தடம் பதித்த எழுத்தாளர்கள்
சி.பா. ஆதித்தனார் - கணபதி சுப்பிரமணியம்:
1905 செப்டம்பர் 27 இல் காயல்புரியில் பிறந்தார்.
இலண்டனில் சட்டம் படித்துக் கொண்டிருந்த போது, சுதேச மித்திரன், வட இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாளிதழ்களில் கட்டுரைகள் எழுதினார்.
சிங்கப்பூர் தொழிலதிபர் உ. இராமசாமி நாடார் தனது மகள் கோவிந்தம்மாளை சி.பா. ஆதித்தனாருக்குத் திருமணம் செய்து வைத்தார்.
1942 இல் தமிழன் என்ற வார இதழைத் தொடங்கினார்.
1942 நவம்பரில் தினத்தந்தி என்ற நாளிதழைத் தொடங்கினார். மாலை முரசு, ராணி, ராணி காமிக்ஸ் போன்ற பல இதழ்களை நடத்தினார்.
நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கினார். மாத்தூர் விவசாயப் போராட்டத்தின் போது சிறை வைக்கப்பட்டார்.
சிங்கப்பூரில் வழக்குரைஞர் தொழில் செய்கிறார்.
1942 இல் இந்தியா திரும்புகிறார்.
சோ. இராமசாமி - நல்லாசிரியர் நடராசன்:
15.6.70 இல் துக்ளக் இதழைத் தொடங்கினார்.
குடிஅரசுத் தலைவர் கே.ஆர். நாராயணன் பரிந்துரையின் பேரில் நியமிக்கப்படும் 12 நாடாளுமன்ற உறுப்பினர் பதவி மூலம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பெற்றார்.
வாஜ்பேய் அவர்கள் தலைமை அமைச்சராக இருந்த போது மாநிலங்கள் அவை உறுப்பினராக நியமிக்கப் பட்டார்.
22 நாடகங்களை எழுதியுள்ளார். 200 இக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
துக்ளக் முதல் இதழில் இரண்டு கழுதைகள் பேசிக் கொள்வது மாதிரி கார்டுன் போட்டிருந்தார். அதில், ஒரு கழுதை சோ துக்ளக் பத்திரிகைத் தொடங்குகிறாராமே? என்று கேட்கும். அதற்கு மற்றொரு கழுதை, ஆம் நமக்கு எல்லாம் நல்ல விருந்து என்று பதிலளிக்கின்ற மாதிரி கார்ட்டூன் போட்டார்.
பத்திரிகை தொடங்க வேண்டும் என்று தோன்றிற்று. தொடங்கினேன் என்று விடையளித்தார்.
தினகரன் கே.பி.கந்தசாமி:
சி.பா. ஆதித்தனாரின் மருமகன். அவரது மகள் சரஸ்வதி அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். லோக் சபா, ராஜ்ய சபா என்பதை பாராளுமன்றம் என்று மாற்றினார் சி.பா. ஆதித்தனார். பாராளுமன்றம் என்பது தவறு. நாடாளுமன்றம் என்பதே சரி என்றார் அறிஞர் அண்ணா.
‘NEWS’ N - North, E-East, W-West, S-South.
சன் பேப்பர் மில் நிறுவனம், மற்றும் சேலம் பகுதியில் மாலைமுரசு போன்ற இதழ்களின் பொறுப்பில் பணிசெய்கிறார்.
அவரது மனைவி சரவஸ்வதி அம்மையார் மறைவுக்குப் பின் மாலைமுரசு மற்றும் சன் பேப்பர் மில்லிருந்து விலகுகிறார். அவருடன் 100 மேற்பட்டத் தொழிலாளர்கள் வெளியேறுகின்றனர். அவர்களுக்காகத் தொடங்கப்பட்டதுதான் தினகரன்.
