மணிவாசகர் காலமும் கருத்தும் - மறுப்பும் நுட்பங்களும் நூல் வெளியீட்டு விழா - 25.11.2018
சைவ சித்தாந்தத்தின் முன்னோடிகள் - சோமசுந்தர நாயகர், மறைமலையடிகள், அழகரடிகள், ஆறுமுகனார்.
....
சிவாலயம் ஜெ. மோகன்
அகத்தியர் அகத்தியம் என்ற நூலை எழுதிய பின் அதை தன் துணைவியார் கையால் அரங்கேற்றம் செய்ய வைத்தார்.
சிகரம் எஸ். செந்தில்நாதன்
மாணிக்கவாசகரின் திருவாசகம் ஆதிசங்கரரின் மாயவாதத்திற்கு மறுப்பாக சொல்லப்பட்டது என்று கூறப்பட்டது. ஆதி சங்கரர் வாழ்ந்தது எட்டாம் நூற்றாண்டு.
மாணிக்க வாசகர் எழுதியது புத்தரின் மாயாவாதத்திற்கு எதிரனாது.
எனவே மாணிக்க வாசகரின் காலம் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு.
'நீதிமன்றங்களில் தமிழ் கூடாது. ஒரு சாட்சி நான் நூறு கொடுத்தேன் என்று பதிவு செய்தால், வழக்கறிஞர் நானூறு கொடுத்தேன் என்று பதிவு செய்துவிடுவார் . தமிழ் அவ்வளவு பலவீனமானது' என்று கூறினார்கள்.
அப்போது நீதியரசர் மகராசன் அவர்கள், ஆங்கிலத்தில் I saw a mango in the street என்று சொன்னால் 'தெருவில் மாங்கா மரத்தைப் பார்த்தேன்' என்று பொருள்.
‘I saw a man go in the street’ என்று கூட சொல்லக்கூடும்.
எனவே பலவீனங்கள் எல்லா மொழிகளிலும் உண்டு என்று கூறினார்.
தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் விநாயகர் வணக்கம் நரசிம்ம வர்மன் நடத்திய வாதாபி போரின் போது பரஞ்சோதியரால் கொண்டுவரப் பட்ட பொருள்களில் விநாயகர் சிலையும் ஒன்று. அதன் மூலமே விநாயகர் வணக்கம் வந்தது என்று எழுதினார்.
நரசிம்ம வர்மனின் தந்தை மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் திருநாவுக்கரசர். அவர் விநாயகர் வணக்கம் கூறுகிறார். எனவே விநாயகர் வணக்கம் 5 , 6 ஆறாம் நூற்றாண்டுகளில் வந்திருக்க வேண்டும்.
மாணிக்க வாசகர் விநாயகர் வணக்கம் சொல்லவில்லை.
.....
திருச்சியில் சுயம்பாகத் தோன்றிய லிங்கத்தை மாணிக்கவாசகர் பாடுகிறார்.
க.சு.பிள்ளை மலையாளத்தில் ஒரு கல்வெட்டை எடுத்துக்காட்டுகிறார். அதில் மாணிக்கவாசகரின் காலம் பற்றி குறிப்பிடப்படுகிறது. மலையாளம் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம். ஆனால் மலையாள மொழியில் மாணிக்க வாசகரின் காலம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்பதுதான் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment