Friday, December 27, 2019

ஈரோடு தமிழன்பனின் தமிழியல் - பேரா. மணிகண்டன்

ஈரோடு தமிழன்பனின் தமிழியல் 
- பேரா. மணிகண்டன்

தமிழ் நாட்டில் தமிழ் எப்படி இருக்கிறது?

 Miss தமிழ்த்தாயே! நமஸ்காரம்

கேரள கவிஞன் சத்தியானந்தம் அவர்கள் தமிழின் தொன்மை குறித்து ஒரு கவிதை மலையாளத்தில் எழுதியுள்ளார். அது போன்று ஒரு கவிதை தமிழில் காண முடியுமா என்று என் நண்பர் கேட்டார்.

ஏன் இல்லை ? பல கவிதைகளைக் கூறலாம். தமிழன்பன் அவர்களே தமிழின் பெருமைக் குறித்து பல கவிதைகளை எழுதியுள்ளார்.

- நான் யார் என்பதை மாகவிஞன் தமிழன்பன் அவர்கள்,

தமிழனின் குருதியிலிருந்து பிறந்தவன்
என்னை பிழிந்தால் தமிழாய் வழிவேன்
என்றார்.

தான் இறக்கும் போது எப்படி இருக்க வேண்டும் என்பதை,

 சடலத்தைக் கைப்பற்றி
என் சரிதத்தின் கடைசிப் பக்கத்தை
நெருப்புச் சுட சுட எழுதும் போது
அதை படைத்தவன் நான் முடிவதற்கு முன்
 இருசொட்டு தமிழ்த் தேன் துளிகள்
என் காதில் விழவேண்டும்
என்றார்.

முன்பெல்லாம் இறந்தவர் சடலம் போகும் போது தேவாரம் பாடுவார்கள். நம்மை பகுத்தறிவு கெடுத்துவிட்டதோ என்று தோன்றுகிறது.

தமிழின் தோற்றம் பற்றி
தமிழ்த்தாயே நீ பிறந்தது தைத்திங்களிலே சித்திரையிலா
வாரத்தில் எந்த கிழமையில்
வாரத்திற்குள் அன்று சேராத கிழமையுள்ளா
முல்லையா, குறிஞ்சியா....
தமிழ்த்தாயே உனக்கு நாடு இல்லை என்பது உனக்குத் தெரியுமா?
....
புறநானூற்றுக் கணக்கில்

மாய்ந்தவன் தமிழன்- மாய்த்தவன் தமிழன்
....
சரித்திரம் சொல்...
தமிழன்
வையகம் முழுவதும்
வன் பொருளாய்
மென் பொருளாய்
தமிழ் என்னும் நன் பொருள் மறந்து
....
‘Herman Decane and Heldon Pollac’ என்னும் ஆங்கில அறிஞர்களுக்கு எதிர் வினை ஆற்றிய ஒரே கவிஞன் தமிழன்பன்.

ஹர்மன் தீயாகனும்...

அழிந்துவரும் பட்டியலில் தமிழை சேர்க்க என்று நாகசாமி
 பாம்புகள் கோரிக்கை வைக்கின்றன என்று சாடுகிறார்.

ஒரு சலவை கடைக்கு போனார் தமிழன்பன். அங்கே எழுதியிருந்தார்கள்... அர்ஜன்ட் சலைவை, ஆடுநரி சலவை செய்யப்படும் என்று.  ஆடு, நரி சலவை என்று தமிழில் எழுதியிருப்பதை சுட்டிக்காட்டி கண்டிக்கிறார்.

என் நண்பர் ஒருவர் சைவ சமய நம்பிக்கைக் கொணடவர். அவர் ஒரு டேமை பார்க்கச் செல்கிறார். அங்கு அப்பர் டேம் என்று எழுதியிருக்கிறது.  அப்பர் டேம் இருக்கிறது, சுந்தரர் டேம், மாணிக்கவாசகர் டேம் எங்குள்ளது என்று கேட்கிறார் அவர்.

...
பாரதிதாசனோடு பத்தாண்டு பழகியவர் தமிழன்பன்.
சிவனடியார்களை கொண்டாடியவர் சேக்கிழார் தனது பெரிய புராணத்தின் மூலம்.

பாரதிதாசன் அவர்களும் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களைக் கொண்டாடுகிறார். ஏராளமான தமிழ்த் தொண்டர்களை போற்றி கவிதை எழுதியுள்ளார்.

இந்த நூற்றாண்டில் இருவர் பார்ப்பனர் செந்தமிழ்ப் பற்றுடையார் என்று பாரதியாரையும் பரிமாற்கலைஞரையும் போற்றுகிறார். அவருக்கு உ.வே.சா. மேல் கூட வெறுப்பு இருந்திருக்கிறது.

