Tuesday, March 15, 2011

பழங்காலக் கல்வி முறை-3

பழங்காலக் கல்வி முறை - 3
சமஸ்கிருத கல்வி பாடசாலை
மேலும் லு.பு.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் கி.பி. 1602 இல் இராஜராஜ சோழன் பிரம்மதேச நிலங்களுக்கு அருகில் நிலங்களை வைத்திருப்பவர்கள் பார்ப்பனர்களிடம் மட்டுமே விற்க வேண்டும் என் ஆணையிட்டதையும் வெளிப் படுத்துகிறார்.
இதே போன்று கல்லூரிகள் தமிழ்நாட்டிலுள்ள திருபுவனை, எண்ணாயிரம் மற்றும் திருமுக்கூடல் ஆகிய இடங்களில் வளர்ந்தோங்கின. இங்கு சமஸ்கிருதமும் உபநிடதங்களும் வேதங்களும் போதிக்கப்பட்டன. எந்த விதமான முதலீடும் செய்யாமல் பார்ப்பனர்கள் திராவிடர்களின் தாயகங்களில் ஆதிக்கம் பெற்றனர் என அவர்கள் அதிர்ச்சியில் தெரிவித்த கருத்துக்களை மேற்கோள் காட்டி விவரிக்கிறார். சமஸ்கிருத பண்டிட்களுக்க தங்க நாணயங்கள் பரிசாக அளிக்கப்பட்டதையும் K.A..நீலகண்ட சாஸ்திரி அவர்கள் தெரிவிக்கிறார்.
ஆனால் பாடசாலைகள் தொடங்கப்பட்ட விவரத்தையம் நடத்தப்பட்ட விவரத்தையும் கட்டுரையாளர் கே.வி.இராமன் பின்வருமாறு கூறுகிறார்,
அ) 11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இவை சோழ மன்னர்களால் பராமரிக்கப்பட்டு வந்தன. 1048 ஆம் ஆண்டில் திருபுவனை ஆவணத்தின் மூலம் பாண்டிச்சேரிக்கு அருகிலிருந்த திருபுவனையில் 19 ஆசிரியர்களும் 250 மாணவர்களும் பல்வேறு பாடங்களைப் பயின்று வந்தனர்.
ஆ) 1069 ஆம் ஆண்டின் மற்றொரு ஆவணத்தில் இதே போன்று செங்கல்பட்டு திருமுக்கூடலில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களும் உள்ளன.
தங்களுடைய கருத்துக்களை வலியுறுத்துவதற்கு நூலோர் எவ்வாறு செய்திகளை திரித்தும் மறைத்தும் கூறுவர் என்பதை மேற்கண்டவைகளிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எவ்வாறு எனில்,
மேலே குறிப்பிடப்பட்ட பாடசாலைகள் அனைத்தும் 9 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் பார்ப்பனர்கள் தங்களுக்கு தமிழ்மன்னர்களிடம் இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சமஸ்கிருதம், வேதம், உபநிடதங்களைப் பயிற்றுவிப்பதற்காக நிலங்களைத் தானமாகவும் நிதி உதவிகளை மானியங்கள் மூலமாகவும் பெறப்பட்டு நடத்தப்பட்டு வந்தன.
1012 மற்றும் 1044 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இராஜேந்திர சோழனாலும் 1018 மற்றும் 1054 ஆம் ஆண்டுகளுக்க இடையில் இராஜராஜ சோழனால் எண்ணாயிரம், திருபுவனம் ஆகிய இடங்களில் சமஸ்கிருத பாடசாலைகள் ஏற்படுத்தப்பட்டன எனவும், இவற்றில் பயின்ற மாணவர்கள் முறையே 340 மற்றும் 260 மாணவர்கள். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள் என்பதையும் லு.பு.நீலகண்ட சாஸ்திரி அவர்களின் நூலை மேற்கோள்காட்டி திரு. ஏ.எஸ். வேணு அவர்கள் வெளிப்படுத்துகிறார்.
ஆர். சத்தியநாத அய்யர் தனது நூலான Thamizhakam in 17th Century - இல், மதுரையில் இருநூறு மற்றும் முன்னூறு வகுப்புகளில் 10,000 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் பார்ப்பனர்கள். பார்ப்பனர் மட்டுமே இப்பாடசாலையில் கல்வி கற்க விண்ணப்பிக்கவும் உரிமைப் பெற்றிருந்தனர். குறிப்பாக சூத்திரர்களும் வைசியர்களும் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர் என்று குறிப்பிடுகிறார்.
இந்த நூற்றாண்டில் கூட, வ.வே.சு. அய்யர் சேரன்மாதேவியில் குலக்கல்வியை மையமாக வைத்து ஆரம்பித்த பாட சாலையையும் அது தந்தை பெரியாரால் எவ்வாறு அழித்தொழிக்கப்பட்டது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.
இவையயல்லாம்தான் 1916 டிசம்பரில் தியாகராயர் அவர்களால் வெளியிடப்பட்ட பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கைக்கு அடிப்படைகளாகும்.
(தொடரும்....)

No comments:

Post a Comment