Tuesday, March 15, 2011

பழங்காலக் கல்வி முறை-2


பழங்காலக் கல்வி முறை -2
தந்தை பெரியார்:
பார்ப்பனர்களின் தமிழின அழிவு நடவடிக்கைகளையும் தமிழ்ச் சமுதாய சீர்குலைவு நடவடிக்கைகளையும் அடையாளம் கண்டு அதை தமிழ்மக்களுக்கு விளக்க உணர்த்த, இயக்கம் கண்டவர் தந்தை பெரியார். தமிழ்ச்சமுதாய சீரழிவிற்குக் காரணமான மூடநம்பிக்கைகள், மதம், புரோகிதம், சாதி வேறுபாடுகளுக்கு ஆணிவேர்களாக பார்ப்பனர்கள் இருப்பதேயாகும் என தந்தை பெரியார் முடிவுக்க வந்ததால் தான் இயக்கம் கண்டார். இதை தந்தை பெரியார் அவர்களே நெருஞ்சிப்பேட்டை சாமியார் வருகை சம்பவம் குறித்து கூறும்போது தெளிவு படுத்துகிறார்.
வேதம் கடவுளால் இயற்றப்பட்டது எனவும் வேதம் பார்ப்பனர்களால் ஓதப்படுவதால் கடவுள் பார்ப்பனர்களுக்கக் கட்டுப்பட்டவர் எனவும் மனுதர்மத்தில் கூறப்படுகின்றவைகளை மன்னர்களுக்கு எடுத்துக் கூறி மன்னர்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர் பார்ப்பனர்கள் என்பதை பின்வரும் மேற்கோளின் மூலம் அறியலாம்.
மனுஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்ற பழைய சட்ட நூல் கூறுவதாவது : மன்னர் காலையில் எழுந்ததும் முதலில் மூன்று வேதங்களில் பண்டிதர்களும் சட்டம் அறிந்தவர்களுமான பிராமணர்களை வணங்கி அவர்களுடைய அறிவுரைகளைக் கேட்க வேண்டும்.  வேதங்களைப் பயின்றவர்களும் தூய்மையானவர்களுமான முதிய பிராமணர்களை அவர் தினமும் வழிபட வேண்டும் (ஜோச் இடமுருகு, பிராமண மதம் தோற்றமும் வளர்ச்சியும், தமிழாக்கம்).
இதைக் காட்டி மன்னர்களிடமிருந்து பார்ப்பனர்கள் நிலங்கள் மற்றும் இதர சலுகைகளைப் பெற்றனர்.
வர்ணாசிரம முறைப்படி வேதபாடங்கள் முதல் மூன்று உயர் பிரிவினர்க்கு மட்டும் உரியதனாதாக இருந்தன என்ற கட்டுரையாளரின் கருத்துக்களெல்லாம் கற்பனையானவை. பொய்யானவை. இது குறித்து ஜோசப் இடமுருகு, பார்ப்பனர், சூத்திரர், வைசியர் ஆகிய மூன்று வருணங்களைச் சேர்ந்தவர்களுக்கும் வேதம் படிக்க உரிமை இருந்தாலும் அதைக் கற்றுக் கொடுக்கும் உரிமை பார்ப்பனர்களுக்கு மட்டுமே உண்டு . அதை மாற்ற முடியாத சட்டமென்றும் மநு கூறுகிறார் என்பதை வெளிப்படுத்துகிறார்.
கோதம தர்ம சூத்திரம் கூறுவதாவது:
அதஹாஸ்ய வேதமுபஸ்ருண்வத; ஸரோத்ரெளத்ர புஜதுப்யாம் பூரயேதபூரயேத்.
இதன் பொருள் : வேதம் ஓதுங்கால், அதைக் காதால் கேட்கிற சூத்திரனது காதுகளில் ஈயத்தையும் மெழுகையும் உருக்கி, விட வேண்டும்.
பார்ப்பனர்கள் தமிழகத்தில் ஆதிக்கம் பெறுதல்:
மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு தானமளித்த முறை பற்றி மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ரிக் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. கட்சீவான் என்ற முனிவர் சிந்துவில் வசிக்கும் பாவயவ்யனின் புதல்வனான சுவநயனுக்கு என்னுடைய புத்திபலத்தோடு பற்பல ஸ்தோமங்களைக் கூறுகின்றேன். எவனாலும் ஜெபிக்கப்படாத அவன் புகழை விரும்பி ஆயிரம் யக்ஞங்களை நடத்த என்னைத் திறப்படுத்தினான். உத்தம ஈகையனான அரசன், நான் தானத்தை ஏற்க வேண்டுமென விரும்பினான். கட்சீவானான நான், அவனிடம் உடனே நூறு நிஷ்கங்களையும் நூறு வலிய குதிரைகளையும் நூறு காளைகளையும் பெற்றேன். அதனால் அவன் தன் அழியாப் புகழை சோதியிலே பரத்தினான். சுவநயனால் எனக்குக் கருப்புக் குதிரைகளால் இழுக்கப்படும் பத்து தேர்கள் அளிக்கப்பட்டன. அவற்றில் பணிப்பெண்கள் ஏறினார்கள். அறுபதினாயிரம் பசுக்கள் அவற்றை தொடர்ந்தன. அவற்றை கட்சீவான் மாலையிலேயே தந்தையினிடம் அளித்தான். நான் பழைய தானத்தை உங்களுக்காகப் பெற்றேன். அவை பூட்டப்பட்ட எட்டும் மூன்றுமான தேர்கள், மிக்க மதிப்புள்ள பசுக்கள், நல்ல எண்ணமுள்ள பந்துக்களைப் போல் உறவினர்களான பஜ்ரர்கள் மிக்க அளித்துப் புகழைப் பெற விரும்புவார்களாக. (ரிக்வேதம் 1 : 126)
மேலும் சொத்துக்களை பார்ப்பனர்கள் எவ்வாறு பெற்றனர் என்பதை ஏ.எஸ். வேணு அவர்கள் தன்னுடைய Anna and the cruade என்ற நூலில் , சோழர் காலத்தில் பார்ப்பனர் வருகைக்க முன் எல்லா நிலங்களம் மன்னனுக்கு சேர்ந்தவையாக இருந்தன. பின்னர், பார்ப்பனர்கள் மன்னர்களிடமிருந்து தானமாகப் பெற்றனர். அதற்க பிரம்ம தேச நிலங்கள் என்று பெயர். இவ்வாற பார்ப்பனர்களால் அனுபவிக்கப்படும் நிலங்களுக்கு வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. இதை K.A. நீலகண்ட சாஸ்திரி அவர்கள்  The cholas என்ற நூலில் பல இடங்களில் குறிப்பிடுகிறார். இவ்வாறு பெற்ற நிலப்பகுதி அக்ரகாரம் என பின்னாளில் அழைக்கப்பட்டது.

No comments:

Post a Comment