண்ணன் மகள் தேவி பார்த்திருக்கிறாள். காலையில் ஆயியை (என் அம்மாவை) நன்றாகப் பார்த்தவள், பிற்பகலில் நடப்பவற்றவைக் கண்டு அதிர்ச்சியடைந்தாள். தஞ்சாவூரிலிருந்து சின்ன அண்ணன் மகள் சிவரஞ்சனி வருவதால் மகிழ்ச்சியடைந்திருந்த தேவி அதன் காரணமாக பள்ளியிலிருந்து வந்தவளுக்கு இந்நிகழ்வு பெருத்த துன்பத்தை ஏற்படுத்தி விட்டது.
அரை மணி நேரத்திற்குள்ளாக டாட்டா சுமோ அத்தான் தம்பி இராஜா மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வீட்டிற்கு அம்மாவை அழைத்து போக வந்தது. அம்மா, அக்கா, அண்ணன்கள் என்று எல்லோரும் புறப்பட்டுக் கொண்டிருக்க வந்து சேர்ந்தான் கடைசி தம்பி காரல் மார்க்ஸ். அங்கு நடப்பவற்றை கண்டு அதிர்ச்சியடைந்த அவன், தானும் அந்த சுமோவில் ஏறிக் கொண்டான். சுந்தரும் ஏறிக்கொண்டான்.
கடலூரில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு சேர்த்தார்கள். அம்மாவுக்கு நினைவு திரும்பவில்லை. கையை காலை ஆட்டிய படியும் நீட்டியபடியும் இருந்தார்கள். கையை அக்காவும் காலை அண்ணன் சுப்பையாவும் அழுத்திப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.
சிதம்பரம் மருத்துவமனையிலிருந்து கடலூர் மருத்துவமனைக்கு செல்லும் போது நான் பெரியண்ணனிடம் பேசிய போது, கடலூருக்கு போய் கொண்டிருக்கிறோம். அம்மா கை காலை ஆட்டிய படி முரண்டு பிடிக்கிறார்கள். சின்ன அண்ணன்தான் அம்மாவை அழுத்தி பிடித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறினார். அப்போது சிங்கப்பூரில் மணி மாலை 4.30. சனிக்கிழமை. உடனே மாலை ஐந்தரை மணிக்கு அய்யாவிடம் தொடர்பு கொண்டு நிலையை எடுத்துக் கூறி ஊருக்குச் செல்ல வேண்டும் என்று கூறினேன். அனுமதி வழங்கினார். உடனே என் சகலையின் உறவினர் திரு.இராஜாவிடம் கூறி ஒருவழி சீட்டு டைகரில் சென்னைக்கு பதிவு செய்து தருமாறும் பணம் வந்து தருகிறேன் என்றும் கூறினேன். அவருடம் உடனடியாக ஞாயிற்றுக் கிழமை இரவு புறப்படும் வகையில் பதிவு செய்து அனுப்பினார். சீட்டு பதிவு செய்யப்பட்டது உறுதியானவுடன் ஞாயிற்றுக் கிழமை காலை 6.30 மணிக்கு அலுவலகம் சென்று , இருந்த ஜி.எஸ்.டி. படிவம் தாக்கல் செய்வதற்கு நிலுவையில் இருந்த வேலையை காலை 10.30 மணி வரை செய்து விட்டு திரும்பும் நேரத்தில் அய்யா மு.தங்கராசனாரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.
அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லையயன்று ஊருக்குச் செல்கின்றீர்களே ஏதாவது பணம் வேண்டுமா என்று கேட்டார். எண்ணோட்டத்தில் துன்ப நிலையில் இருந்த எனக்கு ஆசிரியர் தங்கராசனாரின் செயல் மன நிறைவைத் தந்தது. இருந்தால் கொடுங்கள் என்றேன். மாலை எத்தனை மணிக்கு செல்கின்றீர்கள் என்று கேட்டார். ஆறு மணிக்கு செல்கிறேன் என்று சொன்னேன். மாலை ஆறுமணிக்கு சரியாக வந்து ஐந்து நூறு வெள்ளித் தாள்களை கொண்டு வந்து கொடுத்தார். எனக்கு மாற்றுவதற்குக் கூட மனம் வரவில்லை.
இரவு சென்னையில் இறங்கியவுடன் தொலைபேசியில் அண்ணன் சுப்பையாவிடம் தொடர்பு கொண்டு கோயம்பேடு போய்கொண்டிருக்கிறேன் என்ற செய்தியை சொல்லிவிட்டு அம்மாவின் உடல்நிலை பற்றிக் கேட்ட போது அப்படியேதான் இருக்கிறது. முன்னேற்றம் இல்லை என்று கூறினான். நான் கோயம்பேட்டிலிருந்து புதுச்சேரிக்குப் புறப்பட்டு, புதுச்சேரி யிலிருந்து விடியற்காலை 4.00 மணி யளவில் கடலூரில் போகின்ற வழியி லேயே இறங்கி கிருஷ்னா மருத்துவ மனை நோக்கி அம்மாவை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே நடந்து கொண்டிருந்தேன்.
எதிரே அண்ணன் சுப்பையா வந்தான். என்னை அழைத்துக் கொண்டு போய் அம்மா படுத்திருப்பதைக் காட்டினான். அந்த காட்சியை கண்டதும் அதிர்ந்து போனேன். மூக்கில் சுவாசத்திற்கான குழாய் இணைக்கப்பட்டிருந்தது. குளுகோஸ் பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. தலைமாட்டில் அக்கா இருந்தார். ஒரு கையை பிடித்து அழுத்திக் கொண்டிருந்தான் சுந்தர். மாக்ஸ் இருந்தான். அம்மாவின் காதில் சென்று அம்மா விநாயகம் வந்திருக்கிறேன். சிங்கப்பூரிலிருந்து விநாயகம் வந்திருக்கிறேன் என்று கூறினேன். ஒரு அதிர்வும் தென்படவில்லை. கையைப் படித்து பார்த்தேன். கன்னத்தை தடவி பார்த்தேன். என்னை அறியாமல் என் கண்ணில் கண்ணீர் வர ஆரம்பித்தது. தொண்டையை அடைக்கும் என்பார்கள். அன்றுதான் உணர்ந்தேன். பிறகு அப்படியே வெளியே வந்தேன்.
Monday, June 13, 2011
தாய்த்தமிழகப் பயணம் 2011 மே மாதம்
படங்களாக ஒரு வரலாற்றுப் பதிவு
எதிர்பாராத விதமாக தனது ஒரே மகளை இழந்த திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களுக்கு ஆறுதல் கூற என் மகன் பிரபாகரனுடன் சென்றேன். (14.05.2011) காலை 10 மணி அளவில்.
24.05.1967 இல் தந்தை பெரியார் பிரகடனப்படுத்திய கடவுள் மறுப்பு முழக்கங்களை வெளியி்ட்ட திருவாருர் விடயபுரம் நோக்கி நண்பர் அய்யா சக்தி செல்வகணபதி அவர்களுடன் 15.05.2011 காலை 7 மணிக்கு அவருடைய ஈருளையில் பயணம். திருமதிகுன்னம் என்ற ஊரில் உள்ள பெரியார் சிலை இது.
தந்தை பெரியார் கடவுள் மறுப்பு முழக்கங்களை வெளியிட்ட இடத்திற்கு அருகில் கல்வெட்டு
விடயபுரம் செல்வதற்கு நுழைவாயிலாக உள்ள கண்கொடுத்தவணிதம் என்ற சிற்றூரில் உள்ள பெரியார் சிலை.
அய்யா ஏ.ஜி.கே. அவர்களுடன் 17.05.2011 அன்று மாலை சந்திப்பு.
உடன் தோழர் ராசன், என் மகன் பிரபாகரன்
அமைதியாக இருக்கும் ஏ.ஜி.கே.
சிங்கப்பூர் தமிழவேள் நேரடியான வாரிசு அவருக்கு தம்பி முறையாக வரும் தம்பா என்கின்ற ஜானகிராமன்(18.05.2011 மாலை 6.30 மணி).
தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் மூன்றாவது மகன் இராஜாராம் அவர்களுடன்.
தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் மூன்றாவது மகன் இராஜாராம் மற்றும் அவரது துணைவியார்(19.05.2011 காலை 10.30 மணி).
தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் இரண்டாவது மகன் ஜனார்த்தனன் மற்றும் அவரது துணைவியார் (19.05.2011 காலை 11.00 மணி).
தமிழவேள் சாரங்கபாணியின் அக்கா அவர்களின் இரண்டாவது மகன் ஜனார்த்தனன் மற்றும் அவரது துணைவியார்.
தமிழவேள் சாரங்கபாணி அவர்கள் திருவாருரில் படித்த பள்ளியின் இன்றைய தோற்றம்.(19.05.2011 பிற்பகல் 12.30 மணி)
தமிழவேள் பிறந்த வீடு - திருவாரூர் நாகை சாலை (20.05.2011) Thursday, March 31, 2011
பெரியாரின் புறநானூறு
பெரியாரின் புறநானூறு
பேரறிஞர் அண்ணாவின் ‘தம்பிக்குக் கடிதங்கள்’ (11 ஆம் தொகுதி முதல் 20 ஆம் தொகுதி வரை), இராஜ்யசபை பேச்சு, ஆரிய மாயை, கம்பரசம் போன்ற நூல்களைப் படித்துக் கொண்டிருந்த நேரத்தில் பெரியாரின் பக்கம் என் பார்வை திரும்பத் தொடங்கியது. ஏற்கனவே என் தந்தையார் எங்களுக்கு ஊட்டி வளர்த்த பார்ப்பன எதிர்ப்பு, என் குருதியில் ஓடிக்கொண்டிருந்ததால் எளிதாகப் பெரியாரைப் பற்றிக் கொள்ள முடிந்தது
1996 ஆம் ஆண்டு தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தோல்வி கண்ட நேரம். நான் ‘சங்கொலி’ இதழை விரும்பிப் படிப்பதுண்டு. சென்னையில் நான் பணியாற்றிய காலத்தில், தங்குவதற்கு தன் வீட்டிலேயே இடம் கொடுத்து எனக்கு உதவி புரிந்த நண்பர் சங்கொலி முகவர் திரு. சுப்பாரவ் அவர்களுடன் புதன் கிழமை தோறும் ம.தி.மு.க அலுவலகமான தாயகம் செல்வேன். அப்போதைய சங்கொலி பொறுப்பாசிரியர் திரு. க. திருநாவுக்கரசு அவர்களுடன் அவ்வப்போது உரையாடிவிட்டு வருவேன்.
