Friday, December 27, 2019

புத்தம் : தமிழருவி மணியன்

புத்தம் 
-தமிழருவி மணியன்

சார்வகம்- கடவுளை மறுப்பது, பார்த்ததை மட்டும் நம்புவது
புத்தம் - ஒன்றிலிருந்து மற்றொன்றை அனுமானிப்பது

ஆப்த வாக்கியம் - பிரசன்ன பெளத்தம் என்கிறார் இராமானுசர்.

அத்வைதம் - இறைவன் ஒருவன்தான் என்கிறார் ஆதி சங்கரர்
பல ஆன்மாக்களைப் பற்றி பேசுவது அசிட்டாவைதம் என்கிறார் இராமானுசர்

'ஆன்மா' என்று ஒன்று கிடையாது என்கிறார் புத்தர்.

நேபாளத்தின் அடிவாரத்தில் பிறந்தது புத்தம் - உலகமெங்கும் பரவியது.

வேதங்களில் முதன்மையானது ரிக் வேதம்.

ஞானத்தேடல் நடக்கிறது - கேள்விகளால் தொடங்கப்படுகிறது.

வேள்விவை நடத்துகிறது ரிக் வேதம் - வருணாசிரம வித்தை உண்டாக்கிற்று ரிக்வேதம். வருணாசிரமத்தின் ஆணி வேர் ரிக் வேதத்தில் உள்ளது.

புத்தம் கடவுளை ஏற்கவில்லை - இந்து மதம் புத்தரை அவதார புருசராக்கியது. விஷ்ணுவின் அவதாரமாக்கியது.

மஹாயாணம் புத்தனைக் கடவுளாகக் கொண்டது.

‘தீதும் நன்றும் பிறர் தரா வாரா’ என்பதுதான் புத்தம். ‘தம்மம்’ என்பது பதம்.

தேஜோ மய தேஜோ மய
காமோ மய காமோ மய
குருதோ மய குருதோ மய
தருமோ மய தருமோ மய
எண்ணங்கள் மனிதனை உருவாக்குகின்றன. கடவுளுக்கு இங்கு இடமில்லை.
காணாத கடவுள் என்கிறான் புத்தன். கடவுள் உண்டா? விடை கிடைக்காத கேள்வி என்றான் புத்தன். கடவுள் இல்லையா? உலகம் உண்டா இல்லையா? இறப்புக்கு பின் உலகம் உண்டா? இல்லையா?

விடை கிடைக்காத கேள்விக்காக வாழ்க்கையை தொலைத்துவிடாதே என்கிறான் புத்தன்.

எந்த நூலையும் கடவுள் அருளியதாகக் கூறினால் ஒப்புக்கொள்ளாதே. ஏனென்றால் உன் அறிவை சிந்திக்கத் தடுக்கிறது.

கோபர் நிகஸ் உலகம் உருண்டை என்றார்.

கலிலியோ அதை நிருபித்தார். பூமி சூரியனை சுற்றுகிறது என்பதையும் நிருபித்தார். அதனால் எரிக்கப்பட்டார்.

டார்வின் - குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்றார்.
'தான் கூறியது தவறு' என்று மண்டியிடச் சொன்னது மதம்.

'ஆன்மா நிரந்தரமானது' என்பதை ஏற்கமாட்டேன் என்றார் புத்தர். ஆன்மா நிரந்தரமானது என்றால் முக்திக்கு இடம் ஏது என்றார் புத்தர்.
ஆன்மா கிடையாது - மனம் என்று ஒன்று இருக்கிறது.

புத்தன் மறுபிறவியை ஏற்றுக் கொள்கிறார். ஊழ்வினையை ஏற்றுக் கொள்கிறார்.

அப்படியயன்றால் ஆன்மாவை ஏற்க வேண்டுமே!

மனம் என்று ஒன்று இருக்க வேண்டும்.
பக்தி இருந்தால் ஒழுக்கம் இருக்க வேண்டும்.

சாக்ரட்டீஸ் ‘Knowledge is virtue’ என்றார்.

(தொண்டுக்கென்றே அலைவான், கேலிக்கு ஆளாவான், கண்டுகொள்வாய் ஞான தங்கமே அவனை! கடவுளின் பாதியடா ஞானதங்கமே - கண்ணதாசன் எழுதிய பாடல்)

கோட்பாடு - தத்துவம்

வழிபாடு - நம்பிக்கை

‘Confessions’ பாவமன்னிப்பு

 வாழ்க்கை பிரவாகம் - இது உடலோடு முடிவடைவதில்லை.
வினை, விதிகளுக்கு இடமில்லை.

எண்வகை மார்க்கம் என்பதைக் கூறினார் புத்தர்.

போதி சத்துவன், புத்தன் என்று பல புத்தர்கள் இருந்தார்கள்.

‘இறந்த காலத்தில் எண்ணில புத்தர்கள்’ என்ற மணிமேகலை பேசுகிறது.
உங்களாலும் புத்தனாக ஆக முடியும். மகாத்மா என்பது தேவையைக் குறைத்துக் கொண்டு எளிமையாக வாழ்வது.

சிலுவை உருவாக்குவது எளிது - யேசுவை உருவாக்குவது கடினம்.

அப்பா- துட்சாதனன்

தாய்-மாயாவேதி

'கும்பினி' என்ற தோட்டத்தில் பிறந்தார் புத்தர்.