மனோன்மணியம் சுந்தரனார் பற்றி பாரதிதாசன்,

ஒன்று சொன்னாள் தமிழ் அன்னை அன்று ஒரு நாள் மாலை நேரத்தில்
யாரும் அறியாமற் என் காதில் ஒன்று சொன்னாள் தமிழ் அன்னை...
மன்றப் புலவரில் கைகாரன் தமிழ் மனோன்மணியம் செய்த சுந்தரன்
பன்றிகள் உளறின ஆரியம் உளவென்று
பளீரென்று சுந்தரன் சொன்னான் செத்தது என்று!

...
ஜீவாவிடம் பாரதிதாசன் ஒரு கவிதை சொல்லும் என்றார்.
ஜீவா ஒரு வெண்பா சொன்னார். அதற்கு விடையாக பாரதிதாசன்,
வாழ வகை செய்யும் மருந்து என்று பாராட்டினார்.
....

தமிழன்பன் தமிழ் நெஞ்சம் கொண்டவர்களைக் கொண்டாடுகிறார்.
பாரதியைப் பற்றி...
இருபதில் எது கவிதை என்ற கேள்விக்கு
ஒரு பதில் நீ!
....

பாரதிதாசனைப் பற்றி...
உன்னை கனகசபை எழுதிய போது
சுப்பிரமணிய துதி
பாரதி எழுதிய போது
கதர் ராட்டின பாட்டு !
ஈரோட்டு பெரியார் உன்னை எழுதிய போது
நீ புரட்சிக்கவி!
நீ நினைவை இழந்த போதும்
தமிழை மறக்காதவன் நீ

(அரசு மருத்துமனையில் பாரதிதாசன் அனுமதிக்கப்பட்டிருந்த போது அனுசுயா என்ற மருத்துவர் கோயிலுக்குச் சென்றுவிட்டு திருநீறை பூச முற்பட்டபோது மறுத்தவர் பாரதிதாசன். கடைசி வரை பகுத்தறிவாளனாகவே இருந்தவர் பாரதிதாசன்)

பெரியாரின் பேச்சு பற்றி க.நா.சுப்பிரமணியம் வியந்து பாராட்டுகிறார்.

பெரியாரின் பேச்சு ஒரு தனிக்கலை.
பெரியார் பற்றி தமிழன்பன்,
பெரியார் தமிழ் எழுத்தை சீர்திருத்தவில்லை
தலை எழுத்தை சீர்திருத்த வந்தார்
அழகான பற்கள் அவசியந்தான்
ஒரு வாயில் 300 பற்கள் இருந்தால்...
...

அம்மா என்னும் அருமைத் தமிழ் சொல்லும்
மெட்டுக்காரனால் கெட்டுப் போனது!

-பட்டுக்கோட்டை கலியாண சுந்தரத்தைப் பற்றி,
ஆடைகட்டி வந்த நிலவே என்று நிலவுக்கே ஆடை கட்டிப் பார்த்தவர் கல்யாணசுந்தரம் என்றார்.

நிலவைக் கூட நிர்வாணமாக பார்க்க விரும்பாதவர் கல்யாணசுந்தரனார்.
-ஜீவாவைப் பற்றி,

செங்கொடியோடு ஜீவா கம்பன் காவியத்துக்குள் நுழைவான்
எழுத்துக்கள் எழுந்து நின்று வரவேற்கும் அரிவாள் சுத்தியலோடு!

கி.ஆ.பெ.விசுவாதத்தைப் பற்றி...

உனக்குள் ஒரு கோவூர் கிழான்
ஓயாமல் அழுகிறான்...
பொன்னான் மேனியன் என்று உருவத்தை வர்ணிக்கிறார்.

-இன்குலாப் பற்றி, பாட நூல்களை விட, பாட்டாளிகளிடம் நெருக்கம் காட்டியவன் என்றார்

-கலைஞர் பற்றி, உன்னைக் குறுக்கினால் நீ குறளாய் இருப்பாய் என்கிறார்.

-பேரா. இளவரசு பற்றி...

அசல் தமிழன் இளவரசன்
தமிழ் இடியாகிறது
தமிழ்ப் பகை பொடியாகிறது!
அந்த சோமசுந்தர பாரதியாரின்
சுருக்கப்பதிப்பு
....

வை.சு. சண்முகம் செட்டியார்  அவர்கள்
பெரியாருக்கு ஒரு கார் வாங்கித் தந்தவர், மலேசியாவில் பத்தாயிரம் ஏக்கருக்குச் சொந்தக்காரர். வடநாட்டு விதவை பெண்மணி மஞ்சுளாபாய் அவர்களை மறுமணம் செய்து புரட்சி செய்தவர். பாரதிதாசனின் மகள் திருமணத்தின் போது தனது நகைகளை அணிவித்து  அழகு பார்த்தவர். வாழ்க்கையில் நொடித்து போய்விட்டார்.

அவரைப் பற்றி பாரதியார் ஒரு கவிதை எழுதியிருக்கார். அதை கேட்ட போது கொடுக்க மறுத்துவிட்டார்.