சங்கொலியில் ‘திராவிட இயக்க 80 ஆண்டுகள்’ என்ற தலைப்பில் வைகோ எழுதிய தொடர் வெளிவந்து கொண்டிருந்தது. கலைஞர் எழுதிய திருக்குறள் உரைக்கு மறுப்புத் தெரிவித்து, திரு. க. திருநாவுக்கரசு அவர்கள், ‘திருக்குறளும் திராவிடர் இயக்கமும்’ என்ற தொடரை எழுதிக் கொண்டிருந்தார்.சென்னைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற ‘திராவிடர் இயக்க ஏடுகள்’ கருத்தரங்கு பற்றிய செய்திகள் சங்கொலியில் வெளிவந்தன.
இவற்றையயல்லாம் படித்து, திராவிடர் இயக்க வரலாற்றை உள்வாங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.வி.இராசதுரை மற்றும் வ.கீதா எழுதிய ‘பெரியாரும் சமதர்மும்’ என்ற நூலும் ‘பெரியார் :ஆகஸ்ட் 15’ என்ற நூலும் என்னுள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சென்னையில் நடந்த ‘பெரியார் ஆகஸ்ட் 15’ நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அங்கு நடந்த பெரியார் ஆய்வரங்கு என்னை புதியதோர் பாதைக்கு இட்டுச்சென்றது.
ஆய்வரங்கில் ஏற்பட்ட எண்ணயோட்டத்தோடு நான் சென்னை அண்ணாசாலையில் நடந்து வந்தபோது ‘கவிதாசரண்’ என்ற இதழின் பழைய பதிப்பு ஒன்று கிடைத்தது. அதில் கோ.கேசவன் அவர்கள் பெரியார் பற்றிக் கூறிய அவதூறுகளுக்கு எஸ்.வி.இராசதுரை எழுதிய மறுப்புக் கட்டுரையைப் படித்தேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ சார்பாக ஒரு கருத்தரங்கு நடைபெற்றது. பெரியாரின் பன்முகத்தை அங்கு பல பேராசிரியர்கள், ஆய்வறிஞர்கள், பெரியாரின் வழித்தோன்றல்கள் பேசினர்.
ஆர்.எம் .வீரப்பன் தொடங்கி வைத்த விழாவில், நீதியரசர் மோகன், ‘பெரியாரின் சிந்தனைகளை’ 3000 பக்கங்களுக்கு மேல் தொகுத்து வெளியிட்ட அறிஞர் வே. ஆனைமுத்து ஆகியோர் பெரியார் பற்றி ஆய்வு சொற்பொழிவு நடத்த முதல் அமர்வு முடிவுற்றது. இரண்டாவது அமர்வில் பேரா. அய்யாசாமி தலைமையுரையாற்ற, ‘தன்மானம்’ என்ற தலைப்பில் அண்ணாநகர் தமிழ்ச் சங்கத்தலைவர் இராமலிங்கம் அவர்களும், ‘பெரியாரின் அரசியல் தத்துவம்’ பற்றி மாநிலக் கல்லூரி பேரா. முத்துச்சாமி அவர்களும் சொற்பொழிவாற்றினர். இத்துடன் இரண்டாம் அமர்வு முடிவுற்றது.
பிற்பகல் அமர்வுக்கு பெரியார் நூற்றாண்டு விழாக் குழுவில் ‘பெரியாரின் பொன்மொழிகள் மற்றும் கல்வெட்டு பொறித்தல்’ பொறுப்பைப் பெற்று, பெரும் பணியைச் செய்த பேரா. நன்னன் அவர்கள் தலைமையேற்க, பேராசிரியை சாரதா நம்பி ஆரூரான் அவர்கள் ‘மூடநம்பிக்கை’ என்ற தலைப்பிலும், மாநிலக் கல்லூரி பேராசிரியர் இளவரசு அவர்கள் ‘பெரியாரின் மொழிக்கொள்கை’ பற்றியும், மலையமான் அவர்கள் ‘பெண்ணியம்’ பற்றியும் திரு.குருநாதன் அவர்கள் ‘வள்ளுவம்’ என்ற தலைப்பிலும் சொற்பொழிவாற்றினர். இறுதியாக பேராசிரியர் நன்னன் பேச, இக்கருத்தரங்கு முடிவுற்றது.
இதன் பின் 1998 ஆம் ஆண்டு ஏப்பிரல் 27 முதல 29 வரை மீண்டும் ‘அண்ணா பொது வாழ்வியல் மையம்’ திராவிட இயக்கம் பற்றிய கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. பேரா. அன்பழகன் அவர்கள் திராவிடர் இயக்க முன்னோடிகள் பிட்டி.தியாகராயர், சி. நடேசனார் மற்றும டி.எம்.நாயர் ஆகியோர் பற்றியும் நீதிக் கட்சி பற்றியும் விரிவாக சொற்பொழிவாற்றினார். மிகவும் அரியக் கருத்துக்கள் அடங்கிய சொற்பொழிவு.
மறுநாள் நடைபெற்றக் கருத்தரங்கில் பேராசிரியர்கள் ஈ.சா.விசுவநாதன், சிவஞானம், கருப்பையா, சந்திரசேகரன், டாக்டர் பாலகிருட்டிணன் உள்ளிட்டோர் சொற்பொழிவாற்றினர். மாலையில் ‘தமிழ்வழிக் கல்வி’க் குறித்து மகாதேவன், ‘தமிழிசை வளர்ச்சி’ப் பற்றி சாம்பமூர்த்தி ஆகியோர் பேசினர். பேராசிரியை சக்குபாய் நெடுஞ்செழியன் அவர்களும் பேரா. மு.க. சுப்ரமணியன் அவர்களும் சொற்பொழிவாற்றினர்.
இந்த இரண்டு கருத்தரங்குகளும் பெரியாரைப் பற்றியும் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும் நான் அறிந்து கொள்ள, செம்மைப்படுத்திக் கொள்ள உறுதுணையாக இருந்தது.இவ்விரு கருத்தரங்குகளின் பேச்சுக்களை அப்போது நான் முடிந்த வரை குறிப்பெடுத்தேன்.
அத்துடன் திருவான்மியூரில் வசிக்கின்ற, திராவிடர் இயக்க ஆய்வாளரும், காமரசர் ஆட்சிக்காலத்தில் கல்வி இயக்குநராகவும் சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தராகவும் இருந்த திரு.நெ.து. சுந்தரவடிவேலு அவர்களுடன் ஏழரை ஆண்டுகாலம் உடனிருந்து அவருடைய வாழ்க்கை வரலாற்று நூலை எழுத துணைபுரிந்தவரும், குருவிக்கரம்பை வேலு அவர்களுக்கு ‘குத்தூசி குருசாமி’ என்ற நூல் எழுத துணை நின்றவரும், ‘தமிழிசை ஆதி மும்மூர்த்திகள்’ என்று அழைக்கப்படுவர்களில் ஒருவரான மாரிமுத்தா பிள்ளையின் ஏழாம் தலைமுறையைச் சார்ந்தவருமாகிய பேராசிரியர் தி.வ.மெய்கண்டார் அவர்களின் தொடர்பும் நட்பும் அவரது ‘இளந்தமிழன்’ இதழும் என்னை திராவிடர் இயக்கச் சிந்தனையில் முழுவதுமாக ஈடுபட வைத்தது.
இந்த பின்னணியில் பெரியாரைப் பற்றிய இன்னொரு கோணமும் இருப்பதை பலரும் வெளிப்படுத்த விரும்பாத நிலை, ‘ஈ,வே.இரா. சிந்தனைகள்’ என்ற தொகுப்பு நூலைப் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்ட போது தெரிந்தது. பெரியார் நடத்திய போராட்டங்கள், அதறகு அவர் மேற்கொண்ட வழிமுறைகள், அவருக்குக் கிடைத்த சிறை தண்டனைகள், வழக்குமன்றங்களில் அவர் தன்தரப்பு வாதங்களை மட்டும் பதிவு செய்துவிட்டு, எதிர்த்து வழக்காடாமை போன்றவை மக்களிடம் பரவலாக்கம் செய்யப்படாமை என்னுள் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அரசியல் சட்ட எரிப்புப் போர், காந்தி சிலை உடைப்பு போராட்டம், பிள்ளையார் சிலை உடைப்பு இவற்றைப் பற்றியயல்லாம் பெரியார் வெளியிட்டிருந்த ஆழமான கருத்துக்கள் என்னை வியக்கவைத்தது.
இந்த மக்கள் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்பதோடு மட்டுமல்லாமல் அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடத்திய இத்தகைய போராட்டங்களையும் அவற்றின் வரலாற்றையும் மறைக்கின்ற இந்நிலையில், பெரியார் பட்டறை இத்தொகுப்பு நூலை வெளியிடுவதில் பெருமைப்படுகிறது.
அன்புடன்
கவி
.

Tuesday, March 15, 2011
பழங்காலக் கல்வி முறை-6
பழங்காலக் கல்வி முறை-6
கோயில் கட்டும் கலையில் உலகிலேயே மிகவும் தேர்ச்சிபெற்றவர்கள் தமிழர்கள் என்றும் , இந்தியாவிலேயே நிகரற்ற பெருமை வாய்ந்த கோயில் தஞ்சை பெரிய கோவில் என்றும் ஆங்கிலக் கலைக் களஞ்சியம் என்ற தொகுப்பு நூலில் காணப்படுவது காய்தல் உவத்தல் இன்றி வெளியிடப் பெற்றிருக்கும் கருத்தே ஆகும் என்று காலஞ்சென்ற அறிஞர் பி.ஸ்ரீ. கூறுவார்.
அரசர்களின் அரண்மனையைத்தான் கோயில் என்ற சொல் ஆதியில் குறித்திருக்க வேண்டும். பின்பு இது தெய்வ வழிப்பாட்டிற்குரிய இடங்களைக் குறிக்கலாயிற்று. சிற்ப நூல் வல்லுநர் கோயில்களையம் மண்டபங்களையும் மாட மாளிகைகளையும் உயர்ந்த மாடங்களல் அடுக்கு வீடுகளையும் நில முற்றங்களையும் தங்கள் கலைத்திறன் தோன்ற அமைத்தர் என்று நெடுநெல்வாடை தெரிவிக்கின்றது. சிறந்த அறிஞர்களான ஓவிய மணிகள் மதுரையில் இருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது. (பழந்தமிழர் கட்டடக்கலையும் நகரமைப்பும், நா. பார்த்தசாரதி).