மகன் -ராகுலன்

அசோகர் 377 ஆண்டுகளுக்கு பின் ஒரு ஸ்தூபியை நிறுவினார்.

நிமித்திகன் புத்தர் பிறந்த போது கூறுகிறான்  : 1. உலகை ஆளுகிற துறவி அல்லது 2. சக்கரவர்த்தி ஆவான்

நான்கு நிகழ்வுகள் புத்தன் கண்ணில் படாமல் பார்த்துக்கொள் என்று பின்வருவன வற்றை நிமித்தன் புத்தனின் தந்தைக்குக் கூறுகிறான் : 1. வயோதிகர்கள் 2. நோயாளி 3. சாவை பார்க்கக் கூடாது 4. துறவியை பார்க்கக் கூடாது.

மகனுக்காக மூன்று காலபருவங்களுக்கு ஏற்ற வகையில் ரம்மியம், கம்மியம், சுரவதம் என்று மூன்று மாளிகைகளை அமைத்தார்.

திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார் தந்தை. பல பெண்கள் வருகிறார்கள். யசோதா என்ற பெண் மட்டும் தலை நிமிர்ந்து சித்தார்த்தனைப் பார்க்கிறாள். அவளை தன் மருமகளாக ஏற்கிறார் தந்தை. சித்தார்த்தனுக்கு மணம் முடிக்கிறார்.

நரி முயலை துரத்துகிறது - நரிக்கு உணவு தேவை. முயலுக்கு தன் உயிர் தேவை.

உணவை விட உயிர் முக்கியம். எனவே முயல் வெல்லும்.
தனக்கு குழந்தை பிறந்துவிட்டதை, ராகுலன் பிறந்துவிட்டானா என்று கேட்கிறான் சித்தார்த்தன்.

‘கந்தஹான்’ என்ற குதிரையை எடுத்துவர சொன்னான். கபிலவஸ்து எல்çயைக் கடந்து... நதியைக் கடந்தான்.

‘பிண்டிசேனன்’ என்ற அரசன் - உருவேலா கிராமம்
ஊரில் பிச்சை எடுக்கிறான் சித்தார்த்தன். பின் பிச்சை எடுப்பதை விட்டுவிட்டு சில பழங்களை உண்கிறான். பின் கிடைத்ததை உண்டான். பின் உண்பதையே நிறுத்தினான்.

-ஓர் இல் நெய்தல் கரங்கள் ... புறநானூறு

- படைத்தோன் மன்ற அப்பண்பிலாதவன் கடவுள் இன்னாலம்ம இவ்வுலகம் இனியக் காண் இயல்பு உணர்ந்தோரே...

கோரிக்கைகள்தான் துன்பத்திற்குக் காரணம்.

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

தொடக்கத்தில் புத்தரிடமிருந்து விலகிச் சென்ற ஐவர் மீண்டும் திரும்பிவந்தனர். பின்பு 60 பேர் ஆனார்கள்.

புத்தம் (தலைமை) சரணம் கச்சாமி
சங்கம் (அமைப்பு) சரணம் கச்சாமி
தம்மம் (கொள்கை) சரணம் கச்சாமி

இந்த அறுபது பேரும் பிக்குகள் ஆனார்கள்.

' நீங்கள் அனைவரும் சேர்ந்து செல்லாதீர்கள். தனித்தனியே செல்லுங்கள்' என்று சித்தார்த்தன் அறிவுரை கூறினார்.

ஒரு பிக்கு, ‘நான் புத்த ஞானம் பெற்றுவிட்டேனா’ என்று கேட்கிறார்.
‘எங்கே போகிறாய்’ என்று கேட்கிறார் புத்தர். ‘சூர்ணா என்ற பகுதிக்குப் போகிறேன்’ என்றார் பிக்கு.

‘உன் கருத்தை கேட்டு சிலர் வசை பொழிந்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டார் புத்தார்- ‘நல்லவர்கள் என்பேன். ஆயுதம் எடுக்காமல் என்னை வசை மாரி பொழிகின்றீர்களே நீங்கள் நல்லவர்கள்’ என்பேன்.

‘அவர்கள் ஆயுதம் எடுத்து வந்தால் என்ன செய்வீர்?’ ‘எப்போதோ கிடைக்க வேண்டிய முக்தியை உங்கள் கையால் கொடுத்தீர்களே நீங்கள் மிக நல்லவர்கள் என்பேன்’ என்றார் பிக்கு.

‘உனக்கு ஞானம் கிடைத்துவிட்டது’ ‘நீ போ’ என்றார் புத்தர்.

புத்தனின் ஒழுக்கம் களங்கமற்ற ஒழுக்கம்.

பாமர மக்களை பற்றி கண்ணதாசன், ‘மாலை எடுத்த கையால் மண் எடுக்க அச்சமுறார்’ என்று கூறினார்.

‘குற்றம் செய்யாதவன் சத்திமிட வேண்டியதில்லை’ என்றார் புத்தர்.
நான் கொலை செய்தேனா என்பதை காலம் சொல்லும் என்றார் புத்தர்.
காட்டுபன்றி உணவு உண்டார். இறந்து போனார் புத்தர்.


 










1 comment:

  1. Thamizharuvi manian about Buddha - புத்தர் பற்றி தமிழருவி மணியன்
    https://www.youtube.com/watch?v=2XudqdYxP2Q&t=368s

    ReplyDelete