அந்த கவிதையை வை.சு. சண்முகம் வெளியூர் சென்றிருந்த போது, முடியரசனும், அரங்கண்ணலும் சென்று மஞ்சுளா பாய் அவர்களிடம் கேட்டுப் பெற்றனர். பாரதி தன் கைப்பட வை.சு. சண்முகம் செட்டியார் பற்றிய எழுதிய அந்த கவிதையை அப்படியே பிளாக் செய்து எழில் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டனர்.

அதைக் கண்ட வை.சு. சண்முகம் செட்டியார் முடியரசனையும் அரங்கண்ணலையும் தமிழ்த்துரோகி என்று திட்டினார். பிறகு சமாதானம் அடைந்த, நான் வலிவுற்ற நிலையில் இருக்கும் போது இக்கவிதையை போட்டு விளம்பரம் தேடிக்கொள்கிறான் என்று சொல்லுவார்கள் என்று கூறுகிறார்.

ஓடை கடலானக் கதை என்று இதை தமிழன்பன் அவர்கள், அரங்கண்ணல் பற்றிக் கூறுகிறார்.

-புலவர் இராமநாதன் அய்யா அவர்களை நானும் கவிஞரும் பெரியார் திடலில் சந்தித்து பேட்டி எடுத்தோம்.அதில் ஒரு வரி கூட குமுதம் இதழில் வரவில்லை.

பாரதிதாசனைப் பற்றி இராமநாதன் அவர்கள் ஆய்வு நூல் எழுதினார். அந்த ஆய்வுநூலில் பாரதிதாசன் முகம் தெரிந்தது என்று எழுதினார் தமிழன்பன்.

-கம்பனை பற்றி, இராமகாதையை  இராமனின் வில் வளர்த்ததை விட கம்பனின் சொல் வளர்த்தது அதிகம் என்றார்.

இளங்கோவடிகள் பற்றி,

மாதவி சித்ராபதியின் சிறந்த வெளியீடு
பருவ தாகத்தின் பரிசுப் பதிப்பு
துறவை இளங்கோ துறந்திருந்தால்
மாதவியின் மடியில் கிடந்தபடியே ஆயக்கலை 64க்கும்
அப்பால் சென்று ஆராய்ந்திருப்பார்!
....

கே.என். சிவராஜப் பிள்ளை
தமிழ்த்தாத்தாவை பதம்பார்த்தவர் கே.என். சிவராஜப் பிள்ளை. 1905 இல் கவிவாணர்க்கு விண்ணப்பம் என்று எழுதியவர். 1921 இல் பாரதி எழுதினார்.  கிரேக்க நாடகங்களை தமிழில் எழுதினார்.

தமிழில் இரண்டு இலக்கியங்களுக்குத்தான் இலக்கிய நூல் உள்ளது. ஒன்று திருக்குறள் -அதற்கு திருவள்ளுவ மாலை.
கம்பராமாயணம் - கம்பராமாயஒ கவுசுபம். கவுசுபம் என்றால் மணி, மாணிக்கம் என்று பொருள். இந்த இலக்கிய நூலை எழுதியவர் கே.என். சிவராஜப் பிள்ளை. அத்தகைய சிறப்பு வாய்ந்தவர்.

அதே போல் தமிழன்பன் ‘வணக்கம் வள்ளுவ’ என்று ஒரு நூல் எழுதியுள்ளார். அதனால்தான் தமிழன்பனை இராண்டாம் கே.என்.சிவராஜப் பிள்ளை என்று கூறுகிறேன்.

வள்ளுவனைப் பார்த்து, தமிழ்க் கிண்ணத்தில் உலகை எப்படி படைத்தாய் என்கிறார். வரைவின் மகளிர், பெண்வழிச் சேரல் ஆகியவை குறித்து வள்ளுவரை கேள்வி கேட்கிறார்.

ஒற்றைப் புரிதலை உடைத்தெறிந்த உன் படைப்புகளில்
புரிதல்களின் நெரிசல்களில் புரியாமல் தேடுகிறோம்!
ஏற்றத்தாழ்வு இல்லை என்றவன் எப்படி முதல் அடியில் நான்கு சீரும் இரண்டாம்அடியில் மூன்று சீரும் வைத்தான்?
இதில் எட்டாவது சீர் ‡ குறள் போல் உண்மையாக வாழ்கிறவன். அவன்தான் எட்டாவது சீர்!
...

இல்லாத கடவுள்கூட ஒருநாள் உடன்இருக்க என்னால் இயலாது அவனுக்கு தெரியாது என்றால்!

தமிழ் தெரிந்த கடவுள் இருந்தால் தமிழ்நாட்டில் அவனால் இருக்க முடியாது. ஏனென்றால் தமிழ் நாட்டில் தமிழ் இல்லை!













No comments:

Post a Comment