காந்தியும் பகத்சிங்கும்
ஆசிரியர் வி.என்.தத்தா விலை ரூபாய் 160. சந்தியா பதிப்பகம்
வினாக்கள் :
1. பகத்சிங்கின் தூக்கை நிறுத்த காந்தி முயன்றாரா?
2. காந்தி இர்வின் உடன்படிக்கையை நிறைவேற்றப்பட பகத்சிங் பலிகடா ஆக்கப்பட்டாரா?
பகத்சிங் 1907 இல் லாகூரில் பிறந்தார். 1924 இல் கான்பூர் வருகிறார். ‘பிரதாப்’ என்ற புனைப் பெயரில் இதழ்களில் கட்டுரை எழுதுகிறார். பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார். பெல்காம் காங்கிரஸ் மாநாட்டில் பார்வையாளராகப் பங்கேற்கிறார்.
பஞ்சாபில் ‘அகாலி’ இதழில் பணியாற்றுகிறார். பகத்சிங்கிற்கு பஞ்சாபி, உருது மொழிகள் நன்றாகத் தெரியும்.
1929 இல் வெடிகுண்டு வழக்கு
பகத்சிங்- பி.கே. தத் ஆகியோர் வெடிகுண்டு வழக்கில் குற்றம்சாட்டப்படுகின்றார்கள். அதில் பகத் சிங் தானே கைது ஆகிறார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்படுகிறது. சிறையில் பட்டினிப் போராட்டம் நடத்துகிறார். 63 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்துகிறார் பகத்சிங்.
1928 இல் லாகூர் மாணவர் சங்கம் தொடங்குகிறார். அதை Hindu Socialist Republic என்று பெயர் மாற்றம் செய்கிறார்.
அப்போது நடந்த கலவரத்தில் லாலா லஜபதிராய் கடுமையாகத் தாக்கப்படுகிறார். அதன் காரணமாக அவர் இறந்தும் போகிறார். அவருடைய சாவுக்குக் காரணமான காவல்துறை அதிகாரி கே.பி.சாண்டர்ஸ் அவர்களை பகத்சிங் கொலை செய்கிறார். இது ‘லாகூர் சதி வழக்கு’ என்று கூறப்பட்டது. இந்த வழக்கில் பகத்சிங், குருதேவ், ராஜகுரு ஆகிய மூவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இவர்களுடைய கருணை மனு நிராகரிக்கப் பட்டது.
இந்த வழக்கு விசாரணைக் குறித்து ஏ.ஜி. நூரணி அவர்கள் அபத்தமான வழக்கு என்று எழுதுகிறார். விசாரணை மிகவும் மோசமாக நடைபெறுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் முன்னிலையில் வழக்கு நடத்தப்பட வில்லை.
ஏப்ரல் 28, 1929 பகத்சிங், பி.கே. தத் டெல்லி சட்டமன்றத்தில் பார்வையாளர்களாக அமர்ந்து இருக்கின்றனர். பொதுமக்கள் பாதுகாப்பு மசோதா, தொழிலாளர் தகராறு மசோதா ஆகிய இரண்டு மசோதாகள் தாக்கல் செய்யப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், இரண்டு குண்டுகள் வீசப்படுகின்றன. 6 பேருக்கு காயங்கள் ஏற்படுகின்றன. இரண்டு மசோதாக்களையும் கண்டித்து துண்டு அறிக்கைகளை வீசுகின்றனர். அந்த துண்டு அறிக்கையில்‘‘Hindustan Socialistic Republic Army’ என்று அச்சிடப்பட்டிருந்தது.
நீதிஅரசர் ஷோபா சிங் விசாரணையை மேற்கொள்கிறார். ஆசிப் அலி பகத்சிங்கிற்கு வழக்குரைஞராகப் பணி ஆற்றுகிறார். தொடக்கத்தில் எதிர் வழக்காட மறுத்துவந்த பகத்சிங் இறுதியில் ஒப்புக் கொள்கிறார். வாக்குமூலம் ஒன்றை நீதிமன்றத்தில் வழங்குகிறார் பகத்சிங். மிகவும் சிறப்பான, முக்கியத்துவம் வாய்ந்த வாக்குமூலம் என்று போற்றப்படுகின்றது. இந்த வாக்குமூலத்தை மெருகூட்டியவர் ஜவஹர்லால் நேரு என்று ஆசிரியர் இந்நூலில் குறிப்பிடுகிறார்.
