Thursday, November 4, 2010

காலச்சுவடு இரவிக்குமாரின் புரட்டு

 காலச்சுவடு இரவிக்குமாரின் புரட்டு

நாளை விடியும் இதழில் தோழர் வ. மாரிமுத்து எழுதிய விமர்சனக் கட்டுரை

தோழர் இரவிக்குமார் கடந்த சில ஆண்டுகளாக தன் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள பார்ப்பனர்களின் ஆசை வார்த்தைக்கு மயங்கி ஆள் காட்டி அரசியலில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே.  அந்த வகையில்  தாழ்த்தப்பட்ட , பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட  மக்களின்  உயர்வுக்கும் மேன்மைக்குமாக தன் வாழ்நாளெல்லாம் உழைத்த  தொண்டு செய்த பழுத்த பழமாம் பெரியார் பற்றி அவதூறாகக் கட்டுரைகள்  எழுதி வருகிறார். அதுவும் பார்ப்பனிய ஊடகங்களின் ஆதரவுடன் தொடர்ந்து இதைச் செய்து வருகிறார். இவரின் இந்தத்திட்டமிட்ட அவதூறுகளை திரிபுவாதத்தை அவ்வப்போது நடுநிலையான சிந்தனையாளர்களும் வரலாற்று ஆய்வாளர்களும் பெரியார் தொண்டர்களும் தக்கச்சான்று களுடனும் ஆதாரங்களுடனும் அம்பலப்படுத்தி வருகின்றனர்,

அக்கட்டுரைகளில் நூலாக வெளிவந்தவை:

1. தோழர் கோகுல் காந்திநாத் எழுதிய இரவிக்குமாரின் பொய்முகம்.

2. தோழர் புனித பாண்டியன்-வ.மா.ஓ எழுதிய பெரியாரைத் திரிக்கும் புரட்டுகளுக்கு மறுப்பு

3. பேரா. அ. மார்க்ஸ் , கவிதாசரண், வளர்மதி ஆகியோர் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து பெரியார் முஸ்லிம்களுக்கும் தலித்து களுக்கும் எதிரியா? என்ற தலைப்பில் தென்றல் வெளியீடாக வந்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது தோழர் கவி அவர்கள் எழுதி வெளி வந்துள்ள காலச்சுவடு இரவிக்குமாரின் புரட்டு என்ற நூலும் முக்கியத்துவம் பெறுகிறது.மேற்கண்ட மூன்று நூல்களும் தோழர் இரவிக்குமாரின் அவதூறுகள் குற்றச்சாட்டுக்களுக்கு மட்டுமே சான்றுகளுடன் பதில் அளித்துள்ளது. ஆனால் தோழர் கவி அவர்கள் எழுதிய இந்நூல் இரவிக் குமாரின் அவதூறுகளுக்கு பதில் அளிப்பதோடு பெரியாரை மறுபரிசீலனை செய்பவர்கள் அம்பேத்கரையும் இரட்டை மலை சீனிவாசனையும் எம்.சி.இராசாவையும் அயோத்தி தாசரையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிறது.

பெரியார் உட்பட விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் உலகில் யாரும் இல்லை. உண்மையான ஆதாரங்களுடனும் சான்றுகளுடனும் நடுநிலையில் நின்று யாரை வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம். இது குறித்து பின்னர் பார்ப்போம். அதற்கு முன் தோழர் இரவிக்குமாரின் அவதூறுகளை இந்நூல் எப்படி மறுக்கிறது என்பதைப் பார்ப்போம்.

1. நம்மில் கீழ்த்தர மக்கள் என்று தலித் மக்களைப் பற்றி பெரியார் கூறியதாக இரவிக்குமார் வைத்திருக்கும் அவதூறுக்கு, கீழ்த்தரம் என்பதற்கு கடைநிலை என்ற பொருளில் தான் பெரியார் அச்சொல்லைக் கையாளு கிறாரே தவிர, இரவிக்குமார் சொல்வது போல் அல்ல என்பதை பெரியாரின் சொற்பொழிவைக் கொண்டே நிரூபிக்கிறார் தோழர் கவி (பக்கம் 8- இல்).

2. எல்லோருக்கும் பொதுவான அம்பேத்கரை, அம்பேத்கர் வடநாட்டுக்காரர் என்று பெரியார் கூறுகிறார் என்ற இரவிக்குமாரின் அடுத்த அவதூறையும், இரவிக்குமார் சுட்டிக்காட்டும் அதே பெரியார் சொற்பொழிவில் நமது அம்பேத்கர் என்று பெரியார் பேசியதை எடுத்துக்காட்டி, அந்த அபத்தமான அவதூறையும் அடித்து நொறுக்கிவிடுகிறார் தோழர் கவி(பக்கம் 13 - இல்).

3. தீண்டாதாருக்கு தாமே இரட்சகன் என்ற தோற்றத்தைப் பெரியார் உருவாக்கினார் என்று இரவிக்குமார் வைத்த குற்றச்சாட்டில் எள்ளளவு கூட உண்மை இல்லை என்பதையும் ரட்சகன் என்ற சொல்லை எங்கிருந்த இரவிக்குமார் உருவினார் என்பதையும் இந்நூல் அம்பலப்படுத்துகிறது (பக்கம் 16 -இல்).

இது போல் இரவிக்குமாரின் பல அவதூறுகளையும், குற்றச்சாட்டு களையும் ஆதாரங்களுடன் அதுவும் பெரியார் சொற்பொழிவைக் கொண்டே மறுப்புத் தெரிவித்திருப்பது மிகச் சிறப்பான செயலாகும்.