வாஸ்து சாஸ்திரம் பற்றி தமிழகத்தின் மிகச் சிறந்த சிற்பக் கலைஞர்களில் ஒருவரான திரு. வை. கணபதி ஸ்தபதி அவர்கள் தினமணி பொங்கல் மலர் 98 - இக்கு அளித்த பேட்டியிலிருந்து..
கேள்வி: சிற்பக் கலை, கட்டிடக் கலைக்க அடிப்படையான வாஸ்து சாஸ்திரம் சம்ஸ்கிருதத்திலேதானே இருக்கிறது?
விடை:அங்குதான் தவறு செய்கிறீர்கள். அவை சம்ஸ்கிருத லிபியில் எழுதப்பட்டவையே தவிர, சம்ஸ்கிருதம் அல்ல. அந்தச் சூத்திரங்களை சொன்னால் சம்ஸ்கிருதம் படித்தவர் அதைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுவார். நான் சம்ஸ்கிரும் படித்தவன். நான் சொல்கி¼ன் அது சம்ஸ்கிருதம் அல்ல. இங்குள்ள கோயில்கள் ஏன் வடநாட்டில் இல்லை. இங்குள்ள வீகளின் அமைப்புகள் ஏன் வட இந்தியாவில் இல்லை? வட நாட்டவர் இது நம்முடையது இல்லை என்று ஒதுக்கி விட்டனர். நம்மவர்களும் உண்மை புரியாமல் ஒதுங்கி விட்டனர். வாஸ்து சாஸ்திரம் நம்முடைய சாஸ்திரம்.
சித்த மருத்துவமும் ஜோதிடமும் நம்முடைய தமிழ்ச்சித்தர்களுடன் ஒன்றுக்கொன்று பிணைந்து காணப்படுவன. தமிழ்ச்சித்தர்கள் என்றாலே நாடி ஜோதிடம், சித்த மருத்துவம், மூலிகைகைள் மற்றும் ஐந்திரத்தை (பஞ்சாங்கத்தை) நான் மீன் கோள் மீனைப் பார்த்து பருவங்களையும் காற்றையும் மழையையும் கனித்துச் சொல்லும் வழக்கமும் நமது பண்டைய தமிழ் மரபாகும்.
முடிவுரை:
பார்ப்பானுக்கு மூத்தப் பறையன், கேட்பாரின்றி கீழ்ச்சாதியானான் என்ற பழமொழிப்படி வள்ளுவம் என்ற சாதியினர் மேற் கொண்ட பூசாரியத்தை தம் வயமாக்கிக் கொண்ட பின்னர், தவ வாழ்க்கையை மேற்கொண்டிருந்த அந்தணர் என்னும் நல்ல பட்டத்தையும் போலியாக சூட்டிக் கொண்டனர் ஆரியப் பார்ப்பனர்கள்.
வள்ளுவக் கணியர்கள் வடித்துத் தந்த வானியல் ‡ கணிய உருவகங்களான புராணக் கட்டுக்கதைகளை சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவற்றிற்கு வழிபாட்டு வடிவம் தந்து சடங்குகளை ஆக்கினர்.
மதச் சண்டைகளுக்கும் சாதி வேற்றுமைக் கலகங்களுக்கும் பல்குதற்கு ஒரு பெருங்கருவியாய் இருந்ததுவும் இருப்பதுவும் சமஸ்கிருத மொழியே யாகும் என்னம் சமஸ்கிருத மொழி நூல்கள் தொலை போகுமானால் இப்போராட்டங்களுந் தொலைந்து போகும்.
முற்றும்.
பழங்காலக் கல்வி முறை-5
பழங்காலக் கல்வி முறை - 5
அர்த்தசாஸ்திரம் என்னும் நூலைப் பற்றி பெரியார் அவர்கள், “உதாரணமாகச் சாணக்கியன் எழுதிய அர்த்த சாஸ்திரத்தை நம்முடைய பொருளாதார ஒழுக்க நூல் என்ற நம்மால் எப்படி ஒத்துக் கொள்ள முடியாதோ அதே போல் இராமாயணம், பாரதம் போன்றவைகளை நம் ஒழுக்க நூல்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன் அரசனுக்கு வருமானம் பெருக வேண்டுமானால் அவன் கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் கோயில்களை வைத்து அதற்கு நிறைய திருவிழாக்களையும் நடத்தி அந்த திருவிழாக்களுக்கு மக்கள் அதிகமாக வருவதற்காக அழகிய பெண்களை நாட்டியமாடச் செய்ய வேண்டும் . அப்போது கோயில்களுக்கும் திருவிழாக்களுக்கும் வருகின்றவர்களிடமிருந்து நிறைய பொருட்கள் கிடைக்குமென்றும் கோயில்களில் அதிசயம் அற்புதம் நடப்பதாக ஜாலம் தந்திரம் செய்ய வேண்டும் என்றும் சொல்கின்றார்” என சம்மட்டி அடி கொடுக்கின்றார்.
சாணக்கியன் குறளைப் படித்து இதிலுள்ள நீதிகளையே கையாண்டிருக்கிறான். ஸ்ரீ அப்பா தீட்சிதர் என்பவர் குறள் அறத்துப்பாலைச் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து நீதி குசுமமாலா என்று பெயரிட்டுள்ளார். ஸ்ரீ கே.வி. சுப்ரமணிய சாஸ்திரியார் இதைப் பதிப்பித்துள்ளார். (திருக்குறளும் பெரியாரும் என்னும் நூலில்).
தமிழ் நூலைப் பார்ப்பனர்கள் சமஸ்கிருத மொழியில் மொழிமாற்றம் செய்தல்
ஒவ்வொரு துறையிலான அறிவாற்றலும் உன்னதமான நிலையை எட்டிப் படித்திருந்ததை அதன் ஒவ்வொரு ஆச்சர்யகரமான வேலைப்பாடுகளில் இருந்தும் நாம் அறியக் கிடைத்துள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக நாம் அரசியல் , பொருளாதாரம் ஆகியவற்றிற்கு கெளடில்யரின் அர்த்தசாஸ்திரத்தையும், ஜோதிடம் உள்ளடக்கிய அனைத்து பாடங்களையும் விளக்கும் கலை களஞ்சியமான வராக மிகிரரின் பிரஹத் சம்ஹிதா வையும் கட்டடக்கலைக்கான ஆராய்ச்சி நூலாக மனைசாரம், மயமாதா மற்றும் வாஸ்து சாஸ்திரத்தையும் ஓவியந்தீட்டும் சித்திர சூத்திராவையும் சிலை வடித்தல் மற்றும் சிலை செதுக்குதலையும் விளக்கம் ஆகமம் மற்றும் சில்ப சாஸ்திரத்தையும் நாட்டியத்திற்கான பரத முனிவரின் பரத நாட்டிய சாஸ்திரத்தையும் காமத்துப் பாலை விளக்கும் வாத்சாயனரின் காமசூத்திரத்தையும் வானவியலுக்க ஆரிய பட்டரின் ஆரிய பாடீயத்தையம் கணிதவியலுக்கு பிரம்மகுப்தரன் ஆய்வுகளையும், மாதவசாரயாவின் கணித சார சங்கிரயாவையும் காண முடிகிறது.- கட்டுரையாளர் கே.வி. இராமன்.
தேவநேயப் பாவாணர் அவர்கள் தெரிவித்துள்ள பின்வரும் செழுமையான கருத்துக்களை அறிந்தோமானால் கே.வி. இராமனின் வரிகளின் பின்புலம் விளங்கும்.
“முப்பால் என்பது திரிவர்க்கம் என்பதன் மொழி பெயர்ப்பென்றும் அறம், பொருள், இன்பம், வீடு என்பது தர்மார்த்த காம மோட்சம் என்பதன் மொழிப்பெயர்ப்பென்றும், திருக்குறளின் அறத்துப்பால் தரும சாத்திரத்தையும், பொருள் பால் அர்த்த சாஸ்திரத்தையும், காமத்துப் பால் காம சூத்திரத்தையும் தழுவினவையயன்றும் கூறுவது முதனூல் மறைப்பே. இனி பெரியபுராணம், உபமன்யு பக்த விலாசத்தையும், திருவிளையாடற்புராணம் ஆலாஸ்ய மான்மியத்தையும், சிவ ஞான போதம் என்னும் மெய்கண்டான் நூல் ரெளரவாகத்தின் ஈற்றிலுள்ள மொழிபெயர்ப்பையும் முதனூலாக் கொண்டவை என்று கூறுவது நெஞ்சழுத்தமும் துணிச்சலும் மிக்க முதனூல் மறைப்பென அறிக. மெய்கண்டான் நூலின் முதன்மையைப் பற்றி ஏற்கனவே மறைமலையடிகளும் கா. சுப்பிரமணியப்பிள்ளையும் வரைந்துள்ள குறிப்புகளைத் தழுவி ம. பாலசுப்பிரமணிய முதலியார் இயற்றியுள்ள சிவஞான போதம் முழு முதல் நூலே என்னும் தலை சிறந்த மறுப்பு நூலைப் பார்க்க”. (திருக்குறளும் திராவிடர் இயக்கமும் என்னும் நூலில்)
டாக்டர் ஆனந்த குமாராசாமி, யாழ்ப்பானத் தமிழர், கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவர். அவர் எழுதிய நூல்களுள் இந்திய இந்தோனேசிய கலைகளின் வரலாறு பற்றிய நூல் சிறந்தது. அதில் சிற்ப கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிட கலைகளில் தோன்றி இந்திய கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள் (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்கள் அல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல் தொழில் புராதன கடல்வழி வாணிகம் அனைத்தும் திராவிடர்களுடையதே என்று தனது ஆராய்ச்சியின் விளைவை எழுதியுள்ளார்.
புத்த கயாவில் உள்ள இந்திர சாந்தி உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றி அமைத்ததின் விளைவாகும். குப்தர் காலப் புத்தர் படிமங்களும் எலி பாண்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும் பல்லவர் காலத்து லிங்கங்களும் நடராஜர் மூர்த்திகளும் இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வ திரு உருவங்கள் உள்ளன. இவையாவும் இந்திய சிற்பக் கலையின் தத்துவங்களாகும். (தமிழர் வரலாறும் பண்பாடும் - நா. வானமாமலை).
(தொடரும்..)
பழங்காலக் கல்வி முறை-4
பழங்காலக் கல்வி முறை - 4
வேதங்கள், வைசியர்களுக்கும் சத்திரியர்களுக்கும் போதிக்கப்பட்டதால்தான் அறிஞர்களும் கட்டிடக் கலை நிபுணர்களம் வால்மீகி, திருவள்ளுவர் மற்றும் இளங்கோவடிகள் போன்றோர் கீழ்ச்சாதியிலிருந்தும் சமண மதத்திலிருந்தும் தோன்ற முடிந்தது என்றும் அங்கலாய்க்கிறார் கட்டுரையாளர் கே.வி. இராமன்.