இதில் பகத்சிங்கிற்கு ஆயுள் தண்டனை கிடைக்கிறது.
லாகூர் சதி வழக்கில் பகத்சிங்கிற்காக லாலா புனித்சிங் வாதாடுகிறார். இந்த வழக்கின் நடவடிக்கைகளை நீதிமன்றத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நேரடியாகப் பார்வையிடுகிறார். ஒன்பது மாதங்கள் வழக்கு நடைபெறுகிறது.
1919 ஆம் ஆண்டு சட்டம் பிரிவு 72 இன் கீழ் தீர்ப்பாயம் அமைக்கப்படுகிறது. தனக்கு வழக்குரைஞர் வேண்டாம் என்கிறார். வழக்குக்கு ஒத்துழைக்க மறுக்கிறார். அவரை சிறையில் சித்திரவதை செய்கிறார்கள்.
பிரிவு 111 இன் கீழ் மற்றொரு தீர்ப்பாயம் அமைக்கிறார்கள்.
முதல் குற்றவாளி ராஜகுரு. இரண்டாவது குற்றவாளி சுகதேவ். அவரின் வலதுகரமாக பகத்சிங் செயல்பட்டார்.
பகத்சிங் தந்தை பிரிவு கவுன்சிலில் மேல்முறையீடு செய்கிறார். தூக்குத்தண்டனை உறுதி செய்யப்படுகிறது.
கராச்சி காங்கிரஸ் மாநாடு முடியும் வரை காத்திருக்க வேண்டிய அவசிமில்லை. அதற்கு முன்பே தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று இர்வின் பிரபுவிடமிருந்து தந்து வருகிறது.
‘Holy Fox’ என்று இர்வின் அழைக்கப்பட்டார்.
வின்சன்ட் சர்ச்சில்- இர்வின் பிரபு இரண்டு ஆளுமைகள்
காந்தி
1909 இல் இலண்டனில் மாலிங் பிரபு இராணுவ அதிகாரியை வில்லியம்ஸ் மதன்லால் பிந்த்ரா கொலை செய்கிறார். இந்த கொலை காந்தியின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. வன்முறை தீர்வு ஆகாது என்ற கருத்திற்கு வருகிறார்
.
இலண்டனிலிருந்து கப்பலில் இந்தியாவிற்கு வரும்போது Hindu Swaraj’என்ற சிறு வெளியீட்டை எழுதுகிறார்.
காந்தி- இர்வின்
தூக்குத்தண்டனையை கொள்கை அளவில் எதிர்க்கிறார் காந்தி. இர்வினுடன் வாதிடுகிறார். தூக்குத் தண்டனை தீர்வாகாது என்கிறார். இது காந்தி இர்வின் முதல் சந்திப்பில் நடைபெறுகிறது
.
பிறகு பகத்சிங்கிற்கு தண்டனைக் குறைப்பு செய்யுங்கள் என்று மன்றாடுகின்றார். பெரும்பான்மை மக்களின் கருத்தை ஏற்று தண்டனை குறைப்புச் செய்ய வேண்டும் என்கிறார் காந்தி.
இத்தகைய வன்முறைகளை இனி மேற்கொள்ளமாட்டோம் என்று அந்த அமைப்பு உறுதிஅளித்துள்ளது என்று காந்தியடிகள் இர்வின் பிரபுவிடம் கூறுகிறார். இதை பகத்சிங் தன் கைப்பட காந்திஅடிகளிடம் எழுதிக் கொடுத்துள்ளார்.
இறுதியில் தூக்குத் தண்டனை குறித்த மறுபரிசீலனையைத் தள்ளிப்போடுங்கள் என்று கூறுகிறார்.
கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் பகத்சிங்கிற்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஆனால் அவரது செயலுக்குக் கண்டனம் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment