நான் நாத்திகன் -ஏன்/? பகத்சிங் எழுதிய நூலில்....
லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்ற ஆங்கில பத்திரிக்கையில் அவரது தந்தையார் பிரசுரித்திருந்தார்.(பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகத்தார், ஈரோடு, 2.4.1934)
எனது தோழர்களிடையில் நான் ஒரு எதேச்சாதிகாரி (Autocrat) என்றே அழைக்கப்பட்டேன். எனது ஆருயிர்த் தோழரான பூதகேஸ்வர தத்தரும் ‘(R.K.Dutt)’கூட என்னைச் சிற்சில சமயங்களில் அவ்வாறு அழைத்ததுண்டு. சில சந்தர்ப்பங்களில் எனது தோழர்கள் என்னை ஒரு அடாதுடிக்காரன் என்று சொல்வதற்குக் கூட நாள் ஆளாயிருக்கிறேன்.....
... தகுதியற்ற தற்பெருமைதான் என்னை நாத்திகனாகும்படி தூண்டிற்றா? அன்றி, சர்வ ஜாக்கிரதையாக வியங்களைக் கவலைக் கொண்டு விரிவாக, ஆழமாக, நுணுக்கமாகப் பரிசீலனை செய்து , இராப்பகலாச் சிந்தித்தன் பலனாக நான் நாஸ்திகத்தை மேற்கொண்டு கடவுள் மறுப்பாளனாக ஆனேனா? என்ற பிரச்சனையைப் பற்றியே முதலில் நான் இங்கு விவாதிக்க விரும்புகிறேன்.
... ‘சர்வலோக சரண்யனாகிய ஜகதீசன்’ ஒருவன் அல்லது முழு முதற் கடவுள் ஒன்று உண்டு என்பதையே நான் அடியோடு மறுக்கிறேன்.....
டில்லி வெடிகுண்டு வழக்கு சம்பந்தமாகவும், லாகூர் சதி வழக்கு சம்பந்தமாயும் நடந்த விசாரணைகளின் போது எனக்கு ஏற்பட்டுள்ள பொதுஜன செல்வாக்கினால் நான் தகுதியற்ற தற்பெருமைக்கு - கொடிய அகங்காரத்திற்கு-இரையாகிவிட்டேன் என்பது எனது நண்பர்கள் பலரின் அபிப்பிராயம்.
....எனது நாத்திக உணர்ச்சி இவ்வளவு சமீப காலத்தில் தோன்றியதன்று பிறர் என்னைத் தெரிந்து கொள்ளாத சாதாரண வாலிபனாக இருந்த காலத்திலேயும் மற்ற எனது தோழர் பலருக்கு கடவுள் என்பதாக ஒன்று இருக்கிறது என்று தெரிவதற்கு முன்பேயும் தெய்வ நம்பிக்கையைவிட்டுவிட்டேன்.
.... என்னை சீராட்டி பாராட்டி வளர்த்த என்னுடைய பாட்டனார் மிகப் பிடிவாதமுள்ள வைதீக ஆரிய சமாஜி. ஆரிய சமாஜி வேறு எதற்கு வேண்டுமானாலும் இடங் கொடுப்பார். ஆனால் நாஸ்திகத்திற்கோ கடுகளவும் இடங் கொடாத பரம விரோதி.
..... எனது ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு லாகூர் டி.ஏ.வி. ‘(D.A.V)’கலாசாலையில் சேர்ந்து அங்குள்ள விடுதியில்‘(Boarding House)’’ஒரு வருடம் கழித்தேன். அங்கே காலை மாலை பிரார்தனையோடு, காயத்தரி மந்திரத்தை மணிக்கணக்காக ஜெபிப்பது வழக்கம்.
..... பின்னர் எனது தகப்பனாரோடு வாழ ஆரம்பித்தேன். மத வைராக்கியத்தைப பொறுத்த மட்டில் அவர் ஒரு தாராள நோக்குடையவராகவே இருந்தார். அவருடைய உபதேசங்களால்தான் நான் சுதந்திரத்திற்காக எனது வாழ்க்கையை தத்தஞ் செய்ய வேண்டுமென்று உணர்ச்சியும் உறுதியும் கொண்டேன். ஆனால் அவர் ஒரு நாஸ்திகரல்ல.....
.... நான் எனது தலைமயிரைக் கூட கத்தரித்துவிடாமல் (மதாச்சாரப்படி) வளர்த்துக காப்பாற்றி வந்தேனானாலும், சீக்கிய மதத்திலும் பிற மதங்களிலுமுள்ள சித்தாத்தங்களிலும் கொள்கைகளிலும் எனக்குக் கிஞ்சிற்றும் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுள் ஒருவர் உண்டு என்பதில் மாத்திரம் எனக்குப் பூரண நம்பிக்கையிருந்தது.
.... பிற்காலத்தில் நான் புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டேன். அங்கு முதன் முதலில் நான் சந்தித்த தலைவரானவர் கடவுள் உண்டு என்ற பூரண நம்பிக்கை உடையவர் அல்ல. என்றாலும் கடவுள் இல்லை என்றும் கூற அவருக்குத் துணிவு ஏற்படவில்லை. ... உனக்கு இஷ்டமிருந்தால் மாத்திரம் கடவுளை வணக்கு என்றே சொல்லிவிடுவார்.
........யான் சந்தித்த இரண்டாவது தலைவரோ பழுத்த ஆஸ்திகர். அவரது பெயர் கண்ணிடமிக் கத்தோபர் சசீந்திரநாத் சன்யால் ( கராச்சி சதி வழக்கில் சம்பந்தப்பட்டு ஆயுள்கால தீவாந்திர சிறை அறுபவித்துக் கொண்டிருப்பவர்). அவர் ‘பண்டி ஜீவன்’ அல்லது ‘அடிமை வாழ்க்கை’ என்றொரு நூல் எழுதியிருக்கிறார். ,அது மிகவும் புகழ்பெற்றது. அந்த நூலின் முதற் பக்கத்திலேயே கடவுளின் பெருமையைப் பற்றி உத்வேகத்தோடும் ஆத்திரத்தோடும் பாடப்பட்டிருக்கிறது.அதனுடைய இரண்டாம் பாகத்தின் கடைசி பக்கத்தில் வேதாந்தத் தத்துவங்கள் செறிந்த ஈஸ்வர ஸ்தோத்திரங்கள் காணப்படுகின்றன......
1925 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரப்பப்பட்ட ‘புரட்சித் துண்டுப்பிரசும்’ அவருடைய புத்திக் கூர்மையின் விளைவே என்று பிராசிகூசன் தரப்பாரால் எடுத்துக் காட்டப்பட்டது..... அந்த துண்டுப்பிரசுரத்தில் சர்வேஸ்வரனையும் அவனுடைய திருவிளçயாடல்களையும் போற்றி புகழ்வதற்காக ஒரு முழுப்பத்தி தத்தஞ் செய்யப்பட்டிருக்கிறது.
.... பெரும்புகழ் பெற்ற காக்கோரி தியாகிகள் நால்வரும் தங்களுடைய கடைசி வாழ்நாட்களை பிரார்த்தனையிலேதான் கழித்தார்கள்.
... ராஜன்ய லாகிரி என்பவர் சமதர்மத்தையும், பொதுவுடைமையையும் பற்றி விரிவாக ஆராய்ச்சி செய்திருந்தும் தனது கடைசிக் காலத்தில் கீதையிலிருந்தும் உபநியத்துக்களிலிருந்தும் சுலோகங்கள் ஜெபிக்க வேண்டுமென்று எழுந்த ஆர்வத்தை அவரால் அடக்க முடியவில்லை.
...அக்கூட்டத்தில் பிரார்தனை செய்யாத ஒருவரைக் கண்டேன். அவர் அடிக்கடி, ‘மனிதனின் பலவீனத்தாலும் கட்டுப்பட்ட அறிவாலும் உதித்ததுதான் தத்துவ சாஸ்திரம்’ என்று சொல்லுவார்.... அவர் கூட ஒருபோதும் கடவுள் உண்டென்பதை மறுத்துக் கூறத் துணிந்தாரில்லை.
....உணர்ச்சியும் உத்வேகமும் உச்சி முதல் உள்ளங்கால் வரையிற் கொண்ட தோழர்கள் -ஏன் தலைவர்கள்கூட எங்களைப் பார்த்து பரிகாசம் செய்ய ஆரம்பித்தார்கள். ....
அது எனது புரட்சி வாழ்க்கையில் புதியதொரு மாறுதலை உண்டாக்கிய சம்பவமாகும்.
‘கற்றுணர்-எதிராளிகளில் பலமான ஆட்சேபங்களுக்கு அச்சமின்றி ஆணித்தரமான ஆப்புகளும் கண்டனங்களும் கொடுப்தற்காகக் கற்றுணர். உன்னுடைய இலட்சியம், கொள்கை இவைகளின் போக்கைப் பரிசீலனை வாதங்களால் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு கற்றுணர்’......
..... உலகப் புரட்சி சம்பந்தமான பல திறப்பட்ட லட்சியங்களை ஆர அமர சீர்தூக்கிப் பார்ப்பதற்கு போதுமான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. நதன் அராஜகத் தலைவரான (Anarchist Leader) பக்குனின் என்பவரின் தத்துவங்களைக் கற்றேன். பொதுவுடமைத் தத்துவத்தின் தந்தையாகிய மார்க்சின் நூல்களில் சிலவற்றைக் கற்றுணர்ந்தேன். .....
லெனின், டிராஸ்கி இன்ன பிறரால் இயற்றப்பட்ட நூற்களில் பெரும்பாலானவற்றை அலசி அலசி ஆராய்ச்சி செய்தேன். அவர்கள் எல்லோரும் பச்சை நாத்திகர்களே.
பக்குனின் எழுதிய கடவுளும் ராஜ்யமும் (God and State) என்ற நூல் பூர்த்தி செய்யப்படாத துண்டு துணுக்குகளாக இருந்த போதிலும் விசயத்தை வெகு ருசிகரமாக விளக்குகிறது...... நிர்லம்ப சாமியால் எழுதப்பட்ட பகுத்தறிவு (Common Sense) என்னும் புத்தகத்தையும் படிக்க நேர்ந்தது. அதில் நாத்திக வாதம் தெளிவுபடும்படியில்லாமல் ஒரு தினுசாகக் கூறப்படுகிறது.
.....1926 ஆம் ஆண்டு முடிவில் இந்த பரபஞ்சத்தைப் படைத்து, காத்து, நடத்தி வரும் சர்வசக்தி வாய்ந்த கடவுள் ஒருவர் உண்டு என்ற கொள்கை அடியோடு ஆதாரமற்றதென உணர்ந்து கொண்டுவிட்டேன்.
No comments:
Post a Comment