இப்பொய்க் கதைகள் குறித்து டாக்டர் டி.எம். நாயகர் தமது புகழ்மிக்க ஸ்பர்டேங்க் சாலை பேருரையில்,
நீங்கெளெல்லாம் வெகுவாகப் புகழும் திருவள்ளுவர், அவ்வை, கபிலர் ஆகியோரின் வம்சாவளி என்வென்று எழுதி வைத்திருக்கிறான் தெரியுமா தமிழ்நாட்டு பார்ப்பான்? பார்ப்பான் ஒரவனுக்கு புலச்சி வயிற்றில் பிறந்தவர் வள்ளுவர் என்று! அதே போல் மைசூர் இராஜகுடும்பத்திற்கும் ஒரு கதை. விக்கிரமாதித்தன் தலைவிதியும் அப்படியே. வியாசன் யார்? பார்ப்பனப் பராச்சரனுககும் சத்தியாவதி எனும் மீனவப் பெண்ணுக்கும் கள்ளக்காதல் மூலம் பிறந்ததாக மகாபாரதத்தில் ஆதிபர்வம் கூறுகிறது.
இப்படியே பலப்பல கதைகள், பார்ப்பானுக்கும் சூத்திரச்சிக்கும் பிறந்தவர்களெல்லாம் காலாகாலத்தில் பெரிய மனுன்கள் ஆகியிருப்பதாகக் கதையைக் காட்டுகிறானே ஒழிய ஒரு சூத்திரனுக்கும் ஒரு பார்ப்பனத்திக்கும் பிறந்த பெரிய மனுன் கதை மருந்துக்காவது உண்டா, இந்தப் புராணங்களில்? (க. திருநாவுக்கரசு, திருக்குறளும் திராவிடர் இயக்கமும்).
திருவள்ளுவர் பற்றிய கீழ்ச்சாதிக் கதை 1926 இலும் நடைபெற்றது என்பதை க.திருநாவுக்கரசு அவர்கள் தமது திருக்குறளும் திராவிடர் இயக்கமும் என்ற நூலில் பின்வருமாறு எடுத்துரைக்கிறார்,
நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பற்றி அவர் ஆற்றிய சொற்பொழிவைப் புத்தகமாக 1929 இல் வெளியிட்டார். அப்புத்தகத்தின் தலைப்பும் திருவள்ளுவர். அப்புத்தகத்திலன் முதற் பதிப்பின் முன்னுரையில் மதுரைத் தமிழ்ச் சங்கம் , வாலிப கிருத்துவ சங்கம் என்பவற்றின் துணையாதரவில் மதுரை முக்கிய கிறுத்துவ கலாச்சாலையில் சில உபந்நியாசங்கள் நிகழ்த்தப் பெற்றன. அவற்றுள் ஒன்று, 1926 ஆம் வருடம் சனவரி மாதம் 25 ஆம் தேதி ரெவரண்டு எச்.ஏ. பாப்லி துரையவர்களின் தலைமைக் கீழ்க் கூடிய பெருங்கூட்டத்தில் திருவள்ளுவர் சரிதத்தைப் பற்றி நான உபந்நியாசம் செய்ய நேர்ந்தது. அங்கு அப்போது விசயம் செய்திருந்த சேது சமஸ்தான மகா பண்டிதரான உயர்திரு உ.வே.ரா. இராகவையங்காரவர்கள், சோமேசர் முதுமொழி வெண்பா ஒன்றைச் சுட்டி அதனால் வள்ளுவர் கீழ்க் குலத்தவர் என்னுங் கதை வலிபெற நிற்பதைக் குறிப்பிட்டார். என்னிடமிருந்து தக்க சமதானங் கொண்டு என்னை ஊக்கும் அவர்களின் நன்னோக்கத்துக்கு நான் பண்டிதவர்களுக்கு நன்றி கூறி, அக்கதை அப்பாட்டில் எவ்வித ஆதரவையும் பெறாமையும் அப்பாட்டு அக்கதையின் உண்மையை ஆராய்ந்து அங்கீகரிக்கும் நோக்குடைய தனறென்பதையும் எடுத்துக் காட்டினேன். பிறகு பண்டிதரவர்களும் பிறரும் வேறு ஆட்சேபம் ஒன்றுமின்றி என் கருத்துக்களை ஆமோதித்தார்கள்.
மேலும் பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற திருவள்ளுவரைப் பற்றிய உபந்நியாசங்களில் கலந்து கொண்ட மகாமகோபத்தியாய உயர்திரு வே. சாமிநாதையரவசர்கள் பண்டிதர் திரு. மு. இராகவையங்காரவர்கள், சென்னை சர்வக் கலாசாலைத் தமிழ் லெக்சிகன் பதிப்பாசிரியர் திரு. வையாபுரி பிள்ளையவர்கள் , மதுரை தமிழ்ச்சங்கக் காரியதரிசி திருவாளர் டி.சி. சீனிவாசையங்காரவர்கள் போன்ற தகவுடைப் பெரியோர் பலர் கேட்டு உடன்பாடு கூறி என்னை ஊக்கினார்கள். உபந்நியாச முடிவில் மகாமகோபத்தியாய ஐயரவர்கள் என்னை ஆசிர்வதித்து அன்போடு ஆதரவு கூறினார்கள் என்பதையும் நாவலர் சோமசுந்தர பாரதியார் எழுதியதையும் க.திருநாவுக்கரசு அவர்கள் மேற்கோள் காட்டியிருந்தார்.
நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என பாரதியாரால் போற்றப்பட்ட நூலின் ஆசிரியர் இளங்கோவடிகள் பற்றிய கதையும் பொய்யே.
செங்குட்டுவனும் இளங்கோவும் உடன்பிறந்தவர்களாக உள்ள நிலையில் மூத்தவனான செங்குட்டுவனக்கு அரசாளும் வாய்ப்பு இல்லை. இளையவனான இளங்கோவுக்கே உண்டு என ஒரு சோதிடன் கூறிய கூற்றைப் பொய்ப்பிக்கவே இளங்கோ துறவு பூண்டார் என்பது வரலாற்றுச் செய்தி. இளங்கோவடிகள் செங்குட்டுவனின் தம்பி என்பதை சிலப்பதிகாரமே எடுத்தியம்புவதாக மா. இராசமாணிக்கனார் தனது ஆய்வு நூலில் கூறியுள்ளார். பார்ப்பனக் குருதி இளங்கோவடிகளுக்கு ஓடியிருந்தால் இந்த சிந்த சிந்தனை வந்திருக்குமா?
சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக் காதையில், அரங்கின் அமைதி, கூத்தின் அமைதி, ஆடலாசிரியன் அமைதி, இசை ஆசிரியன் அமைதி, கவிஞன் அமைதி, குழலோன் அமைதி, யாழ் ஆசிரியன் அமைதி, கூத்தி ஆடும் இயல்பு என்பன போன்ற பல செய்திகள் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சேர நாட்டில் கூத்தச் சாக்கையன், சிவபெருமான் ஆடிய கொட்டிச் சேதம் என்னும் நடனத்தை நடித்தான் என்பதைக் கூறும் பகுதி இளங்கோவடிகளுக்கு நடனக் கலையின் மேல் உள்ள அறிவு புலனாகிறது. (மா. இராசமாணிக்கனார், ஓர் ஆய்வு நூல்). இந்த அறிவுக்கும் பார்ப்பனனுக்கும் என்ன தொடர்பு?
பூம்புகார் கடற்கரையில் கோவலனும் மாதவியும் பாடிய கானல் வரிப்பாடல்கள் இசைக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இளங்கோவடிகள் தனித்திருந்த மாதவி யாழ் வாசித்த திறந்தினை வேனிற்காதையில் கூறியுள்ளமை இக்கலையின் சிறப்பினை அறிவிக்கும் மற்றோர் சான்றாகும்.
மலைநாட்டில் கேட்கப்படும் ஓசைகள் மலைவாணன் செங்குட்டுவனுக்கு காணிக்கையாகக் கொண்டுவந்த மலை நாட்டுப் பொருள்கள் பற்றிக் கூறும் பகுதி, இளங்கோவடிகளாரது குறிஞ்சி நில அறிவைத் தெள்ளெனத் தெரிவிக்கிறது. செங்குட்டுவன் கனக விசயரோடு புரிந்த போரினை விவரிக்கும் பகுதி (காதை 26) ஆசிரியரது போர் அறிவை விவரிக்கிறது.
இந்த அறிவிக்கும் பார்ப்பனனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்க முடியுமா?
(தொடரும்..)
பழங்காலக் கல்வி முறை-3
பழங்காலக் கல்வி முறை - 3
சமஸ்கிருத கல்வி பாடசாலை
மேலும் லு.பு.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கி.பி. 1602 இல் இராஜராஜ சோழன் பிரம்மதேச நிலங்களுக்கு அருகில் நிலங்களை வைத்திருப்பவர்கள் பார்ப்பனர்களிடம் மட்டுமே விற்க வேண்டும் என் ஆணையிட்டதையும் வெளிப் படுத்துகிறார்.
இதே போன்று கல்லூரிகள் தமிழ்நாட்டிலுள்ள திருபுவனை, எண்ணாயிரம் மற்றும் திருமுக்கூடல் ஆகிய இடங்களில் வளர்ந்தோங்கின. இங்கு சமஸ்கிருதமும் உபநிடதங்களும் வேதங்களும் போதிக்கப்பட்டன. எந்த விதமான முதலீடும் செய்யாமல் பார்ப்பனர்கள் திராவிடர்களின் தாயகங்களில் ஆதிக்கம் பெற்றனர் என அவர்கள் அதிர்ச்சியில் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி விவரிக்கிறார். சமஸ்கிருத பண்டிட்களுக்க தங்க நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டதையும் K.A..நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தெரிவிக்கிறார்.
ஆனால் பாடசாலைகள் தொடங்கப்பட்ட விவரத்தையம் நடத்தப்பட்ட விவரத்தையும் கட்டுரையாளர் கே.வி.இராமன் பின்வருமாறு கூறுகிறார்,
அ) 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இவை சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. 1048 ஆம் ஆண்டில் திருபுவனை ஆவணத்தின் மூலம் பாண்டிச்சேரிக்கு அருகிலிருந்த திருபுவனையில் 19 ஆசிரியர்களும் 250 மாணவர்களும் பல்வேறு பாடங்களைப் பயின்று வந்தனர்.
