Tuesday, March 15, 2011

பழங்காலக் கல்வி முறை-1

பழங்காலக் கல்வி முறை -1
முன்னுரை
கே.வி.இராமன் , இந்து  22.3.98 நாளிதழில் எழுதிய ஆங்கிலக் கட்டுரை 24.4.98 சங்கொலி வார இதழில் ஏ.எஸ். சக்கரவர்த்தி அவர்களால் தமிழாக்கம் செய்யப்பட்டு பழங்க கல்வி முறை என்ற தலைப்பில் திறனாய்வுப்போட்டிக்காக வெளியிடப்பட்டது. கட்டுரையை  படித்தவுடன் பேரறிஞர் அண்ணா அவர்கள் ஆரிய மாயை என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள வரிகளை மேற்கோள் காட்டி இத்திறனாய்வுக் கட்டுரையை எழுத விழைகின்றேன்.
ஆரிய மாயையில் பேரறிஞர் அண்ணா அவர்கள்,
பல பொய்க் கூற்றுகள் சரித ஆராய்ச்சியின்மையால் முளைக்கின்றன. இக் காளாண்களைப் போக்க, பேராசிரியர் பாரதியார் கூறியது போன்ற ஆராய்ச்சியுரைகளை மேலும் சில தருகின்றேன், பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெரு மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் கைத் தொழில் வியாபாரங்களிலும் அரசியல் நாகரீகத்திலும் தலைசிறந்து விளங்கினார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. பல நாட்டுச் சரித்திரங்களில் இதற்கு ஆதாரங்களுண்டு. ஆயினும் இடைக்காலத்தில் ஆரியர், தமிழ் நாகரீகத்தைத் திருத்தி மாற்றி, தங்களுக்கே பெருமை உண்டாக்கத் தக்க விதமாக பல வித வேத புராணங்களை எழுதி தமிழர் சிறப்பை உருத்தெரியாமல் மாற்றி விட்டார்கள். மேலும் இது குறித்து அறிஞர் தோழர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எம்.ஏ. அவர்கள், இந்தியப் புராதன ஆராய்ச்சி வெளியீடு 42 பக்கத்தில் எழுதியுள்ள விவரம் வருமாறு:
தற்காலச் சரித்திர ஆசிரியர்கள் பெரும்பாலோருக்கு அரசியல் கொள்கைப்பற்றும் மதப் பற்றும் இருந்தே வந்திருக்கின்றன. உதாரணமாகச் சரித்திராசிரியர்களான ஹியுமையும் மக்காலேயையும் கவனித்தால் சரித்திர உண்மைகளைத் தொகுப்பதிலும் அவற்றை வருணித்துக் கூறுவதிலும் , ஹியும் தமது கன்சர்வேட்டிவ் கட்சி கொள்கைகளையும், மக்காலே தமது லிபரல் கட்சிக் கொள்கைகளையும் இலைமறைக் காய்போல் வெளியிட்டுருப்பதைக் காணலாம். புராதன சரித்திர விசயத்திலும் இப்படிதான். 
இதை பேரறிஞர் அண்ணா அவர்கள் மேற்கோள் காட்டுவதுடன் இப்படி சரித்திரத்தை பலவாறு மாறுபடுத்தி இருப்பதால் கூரிய புத்தியால் அனுதாபத்துடன் சுயநலப் பித்தலாட்டப் பிரச்சாரமாகிய தடித்த திரையைக் கிழித்து எறிந்து அதனுள் மறைந்திருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவுடன் கண்டுபிடித்து வெளியிட வேண்டும் என்று முத்தாய்ப்பாகக் கூறுகிறார்.
இதை இத்திறனாய்வுக் கட்டுரைக்கு சரியான வழிகாட்டியாக அமைத்து அதன்வழி தொடர்கின்றேன்.
வேதம், மநுதர்மம் என்பது என்ன?
வேதம் என்பது குறித்து திராவிட இயக்கங்களின் மூல நூலாகக் கருதப்படும், சுவாமி சிவானந்த சரஸ்வதி எழுதிய ஞான சூரியன் என்னும் நூலில் விளக்கமாகத் தரப்படுகிறது:
வேதத்தைப் புகுத்த வியாயச முனிவரின் சிஷ்யர்களுள் ஒரவரான வைசம்பாயனரிடம், யாக்ஞவல்கியர் வேதத்தை உணர்ந்தார். கடைசியாக ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டு வைசம்பாயனர், இவரிடம் மனத்தாபம் கொண்டு தன்னிடம் கற்றறிந்த வேதங்களை திருப்பித் தரும்படி கேட்டார். யாக்ஞவல்கியரும் தமது தவ வலிமையால் தாம் கற்றுணர்ந்த வேதத்தைக் கக்கி விட்டார்.
உபநி­த்துகளில் ஆன்மாவைக் குறித்த வி­யங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இவற்றில் பெரும் பகுதியும் கவுதம புத்தன் பிறந்த பிறகே ஏற்பட்டவை.
இனி ஸ்மிருதம் என்ற இரண்டாவது பிரிவில் ஆறு அங்கங்கள், புராணங்கள், தரும சாஸ்திரங்கள் (மனு, யாக்ஞவல்கியர்) முதலியோரால் எழுதப் பெற்றவை) முதலிய நூல்களும் ஆகமங்களும் தரிசன கிரந்த (நியாய, வைசே´க சாங்கிய யோக வேதாந்த) ங்களும் அடங்கும். இவற்றுள் ஆறு அங்கங்களாவன : வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கருமங்களைச் செய்யும் முறையை விவரித்து கூறுவனவும், வேத மொழியிலுள்ள சில தனிப்பட்ட சொற்களுக்கும் பொருள் உணர்த்துவனவுமாகும்.
இதே நூலில் 31 ஆம் பக்கத்தில், இந்து மதக் கொள்கைபடிக்கு ஏற்பட்டிருப்பது சாதித் தொழிலாலா? பிறப்பினாலா? என்பதைக் குறித்து ஆராய்வதே கடமை. இவ்வாறு ஆராய்ச்சி செய்யப் புகுங்கால் நினைவிற்கு வருகின்ற பிரமாண வாக்கியங்களாவன ;
சாதுர்வர்ண்யம் மாயருஸ்டம், குணகர்மவியாசக - பகவத் கீதை.
இதன் பொருள் : நான்கு வர்ணங்களும் என்னால் உண்டாக்கப்பட்டவை. அதுவும் குணங்களினாலும், கருமங்களினாலும் வேறுபாடன்றி மற்ற வேறு கிடையாது.
ஜன்மனா ஜாயதே சூத்ரா ; கர்மனா ஜாயதே த்விஜ ; (சங்கர விஜயம்). இதன் பொருள் : பிறக்கும்போது எல்லோரும் சூத்திரர்களாகவும், கர்மங்களாகிய கர்ப்ப தானம், உப நயனம் முதலியவைகளால் மறுபிறப்பாளனாகவும் ஆகின்றான். ஆனால் இத்தகைய பிரமாண வாக்கியங்கள் (சிற்சில இடங்களில் காணுபவை) நம்மவர்களை ஏமாற்றும்படிக்குள்ள அநேக தந்திரங்களுள் இது ஒரு வகையாகும்.
-(தொடரும்...)

No comments:

Post a Comment