4.அயோத்திதாசர் குறித்து  பெரியார் மவுனம் கடைப்பிடித்ததாக கூறும் இரவிக்குமாரின் குற்றச்சாட்டுக்கு, ஏற்கனவே அருமைத் தோழர் தலித்முரசு ஆசிரியர் புனித பாண்டியன் சான்றுகளுடன் மறுப்புத் தெரிவித்திருந்த செய்திகளை எடுத்துக்காட்டிவிட்டு,


‘தாத்தா என்று அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனின் சகோதரியைத் திருமணம் செய்து கொண்டவர் அயோத்திதாசர். எனவே அயோத்திதாசரின் அறிவைப் பற்றி இரட்டைமலை சீனிவாசனுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஒரு பைசா தமிழன் என்று முதலிலும் பின்பு தமிழன் என்று பெயர் மாற்றியும்  பத்திரிக்கை நடத்திய விவரம் இரட்டைமலை சீனிவாசனுக்குத் தெரிந்திருக்கும் . ஆனால் தனது ஜீவசரித்திர வரலாற்றில் ஒரு இடத்தில் கூட அயோத்திதாசரின் பெயரைக் குறிப்பிடவில்லை. தலித் அரசியலில் முதல் ஜீவ சரித்திர வரலாற்று நூல் என்று சொல்லப்படுகின்ற அந்த நூலில் பெரியார் பெயரும் இல்லை. நீதிக்கட்சியுடனும் பெரியாருடனும் இணைந்து பணியாற்றியவர். பதவிகளைப் பெற்றவர் இரட்டைமலை சீனிவாசன். அயோத்திதாசர் குறித்தும் பெரியார் குறித்தும் இவருடைய மவுனம் எதேச்சையானது தானா என்று இரவிக்குமார் எழுத வேண்டாமா? .... பெரியாருடைய போராட்டத்தைப் பற்றித் தெரிந்திருந்த அம்பேத்கருக்கு, அயோத்திதாசரின் செயல்பாடுகள் அந்த அளவில்தான் இருந்ததா? இரவிக்குமார் இதையயல்லாம் விளக்க வேண்டாமா?’ (பக்கம் ‡20 இல்) என்ற நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது இந்நூல்.

இது குறித்து  நாம் முன்பு குறிப்பிட்டது போல நடுநிலையுடன் தக்கச் சான்றுகளுடன் இந்த ஆய்வையும் செய்ய வேண்டும் என்பதே நமது நிலை.

நூலின் பின் அட்டையில் பார்ப்பனரல்லாத பிற மக்களுக்காக  அம்பேத்கரும் மற்ற தலித் தலைவர்களும் ஒரு போராட்டமும் நடத்த வில்லையே ஏன்?

மேலும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இயற்றப்படும் போது பெரியார் வேண்டியும் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களின் வகுப்புரிமைக்கு உரிய பாதுகாப்பு செய்யாதது ஏன்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் தோழர் கவி.

அனைத்து நிலைகளிலும் ஆதிக்கச்சக்திகளும், பார்ப்பனியமும், தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படியயல்லாம் அடக்கி ஒடுக்கியது என்பத பற்றி நாம் அறியாததல்ல, அத்தகைய தடைகளை எல்லாம் மீறி தனது உரிமைக்காகவும் நமது சமுதாய மேன்மைக்காகவும் தலித் தலைவர்கள் உழைத்திருக்கிறார்கள், பாடுபட்டிருக்கிறார்கள் என்பதே பெரிய காரியமாகும்.

தலித் தலைவர்கள் ஒரு சில கருத்து வேறுபாடுகளுடன் செயல் பட்டி ருந்தாலும் அவர்களின் உழைப்பை யாரும் மறுத்திட முடியாது. தனது உரிமைக்காவும் போராட இயலாத சூழலில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஏன் போராடவில்லை என்ற கேள்வி தேவையில்லாதது.
அதேபோல் இந்திய அரசியல் சட்டம் இயற்றப்படும் போது பெரியார் வேண்டியும் அம்பேத்கர் பிற்படுத்தப்பட்ட மக்களின் வகுப்புக்கு உரிய பாதுகாப்பு செய்யாதது ஏன் என்ற கேள்வியும் நியாயமானது அல்ல.
 இவ்வியத்தில் பெரியாருக்கு சங்கடம் இருந்தது உண்மை. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை அரசியல் சட்ட ரீதியாக செய்ய முடிய வில்லையே என்று அம்பேத்கர் வருத்தப்பட்டிருக்கிறார் என்பதையும் பெரியார் தெரிவுபடுத்தியுள்ளார்.

1951 ஆம் ஆண்டு இட ஒதுக்கீடு தொடர்பாக இந்திய அரசியல் சட்ட முதல் திருத்தம் நடைபெற்ற போது பிற்படுத்தப்பட்ட மக்களின் இடஒதுக்கீடு நிலைக்க உதவி செய்துள்ளார் அம்பேத்கர். அப்போது நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டினால் தோழர் கவி அவர்களின் அய்யம் தீர்ந்து விடும்.
What Gandhi and Congress have done to the untouchables ?

தோழர் இரவிக்குமாரின் அவதூறுகளை மறுத்தது மட்டுமல்லாது, பெரியாரை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பவர்களைப் பார்த்து சில நியாயமான கேள்விகளை எழுப்பும் இந்நூலை அனைவரும் -ஆகச்ட் 2006)
என்ற நூலில் இட ஒதுக்கீடு ஏன் தேவை என்பதை மிகவும் ஆணித்தரமாக புள்ளி விவரங்களோடு விளக்கி வற்புறுத்தியுள்ளார் (நூல் இடஒதுக்கீடு பற்றிய கேள்விக்கான பதில்கள் பக்கம் -30).

No comments:

Post a Comment