ஆ) 1069 ஆம் ஆண்டின் மற்றொரு ஆவணத்தில் இதே போன்று செங்கல்பட்டு திருமுக்கூடலில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.
தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்துவதற்கு நூலோர் எவ்வாறு செய்திகளை திரித்தும் மறைத்தும் கூறுவர் என்பதை மேற்கண்டவைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எவ்வாறு எனில்,
மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் 9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பார்ப்பனர்கள் தங்களுக்கு தமிழ்மன்னர்களிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சமஸ்கிருதம், வேதம், உபநிடதங்களைப் பயிற்றுவிப்பதற்காக நிலங்களைத் தானமாகவும் நிதி உதவிகளை மானியங்கள் மூலமாகவும் பெறப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.
1012 மற்றும் 1044 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இராஜேந்திர சோழனாலும் 1018 மற்றும் 1054 ஆம் ஆண்டுகளுக்க இடையில் இராஜராஜ சோழனால் எண்ணாயிரம், திருபுவனம் ஆகிய இடங்களில் சமஸ்கிருத பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டன எனவும், இவற்றில் பயின்ற மாணவர்கள் முறையே 340 மற்றும் 260 மாணவர்கள். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்பதையும் லு.பு.நீலகண்ட சாஸ்திரி அவர்களின் நூலை மேற்கோள்காட்டி திரு. ஏ.எஸ். வேணு அவர்கள் வெளிப்படுத்துகிறார்.
ஆர். சத்தியநாத அய்யர் தனது நூலான Thamizhakam in 17th Century - இல், மதுரையில் இருநூறு மற்றும் முன்னூறு வகுப்புகளில் 10,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். பார்ப்பனர் மட்டுமே இப்பாடசாலையில் கல்வி கற்க விண்ணப்பிக்கவும் உரிமைப் பெற்றிருந்தனர். குறிப்பாக சூத்திரர்களும் வைசியர்களும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார்.
இந்த நூற்றாண்டில் கூட, வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவியில் குலக்கல்வியை மையமாக வைத்து ஆரம்பித்த பாட சாலையையும் அது தந்தை பெரியாரால் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இவையயல்லாம்தான் 1916 டிசம்பரில் தியாகராயர் அவர்களால் வெளியிடப்பட்ட பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைக்கு அடிப்படைகளாகும்.
(தொடரும்....)
பழங்காலக் கல்வி முறை-2
பழங்காலக் கல்வி முறை -2
தந்தை பெரியார்:
பார்ப்பனர்களின் தமிழின அழிவு நடவடிக்கைகளையும் தமிழ்ச் சமுதாய சீர்குலைவு நடவடிக்கைகளையும் அடையாளம் கண்டு அதை தமிழ்மக்களுக்கு விளக்க உணர்த்த, இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். தமிழ்ச்சமுதாய சீரழிவிற்குக் காரணமான மூடநம்பிக்கைகள், மதம், புரோகிதம், சாதி வேறுபாடுகளுக்கு ஆணிவேர்களாக பார்ப்பனர்கள் இருப்பதேயாகும் என தந்தை பெரியார் முடிவுக்க வந்ததால் தான் இயக்கம் கண்டார். இதை தந்தை பெரியார் அவர்களே நெருஞ்சிப்பேட்டை சாமியார் வருகை சம்பவம் குறித்து கூறும்போது தெளிவு படுத்துகிறார்.
வேதம் கடவுளால் இயற்றப்பட்டது எனவும் வேதம் பார்ப்பனர்களால் ஓதப்படுவதால் கடவுள் பார்ப்பனர்களுக்கக் கட்டுப்பட்டவர் எனவும் மனுதர்மத்தில் கூறப்படுகின்றவைகளை மன்னர்களுக்கு எடுத்துக் கூறி மன்னர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்பதை பின்வரும் மேற்கோளின் மூலம் அறியலாம்.
மனுஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்ற பழைய சட்ட நூல் கூறுவதாவது : மன்னர் காலையில் எழுந்ததும் முதலில் மூன்று வேதங்களில் பண்டிதர்களும் சட்டம் அறிந்தவர்களுமான பிராமணர்களை வணங்கி அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்க வேண்டும். வேதங்களைப் பயின்றவர்களும் தூய்மையானவர்களுமான முதிய பிராமணர்களை அவர் தினமும் வழிபட வேண்டும் (ஜோச் இடமுருகு, பிராமண மதம் தோற்றமும் வளர்ச்சியும், தமிழாக்கம்).
இதைக் காட்டி மன்னர்களிடமிருந்து பார்ப்பனர்கள் நிலங்கள் மற்றும் இதர சலுகைகளைப் பெற்றனர்.
வர்ணாசிரம முறைப்படி வேதபாடங்கள் முதல் மூன்று உயர் பிரிவினர்க்கு மட்டும் உரியதனாதாக இருந்தன என்ற கட்டுரையாளரின் கருத்துக்களெல்லாம் கற்பனையானவை. பொய்யானவை. இது குறித்து ஜோசப் இடமுருகு, பார்ப்பனர், சூத்திரர், வைசியர் ஆகிய மூன்று வருணங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வேதம் படிக்க உரிமை இருந்தாலும் அதைக் கற்றுக் கொடுக்கும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு . அதை மாற்ற முடியாத சட்டமென்றும் மநு கூறுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்.
கோதம தர்ம சூத்திரம் கூறுவதாவது:
அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரெளத்ர புஜதுப்யாம் பூரயேதபூரயேத்.
இதன் பொருள் : வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி, விட வேண்டும்.
பார்ப்பனர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் பெறுதல்:
மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு தானமளித்த முறை பற்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கட்சீவான் என்ற முனிவர் சிந்துவில் வசிக்கும் பாவயவ்யனின் புதல்வனான சுவநயனுக்கு என்னுடைய புத்திபலத்தோடு பற்பல ஸ்தோமங்களைக் கூறுகின்றேன். எவனாலும் ஜெபிக்கப்படாத அவன் புகழை விரும்பி ஆயிரம் யக்ஞங்களை நடத்த என்னைத் திறப்படுத்தினான். உத்தம ஈகையனான அரசன், நான் தானத்தை ஏற்க வேண்டுமென விரும்பினான். கட்சீவானான நான், அவனிடம் உடனே நூறு நிஷ்கங்களையும் நூறு வலிய குதிரைகளையும் நூறு காளைகளையும் பெற்றேன். அதனால் அவன் தன் அழியாப் புகழை சோதியிலே பரத்தினான். சுவநயனால் எனக்குக் கருப்புக் குதிரைகளால் இழுக்கப்படும் பத்து தேர்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பணிப்பெண்கள் ஏறினார்கள். அறுபதினாயிரம் பசுக்கள் அவற்றை தொடர்ந்தன. அவற்றை கட்சீவான் மாலையிலேயே தந்தையினிடம் அளித்தான். நான் பழைய தானத்தை உங்களுக்காகப் பெற்றேன். அவை பூட்டப்பட்ட எட்டும் மூன்றுமான தேர்கள், மிக்க மதிப்புள்ள பசுக்கள், நல்ல எண்ணமுள்ள பந்துக்களைப் போல் உறவினர்களான பஜ்ரர்கள் மிக்க அளித்துப் புகழைப் பெற விரும்புவார்களாக. (ரிக்வேதம் 1 : 126)
மேலும் சொத்துக்களை பார்ப்பனர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை ஏ.எஸ். வேணு அவர்கள் தன்னுடைய Anna and the cruade என்ற நூலில் , சோழர் காலத்தில் பார்ப்பனர் வருகைக்க முன் எல்லா நிலங்களம் மன்னனுக்கு சேர்ந்தவையாக இருந்தன. பின்னர், பார்ப்பனர்கள் மன்னர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர். அதற்க பிரம்ம தேச நிலங்கள் என்று பெயர். இவ்வாற பார்ப்பனர்களால் அனுபவிக்கப்படும் நிலங்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதை K.A. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் The cholas என்ற நூலில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இவ்வாறு பெற்ற நிலப்பகுதி அக்ரகாரம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.
பழங்காலக் கல்வி முறை-1
பழங்காலக் கல்வி முறை -1
முன்னுரை
கே.வி.இராமன் , இந்து 22.3.98 நாளிதழில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை 24.4.98 சங்கொலி வார இதழில் ஏ.எஸ். சக்கரவர்த்தி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு பழங்க கல்வி முறை என்ற தலைப்பில் திறனாய்வுப்போட்டிக்காக வெளியிடப்பட்டது. கட்டுரையை படித்தவுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள வரிகளை மேற்கோள் காட்டி இத்திறனாய்வுக் கட்டுரையை எழுத விழைகின்றேன்.
ஆரிய மாயையில் பேரறிஞர் அண்ணா அவர்கள்,
பல பொய்க் கூற்றுகள் சரித ஆராய்ச்சியின்மையால் முளைக்கின்றன. இக் காளாண்களைப் போக்க, பேராசிரியர் பாரதியார் கூறியது போன்ற ஆராய்ச்சியுரைகளை மேலும் சில தருகின்றேன், பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெரு மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் கைத் தொழில் வியாபாரங்களிலும் அரசியல் நாகரீகத்திலும் தலைசிறந்து விளங்கினார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. பல நாட்டுச் சரித்திரங்களில் இதற்கு ஆதாரங்களுண்டு. ஆயினும் இடைக்காலத்தில் ஆரியர், தமிழ் நாகரீகத்தைத் திருத்தி மாற்றி, தங்களுக்கே பெருமை உண்டாக்கத் தக்க விதமாக பல வித வேத புராணங்களை எழுதி தமிழர் சிறப்பை உருத்தெரியாமல் மாற்றி விட்டார்கள். மேலும் இது குறித்து அறிஞர் தோழர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எம்.ஏ. அவர்கள், இந்தியப் புராதன ஆராய்ச்சி வெளியீடு 42 பக்கத்தில் எழுதியுள்ள விவரம் வருமாறு:
தற்காலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலோருக்கு அரசியல் கொள்கைப்பற்றும் மதப் பற்றும் இருந்தே வந்திருக்கின்றன. உதாரணமாகச் சரித்திராசிரியர்களான ஹியுமையும் மக்காலேயையும் கவனித்தால் சரித்திர உண்மைகளைத் தொகுப்பதிலும் அவற்றை வருணித்துக் கூறுவதிலும் , ஹியும் தமது கன்சர்வேட்டிவ் கட்சி கொள்கைகளையும், மக்காலே தமது லிபரல் கட்சிக் கொள்கைகளையும் இலைமறைக் காய்போல் வெளியிட்டுருப்பதைக் காணலாம். புராதன சரித்திர விசயத்திலும் இப்படிதான்.
இதை பேரறிஞர் அண்ணா அவர்கள் மேற்கோள் காட்டுவதுடன் இப்படி சரித்திரத்தை பலவாறு மாறுபடுத்தி இருப்பதால் கூரிய புத்தியால் அனுதாபத்துடன் சுயநலப் பித்தலாட்டப் பிரச்சாரமாகிய தடித்த திரையைக் கிழித்து எறிந்து அதனுள் மறைந்திருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவுடன் கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.
இதை இத்திறனாய்வுக் கட்டுரைக்கு சரியான வழிகாட்டியாக அமைத்து அதன்வழி தொடர்கின்றேன்.
வேதம், மநுதர்மம் என்பது என்ன?
வேதம் என்பது குறித்து திராவிட இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும், சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதிய ஞான சூரியன் என்னும் நூலில் விளக்கமாகத் தரப்படுகிறது:
வேதத்தைப் புகுத்த வியாயச முனிவரின் சிஷ்யர்களுள் ஒரவரான வைசம்பாயனரிடம், யாக்ஞவல்கியர் வேதத்தை உணர்ந்தார். கடைசியாக ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு வைசம்பாயனர், இவரிடம் மனத்தாபம் கொண்டு தன்னிடம் கற்றறிந்த வேதங்களை திருப்பித் தரும்படி கேட்டார். யாக்ஞவல்கியரும் தமது தவ வலிமையால் தாம் கற்றுணர்ந்த வேதத்தைக் கக்கி விட்டார்.
உபநித்துகளில் ஆன்மாவைக் குறித்த வியங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும் பகுதியும் கவுதம புத்தன் பிறந்த பிறகே ஏற்பட்டவை.
இனி ஸ்மிருதம் என்ற இரண்டாவது பிரிவில் ஆறு அங்கங்கள், புராணங்கள், தரும சாஸ்திரங்கள் (மனு, யாக்ஞவல்கியர்) முதலியோரால் எழுதப் பெற்றவை) முதலிய நூல்களும் ஆகமங்களும் தரிசன கிரந்த (நியாய, வைசே´க சாங்கிய யோக வேதாந்த) ங்களும் அடங்கும். இவற்றுள் ஆறு அங்கங்களாவன : வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருமங்களைச் செய்யும் முறையை விவரித்து கூறுவனவும், வேத மொழியிலுள்ள சில தனிப்பட்ட சொற்களுக்கும் பொருள் உணர்த்துவனவுமாகும்.
இதே நூலில் 31 ஆம் பக்கத்தில், இந்து மதக் கொள்கைபடிக்கு ஏற்பட்டிருப்பது சாதித் தொழிலாலா? பிறப்பினாலா? என்பதைக் குறித்து ஆராய்வதே கடமை. இவ்வாறு ஆராய்ச்சி செய்யப் புகுங்கால் நினைவிற்கு வருகின்ற பிரமாண வாக்கியங்களாவன ;
சாதுர்வர்ண்யம் மாயருஸ்டம், குணகர்மவியாசக - பகவத் கீதை.
இதன் பொருள் : நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப்பட்டவை. அதுவும் குணங்களினாலும், கருமங்களினாலும் வேறுபாடன்றி மற்ற வேறு கிடையாது.
ஜன்மனா ஜாயதே சூத்ரா ; கர்மனா ஜாயதே த்விஜ ; (சங்கர விஜயம்). இதன் பொருள் : பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்களாகவும், கர்மங்களாகிய கர்ப்ப தானம், உப நயனம் முதலியவைகளால் மறுபிறப்பாளனாகவும் ஆகின்றான். ஆனால் இத்தகைய பிரமாண வாக்கியங்கள் (சிற்சில இடங்களில் காணுபவை) நம்மவர்களை ஏமாற்றும்படிக்குள்ள அநேக தந்திரங்களுள் இது ஒரு வகையாகும்.
-(தொடரும்...)
Tuesday, January 11, 2011
முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல்
முல்லைப் பெரியாறு அணைச் சிக்கல் - ஒரு பார்வை
மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர்களில் , மலைக் காடுகளிடையே ஓடும் பெரியாற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது. அவ்வாறு அணை மூலம் தேக்கிவைக்கப்பட்ட நீர் பின்னோக்கி திருப்பிவிடப்பட்டு நிலத்தடி குடைவுப் பாதை மூலம் தமிழகத்துக்கு திருப்பிவிடப்பட்டது. இதுவே பெரியாறு அணை யாகும்.
1798 ஆம் ஆண்டில் இராமநாதபுரம் அரசில் அமைச்சராக பணியாற்றிய முத்திருளப்பிப்பிள்ளை பெரியாற்று நீரைத் திருப்பி வைகையோடு இணைக்க முடியுமா என்பதை ஆராய ஒரு அறிஞர் குழுவை அமைத்தார். இத்திட்டம் சாத்தியமே என்று அவர்கள் அறிவித்தனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக இத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை. 10ஆண்டுகளுக்கு பிறகு 1808 இல் சர் ஜேம்ஸ் கால்டுவெல் இத்திட்டத்தை ஆராய்ந்தார். ஒரு வாய்க்கால் வெட்டி தண்ணீரை திருப்புவது அவரது திட்டமாக இருந்தது. இத்திட்டமும் கைவிடப்பட்டது. 1850 இல் சின்ன முல்லைப் பெரியாற்றில் சிறிய அணை கட்டும் பணிகள் தொடங்கின. இத்திட்டமும் கைவிடப்பட்டன.
1867 இல் மேஜர் ரைவீஸ் இத்திட்டத்தை ஆராய்ந்தார். 162 அடி உயரத்திற்கு ஒரு மண் அணையை பெரியாற்றில் உருவாக்கி மலையை வெட்டி வாய்க்கால் மூலம் தண்ணீர் மதுரை மாவட்டத்திற்கு திருப்பிவிடும் வகையில் இத்திட்டத்தை வடிவமைத்தார் . உரிய விபரங்கள் இல்லை எனக் கோரி இத்திட்டத்தை ஆராய லெப்டினன்ட் பென்னி குயிக்யை இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய உத்திரவு இட்டது பிரிட்டிஷ் அரசு. இருந்தும் இத்திட்டம் நிறைவேற்றப்பட வில்லை.
1884 இல் பென்னிக்குயிக்கின் பெரிய திட்டம் பிரிட்டிஷ் அரசால் ஏற்றுக் கொள்eப்பட்டது. பல கிளை ஆறுகள் சேரும் பெரியாறு இருக்கும் இடம் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கு சொந்தமானது எனத் தவறாகக் கருதப்பட்டது. எனவே பெரியாற்று நீரைத்திருப்பி விடுவது பற்றி பேச்சு வார்த்தையை பிரிட்டிஷ் அரசு திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் தொடங்கியது. அப்போது திருவிதாங்கூரில் ஆட்சியிலிருந்த விசாகத் திருநாள் மன்னர் இதற்கு இசைவு தர மறுத்தார். பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது மன்னர் மறைவுற்றார். அதைத் தொடர்ந்து திருவிதாங்கூர் திவான் வி.இராமய் யாங்காருக்கு ஒரு கடிதம் எழுதி முல்லை பெரியாறு அணை உடன்பாட்டில் கையயழுத்திட கூறினார் பிரிட்டிஷ் அரசப் பிரதிநிதி. இந்த குத்தகை உடன்பாடு 1886 ஆம் ஆண்டு அக்டோபர் 29 அன்று ஏற்பட்டது.
இந்த உடன் பாட்டில் உள்ள விபரம்
• அணையைக் கட்டுவதற்கும் தேக்கம் வெட்டுவதற்கும் பாசனப் பணிகளை மேற்கொள்ளுவதற்கும் 8000 ஏக்கர் நிலத்தை திருவிதாங்கூர் அரசு அளிக்க முன் வந்தது
• இவ்வுடன் பாடு 999 ஆண்டுகளுக்கு உரியது.
• குத்தகை தொகை ஆண்டுக்கு ரூபாய் நாற்பதாயிரம்.
• முல்லை பெரியாற்றில் நீர், 1740 மீட்டர் நீளக் குடைவுப் பாதை மூலமும்
பள்ளத்தாக்கின் இடையே 1770 மீட்டர் நீளம் அமைக்கப்பட்ட முதன்மைக் கால்வாய் மூலமும் கம்பம் பள்ளத் தாக்குக்குள் விடப்பட்டது.
கர்னல் ஜெ. பென்னி குயிக் பிரிட்டனில் பிறந்து பழைய சென்னை மகாணத்தில் பணியாற்றியவர். மதுரை தேனி சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் மனதில் இடம் பெற்றவர். கம்பம் பள்eத்தாக்கில் அவருக்கு ஒரு பெரிய சிலையையே மக்கள் வைத்துள்ளனர்.
பெரியாறு அணை கட்டும் பொறுப்பு பென்னிக்குயிக் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி வரும் பெரியாற்றில் அணை கட்டும் பணியை 1874 ஆம் ஆண்டு தொடங்கினார். 1890 இல் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் அணையின் பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. இதற்கு மேல் தொடர பிரிட்டிஷ்அரசின் ஆதரவு இல்லாததால் இங்கிலாந்தில் இருந்த தனது சொந்த சொத்தை விற்று அந்தப் பணத்தைக் கொண்டு அணையைக் கட்டி முடித்தார்.
அந்நாளைய சென்னை மகான ஆளுநர் வென்லாக் 1895 அக்டோபர் 11 இல் இவ்வணை கட்டிமுடிக்கப்பட்டத்தை குறிக்கும் வகையில் கல்வெட்டை திறந்து வைத்தார். கற்களாலும் செங்கற்பொடியாலும் இவ்வணை உருவாக்கப்பட்டது. அந்நாட்களில் இதன் மதிப்பு ரூ 65 இலட்சமாகும்.
அணை விபரம்
• அணையின் அடித்தளம் 144 அடி 6 அங்குலம்
• உயரம் 177 அடி
• அணைச் சுவரின் அகலம் 12 அடி
• அணையின் நீeம் 1241 அடி
• நீர்த்தேக்க உயரம் 155 அடி
152 அடி நீர் நின்றால் அணையின் உட்பரப்பில் 26.44 சதுர கிலோ மீட்டர் பரப்பில் நீர் தேங்கி நிற்கும். இது 15.7 டி.எம்.சி. ஆகும். இதில் 8.88 டி.எம்.சி நீரைத்தான் பயன் படுத்த முடியும். 152 அடியில் 104 அடி வரையுள்ள நீரை பயன்படுத்த முடியாது. அதிகப்படியான நீரை வெளியேற்ற அணையின் வலப்புறத்தில் 136 வது அடியில் 10 நீர் வழிந்தோடிகள் அமைக்கப்பட்டுள்eன.
இந்த நீர் பெரியாறு கால்வாய் வழியாக வைகை நதியில் இணைகிறது. இது மேலூர், செக்கானூர்ணி, திருமங்கலம், திருப்பத்தூர், திருபுவனம், சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்தப் பகுதிகளில் மூன்று லட்சத்து ஆறாயிரம் ஏக்கர் நிலங்கள் பெரியாறு, வைகை நீரினால் பாசன வசதி பெற்றன.
அணைச்சிக்கல் தொடக்கம்
1932 இல் பிரிட்டிஷ் அரசு மின்சாரம் தயாரிக்கப் போவதாக கூறியது. பாசனத்திற்குதான் உடன்பாடு போடப்பட்டது. மின்சாரம் தயாரிப்புக் கென்றால் தனி உடன்பாடு போடவேண்டும் என திருவிதாங்கூர் அரசு கூறியது. இந்த சிக்கல் நடுவர் மன்றக்குழுவுக்கு அனுப்பப்பட்டது. பிரிட்டிஷ் அரசு பாசன பணிகளுக்கு மட்டும்தான் நீரைப்பயன்படுத்தலாம். மின்சாரம் தயாரித்தால் அதை பாசனப்பணிகளுக்கு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது. இதை திருவிதாங்கூர் அரசு ஏற்க வில்லை. இதனால் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஏற்பட்ட உடன்பாடும் செயல்படாமல் போயிற்று.
தமிழகம்1959, அக்டோபர் 12 இல் அன்றைய முதல்வர் கு. காமராசர் அவர்களால் பெரியாறு நீர் மின் நிலையம் இயக்கி வைக்கப்பட்டது. அதன் உற்பத்தி திறன் 140 மெகா வாட். ஆண்டுக்கு 35 கோடி அலகு வரை மின் சாரம் தயாரிக்க கிலோவாட்டுக்கு ரூ.12 உரிமைத்தொகை தரவேண்டும். அதற்கு மேல் கிலோவாட்டுக்கு ரூ.18 என்ற கணக்கில் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என 1970 இல் உடன்பாடு போடப்பட்டாலும் 1954 நவம்பர் 13 என முன்தேதியிட்டு அமுலாவதாகும் விதி செய்யப்பட்டது.
‘பெரியாறு 1886 உடன்பாடு’ குறித்து கேரளத்தில் மோதல் ஏற்பட்டது. எனவே அந்த உடன்பாட்டில் மூன்று மாறுதல்கள் செய்யப்பட்டன. அதாவது பெரியாறு நீர்த்தேக்கத்தில் மீன்பிடிக்கும் உரிமையைத் தமிழகம் கேரளாவுக்கு திருப்பித்தந்தது. ஆண்டுக்கு ரூபாய் நாற்பதாயிரம் என்று ஒட்டுமொத்தமாக இருந்த குத்தகைத்தொகையை இனி ஏக்கருக்கு ரூபாய் முப்பது என்று தமிழகம் தர ஒப்புக்கொண்டது. இத் தொகை முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை திருத்தி அமைத்துக் கொள்eவும் தமிழகம் ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் இவ்வணையின் பாதுகாப்புக் குறித்து ‘மனோரமா’ என்ற மலையாளப்பத்திரிக்கை 1963 இல் செய்தி வெளியிட்டது. இச்செய்தியே இப்போது காணப்படும் பிரச்சனைகளுக்கு மூலக்காரணமாகும். இதன் விçeவாக இந்தியஅரசாங்கம் 1963 இல், மத்திய நீர்ப்பாசனக் கமின் இயக்குநர், தமிழக-கேரள அரசுகளின் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் அடங்கியக் குழுவை அனுப்பி அணையைப் பார்வையிட அனுப்பியது. இந்த அணை நல்ல நிலையில் இருப்பதாக இக்குழு அறிக்கை அளித்தது.
கேரளாவின் கூக்குரல்
1979 ஆம் ஆண்டு பீர்மேடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.எ. குரியன் என்பவர் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டது. அணையில் நீர்க்கசிவு ஏற்பட்டுள்ளது. அணை யுடையும் அபாயம் உள்ளது என்று அபாயச் சங்கு ஊதி போராட்டம் நடத்தினார். கேரள அரசின் மறைமுக ஆதரவோடு இப்போராட்டம் நடைபெற்றது. அணை உடைந்தால் கேரளாவில் உள்ள வல்லக்கடவு, வண்டிப் பெரியார், மஞ்சுமலை, மிளரிமலை, தேக்கங்கால், கருங்குeம், கருந்தருவி, சப்பாத்து, உப்புதுளை, மேழிக்குளம், ஆலடி, இடுக்கி போன்ற பகுதிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் என பீதிக் கிளப்பப்பட்டது.
1979 இல் முனைவர் கே.சி தாமஸ் (கேரளாவைச் சார்ந்தவர்) தலைமையில் நடுவண் நீர்வள ஆணைக்குழு ஒன்று தொழில் நுட்ப முறையில் இவ்வணையினை ஆராய்ந்தது. இந்த அணையினால் உடனடி பாதிப்பு ஏதுமில்லையயன்றும் அணையைப் பலப்படுத்துவதற்கு சில ஆலோசனைகளையும் கூறியது. நீர்த் தேக்கத்தின் மட்டத்தை 136 அடியாகக் குறைப்பது. பின்னர் அணையின் முக்கியப் பகுதியை ஆர்.சி.சி. முறையில் காங்கிரீட்டால் அரண் செய்து வலுப்படுத்துவது. அதோடு நீர்மட்டத்தை (136 அடியிலேயே) கட்டுப்படுத்துவதற்காகக் கூடுதல் வடிகால்களை அமைப்பது என்பனவையே அவை. இதற்கு பின்னர் 1980 இல் தில்லியில் ஒரு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜா முகம்மது தலைமையில் தலைமைப் பொறியாளர் ஜார்ஜ் மாத்யு, பொதுப்பணித்துறை பொறியாளர் உன்னிக் கிருஷ்ணன், பொதுப்பணித் துறைச் செயலர் பத்மநாபன், அப்போதைய மதுரைமாவட்ட ஆட்சியர் சியாக் (அனைவரும் கேரளாவைச் சார்ந்தவர்கள்) கலந்து கொண்டனர். நீர் தேக்கும் உயரத்தை 136 அடியாக குறைக்க வேண்டும் என்றும் ரூபாய் 12 கோடி 51 இலட்சம் செலவில் வலுப்படுத்த வேண்டும் என்றும் உடன் பாடு ஏற்படுத்தப்பட்டது. இதில் கையயழுத்திடாமல் இராஜா முகம்மது திரும்பினார். இதில் அணையை அவசரமாகப் பழுது பார்க்கும் பணிகளும் இடைநிலைப் பாதுகாப்புப் பணிகளும் முடிந்தபின் அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 145 அடியாக உயர்த்துவது என்றும் நீர்வe ஆணையம் பரிந்துரைத்தது. (இது குறித்து சி. சுகமூர்த்தி தமிழ்நாட்டு அரசியன் பெரியாறு அணை சிறப்புக் குழுவின் செயற்பொறியாeர், நடுவண் நீர்வe ஆணையம் பரிந்துரைத்த தலையாய நடவடிக்கைகள் அனைத்தும் 1988 இலேயே செய்து முடிக்கப்பட்டுவிட்டன என்று கூறுகிறார்.)இந்தக் கூட்ட நடவடிக்கைக் குறிப்புகளின் படி கம்பிகளால் முட்டுக் கொடுக்கும் பணியும் கூடுதல் வடிகால்கள் அமைப்புப் பணியும் 1990 முடிவடைந்த பின் தமிழ்நாட்டு அரசு கேரயஅரசை மேற்படி பரிந்துரையைச் செயல்படுத்து மாறு கோரியது. மத்திய நீர்வய ஆணையத்தலைவர் சொன்னது ஓர் அபிப்பிராயம் தான். அது கட்டுப்படுத்தும் ஆணை இல்லை என்று கூறி நிராகரித்தது கேரளா.( இந்து, 22.12.1997)
கம்பம் பள்eத்தாக்கு உழவர் சங்கத்தின் செயலாளர் கே.எம். அப்பாஸ் அவர்கள், அணையின் பாதுகாப்புதான் தனது பெரிய கவலை என்று கேரள அரசு கூறிவருகிறது. ஆனால் அணையை வலிமைப்படுத்துவதற்கான நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் தொடர்ந்து இடையூறு விளைவிப்பதும் அதுதான் என்று கூறுகிறார். கேரள அரசின் நோக்கமெல்லாம் நீரை மேலும் மேலும் இடுக்கி அணைக்கு திருப்பிவிடுவதுதானே தவிர பெரியாறு அணையை வலிமைப்படுத்து வதிலில்லை என்றும் கூறுகிறார்.
1979 இல் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136அடியாகக் குறைத்ததால் பாசனத்திற்கு வரும் நீர் வரத்து குறைந்து விட்டது. பெரியாறு பாசனத் திட்டத்தின் மூலம் பயன்பெறும் மொத்தப்பரப்பு 2,08,145 ஏக்கர் ஆகும். வைகை மூலம் பாசனம் பெறும் மொத்த பரப்பு 1,36,109 ஏக்கர் ஆகும். தேனி, மதுரை, சிவகங்கை, இராமநாதபுர மாவட்டங்களில் இதனால் பாசன நீர்த்தேவை கடுமையானது.
பொதுவுடமைவாதி வி.எஸ் அச்சுதானந்தனின் மலையாe மாநிலப்பற்று
இப்போது கேரe முதல்வராக உள்e வி.எஸ் அச்சுதானந்தன் (பொதுவுடமைக் கட்சி) 1997 இல், அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கேரள அரசு தவறிவிட்டதென்றும் மேலும் அதிக நீரை திருப்பிவிடத் தமிழ்நாடு எடுக்கும் முயற்சியைத் தடுத்துவிடத் தவறிவிட்டதென்றும் தனது இடது சாரி கூட்டணி அரசின் மீதே கண்டனத்தைக் கூறியவர். இதன் காரணமாக சில மாதங்களாக கேரள அரசியலில் பெரியாறு அணைப்பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. (தினமணி 7.7.1997) தற்போதைய 2006 தமிழக சட்டமன்றத்தேர்தலில் பொதுவுடமைச் சித்தாந்தம் பேசும் அச்சுதானந்தனுக்கு இருக்கும் இந்த கேரe மாநிலப்பற்று தமிழ்நாட்டில் இருக்கும் பொதுவுடைமைக்காரர்களுக்கு இருக்க வேண்டாமா? என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. வைகோ தேர்தல் பிரச்சாரங்களில் கேள்வி எழுப்பினார். உடனே தமிழக மார்க்சிஸ்ட் டுகள் ம.தி.மு.க போட்டியிடும் 35 தொகுதிகளிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று பிரச்சாரம் செய்தனர்.
பெரியாறு அணை பலவீனமானதாக உள்ளதா? தமிழக அரசு 1980 இல் ஒப்புக் கொண்டபடி அணையை பலப்படுத்தும் வேலைகளை செய்யவில்லையா? இது குறித்து தமிழர் கண்ணோட்டம் தனது மார்ச் மற்றும் ஏப்ரல் 2000 இதழ்களிலேயே அலசுகிறது. அக்கட்டுரையின் சுருக்கம் இதோ...
காங்கிரிட் தொட்டி அமைத்தல்
பிரதான அணையின் நீளம் 1200 அடி. அதன் மேல் முழு நீeத்திற்கும் 3 அடி அகலம் முற்பகுதியிலும் 6 அடி அகலம் பிற்பகுதியிலும் ஒரு மீட்டர் உயரத்திலும் கான்கிரிட் தொட்டி போன்று அமைத்து 12 அடி அகலமுள்e அணையின் மேல் பாகம் 21 அடிக்கு அகலப்படுத்தப்பட்டு அணையின் கன பரிமாணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கான்கிரிட் கட்டுமானம் உரிய கம்பிகள் மூலம் பழைய அணை கட்டுமானத்துடன் பிணைக்கப் பட்டுள்ளது.
கேபிள் ஆங்கரிங் செய்தல்
அணையின் மேல் மட்டத்தில் இருந்து அடித்தe பாறையினுள் 4 அங்குல விட்டம் உள்ள துளைகளை போட்டு அதனுள் 34 அதிக இழுவிசைத்திறன் உள்ள 7 மி.மீ. அளவுள்ள இரும்பு கம்பிகளை பாறையினுள் செருகி பிணைக்கப்பட்ட பின் 120 டன் இழுவிசை கம்பிகளுக்கு கொடுக்கப்பட்டது. இதேபோல் அணையின் நீeவாக்கில் 9 அடி இடைவெளியில் 95 கேபிள் ஆங்கர்கள் பொருத்தப் பட்டபின் சிமெண்ட் கிரவுட் ஒவ்வொரு துளை மூலமும் செய்யப்பட்டது. 120 டன் இழுவிசையுடன் அணைக்கட்டுப் பாறையுடன் இணைக்கப்படுவதால் அணை மேலும் வலிமை மிக்கதானது.
கைபிடிச் சுவரை உயர்த்துதல்
பெரியாறு பிரதான அணையின் கைப்பிடி சுவரின் மேல்மட்ட உயரம் 158 அடியாகும். இந்த சுவரில் மோதும் நீரின் அலைகளை தடுக்க மேலும் 2 அடி உயர்த்தப்பட்டு மேல் மட்டம் 160 அடியாக உயர்த்தப்பட்டது. கருங்கல்லினால் கட்டப்பட்ட இந்த சுவர் பிரதான அணையை அடுத்த சிற்றணை வரை நீடிக்கப்பட்டது. பிரதான மற்றும் சிற்றணைக்கு இடைப்பட்ட பகுதியும் 160 அடி மட்டம் வரை கல்பதிப்பு செய்யப்பட்டது.
மூன்று கூடுதல் நீர்போக்கி அமைத்தல்
பெரியாறு அணையின் பழைய 10 நீர் போக்கிகளின் வெளிபோக்குத் திறன் வினாடிக்கு 82 ஆயிரம் கன அடியாகும். ஆனால் எதிர்பார்க்கப்படும் உச்ச நிலை வெள்ள வரத்து விநாடிக்கு 1 இலட்சத்து 22 ஆயிரம் கன அடியாக இருப்பதால் கூடுதல் நீரை வெளியேற்ற மூன்று கூடுதல் நீர்போக்கிகள் அமைப்பது அவசியம் என்று தீர்மானிக்கப்பட்டது.
அதன் படி பழைய நீர்ப்போக்கிகளின் இடது புறம் இருந்த மண், பாறை அகற்றப்பட்டு 40 அடிக்கு 16 அடி என்ற அளவு வீதத்தில் மூன்று நீர்போக்கிகள் கருங்கல்லால் கட்டப்பட்டன. கான்கிரீட்டிலான மற்றொரு வழிந்தோடியும் கட்டப்பட்டது. புதிய மற்றும் பழைய நீர்ப்போக்கிகளிலும் மின் வசதியால் இயங்கக்கூடிய ரேடியல் அடைப்பு சட்டர்கள் பொருத்தப்பட்டன. பழைய வெளிபோக்கிகளின் அடைப்பு சட்டர்களும் பழுது பார்க்கப்பட்டு மின் வசதியுடன் இயங்க கூடியதாய் மாற்றப்பட்டன.
கான்கிரீட் முட்டுச் சுவர்
இந்தப் பணிதான் பெரியாறு அணைக்கு நிரந்தர பலம் கொடுக்கக் கூடியதாகும். அணையை ஒட்டி பின்புறமாக அடித்தளத்திலிருந்து 34 அடி அகலத்திற்கு கான்கிரீட் முட்டுச் சுவர் எழுப்பி அதை நடு உயரத்தில் 27.36 அடி அகலத்திற்கு கொண்டு வந்து பின் அணையின் 145 அடி மட்டத்தில் இணையுமாறு கட்டப்பட்டது. முட்டுச்சுவரின் அடித்தளம் கடின பாறைமேல் அமைக்கப்பட்டு தேவையான இடங்களில் துளையிடப்பட்டு பிணைப்பு கம்பி பொருத்தி சிமெண்ட் கிரவுட் செய்யப்பட்டுள்ளது. முட்டுச் சுவர் கட்டுமானத்தினுள் 10 அடி மற்றும் 45 மட்டங்களில் ஆய்வு செய்வதற்காக வடிகால் கேலரிகள் அமைக்கப்பட்டன. அணையிலிருந்து கசியும் நீர் மற்றும் மெல்லிசை நீர இக்கேலரிகளில் சேகரிக்கப்பட்டு ‘வி‘ நாட்ச் என்னும் அளவுகோல் மூலம் கணக்கிடப்படுகிறது.
அணையின் பாதுகாப்பை பார்வையிட நிபுணர் குழு
கேரளத்தின் அச்சத்தைத் தவிர்க்க தமிழகம் மேற்கொண்ட இத்தகைய பணிகளை பார்வைவிட உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் என். சந்தோஷ் யஹக்டே, எஸ்.பி. புகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மத்திய தண்ணீர் கமினைச் சேர்ந்த பாசன நிபுணர்கçeக் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழு முல்லை பெரியாறு அணையில் 142 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம். அதனால் நூறு ஆண்டுகள் பழமையான அந்த அணைக்கோ அணையின் கீழ்ப்பகுதியல் உள்ள வசிப்பிடங்களுக்கோ எந்த ஒரு ஆபத்தும் நேர்ந்துவிடாது என்று உச்சமன்றத்திடம் அறிக்கை அளித்துள்ளது ஆறு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு.
142 அடி நீரைத் தேக்க உச்ச நீதிமன்ற தீர்ப்பும் பேச்சுவார்த்தை
அறிவுரையும்
இந்த அறிக்கையின் அடிப்படையில் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என 2006 பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி தலைமை நீதிபதி உள்ளிட்ட மூன்று நீதிபதிகளை கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. அப்போது கேரளாவில் ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு இத்தீர்ப்பை ஏற்க மறுத்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பின் அதனையே புதிய ஆற்று நீர் சட்டத் திருத்தமாகவும் சட்டமன்றத்தில் இயற்றியது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த மீண்டும் தமிழகம் வழக்கு தொடர்ந்தது. உடனே உச்ச நீதி மன்றம் சொல்கிறது பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று.
இதே போன்று ஒரு நிலை 1996 இல் காவிரி பிரச்சனையில் ஏற்பட்டது. நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை செயல்படுத்த உத்திரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த போது பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றது உச்ச நீதிமன்றம். இடைக்கால நடுவர்மன்றத் தீர்ப்பு வந்து அய்ந்தாண்டுகள் கழித்து அமுல்படுத்த வழக்கு போட்டால் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்றது உச்ச நீதிமன்றம். இப்போது பத்து வருடங்கள் ஆன நிலையில் இடைக்கால நடுவர் மன்றத் தீர்ப்பும் என்னவாயிற்று என்று தெரியவில்லை. இறுதித் தீர்ப்பும் வர வில்லை. அப்போதும் இதே பிழையை செய்தவர் கலைஞர்.
இப்போது பெரியாறு அணையில் ஆறு ஆண்டுகளுக்கு முன் நிபுணர் குழு அமைத்து அணையின் வலுத் தன்மையை ஆராய்ந்து 142 அடி நீர் உயர்த்தலாம் என அக்குழு அறிக்கை அளித்த பின் தீர்ப்புக் கூற 2006 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி வரை ஆகியிருக்கிறது.
அந்த தீர்ப்பை செயல்படுத்த உத்தரவு கேட்டால் பேச்சு வார்த்தை நடத்துங்கள் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. அப்படியானால் கூறப்பட்ட தீர்வுக்கு மதிப்பில்லையா? மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசு சட்டத்தை இப்படித்தான் பின்பற்ற வேண்டுமா? தமிழக முதல்வர் கலைஞர் இதில் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?
உச்ச நீதிமன்றம் கூறிய அறிவுரை படி பேச்சு வார்த்தை நடத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டியது. அதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளான பா.ம.க மற்றும் விடுதலை சிறுத்தைகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பின்னரும் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்தலாமா? இதே போல் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி கர்நாடகத்திடம் காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பை அமுல் படுத்த பேச்சுவார்த்தை நடத்தி இன்றeவும் காவிரிப் பிரச்சனை தீராமல் இருக்க கலைஞர்தானே காரணம்? எனவே கலைஞர் அவர்கள் பேச்சுவார்த்தை என்னும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் தமிழனின் உரிமையைக் காக்க முன்வரவேண்டும்.கூட்டாட்சி தத்துவத்தை வலியுறுத்த வேண்டும். இது ஒன்றே இப்பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்.
- கவி

Subscribe to:
Comments (Atom)