ஒரு முறை காமராசர் விழாவில் அப்போதைய ஆளுனர் கே.கே.ஷா கலந்து கொள்கிறார். அவர் காமராசரைப் பாராட்டிப் பேசுகிறார். ஆனால் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மீது ஆளுநர் கடும் தாக்கு என்று செய்தி போடுகிறார். உண்மையில் ஆளுநர் அவ்வாறு பேசவில்லை. ஆனால் காமராசரைப் பற்றி பாராட்டிப் பேசினார் என்றால் எம்.ஜி.ஆரைப் பற்றி தாக்கிப் பேசினார் என்றுதானே அர்த்தம் என்றார் கே.பி.கே.
சேலம் ஜி. வடிவேலு அவர்களுடனான நட்பு.
தினமலர் இராமசுப்பையர்-கே.சி. வில்லியம்ஸ்:
திருவிதாங்கூரில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவாகத் 1951 இல் தொடங்கப்பட்டதுதான் தினமலர்.
திருவிதாங்கூர் சமஸ்தான திவான் ராமசாமி அய்யர், ‘அனைவருக்கும் கல்வி’ என்ற சட்டத்தை 1946 இல் கொண்டு வந்தார். உடனே அப்போதைய கல்வி இயக்குநர் என்ற பொறுப்பில் இருந்த அதிகாரிகளைச் சந்தித்து மூன்றே மாதங்களில் தான் இருந்த பகுதியில் 50 பள்ளிகளைத் தொடங்க காரணமாக இருந்தார் இராம சுப்பையர்.
திருவனந்தபுரத்தில் தொடங்கப்பட்டு, 1957 இல் திருநெல்வேலிக்கு தினமலர் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 12 கிளைகள் உள்ளன. அவர் 1984 இல் மறைந்தார்.
தனது நாளிதழில் தூத்துக்குடி துறைமுகம் வேண்டும் என்று தொடர்ந்து எழுதினார். அப்போதைய தலைமை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு கடிதம் எழுதினார். அவருடைய முயற்சியின் விளைவாக தூத்துக்குடி துறைமுகம் ஏற்படுத்தப்பட்டது.
கோவில்பட்டி, விளாத்திக்குளம் பகுதியில் நிகழ்ந்த தண்ணீர்ச் சிக்கலைப் பற்றி தொடர்ந்து தனது நாளிதழ்களில் செய்திகளை வெளியிட்டார். அதன் மூலம் தண்ணீர்ச் சிக்கலுக்குத் தீர்வு வந்தது.
திண்டுக்கல் மாவட்டம் என்ற கருத்தாக்கத்தை உருவாக்கியவர் இராமசுப்பையர். அவருடைய முயற்சியின் பயனாக திண்டுக்கல் மாவட்டம் உருவானது.
தினமணி ஏ.என். சிவராமன்- செளந்திரா மகாதேவன், பேராசிரியர் சதக் அப்துல்லா கல்லூரி:
அப்பாத்துரை ஞானு அய்யர் சிவராமன் என்பதுதான் ஏ.என். சிவராமன். தினமணியில் 54 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார்.
கீழாம்பூரில் 1904, மார்ச் 1 இல் பிறந்தார். 2001 மார்ச் 1 இல் இறந்தார். 86 ஆண்டுகள் வாழ்ந்தார்.
அன்னிபெசன்ட் அம்மையார் கைது செய்யப்பட்ட போது விடுதலை உணர்வு கொள்கிறார்.
1921 இல் ம.தி.தா கல்லூரியில் இண்டர் மீடியேட் படித்தார். காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்குகிறார். அதன் விளைவாக படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கல்லூரியை விட்டு வெளியேறுகிறார். கல்லிடைக் குறிச்சி வந்து சேருகிறார்.
டி.எஸ். சொக்கலிங்கம் எழுதுபொருள் அங்காடி நடத்தி வருகிறார். அவரிடம் வந்து சேருகிறார் ஏ.என்.சிவராமன்.
1934 இல் டி.எஸ்.சொக்கலிங்கமும் ஏ.என். சிவராமனும் தினமணி இதழைத் தொடங்குகின்றனர். பாரதி நினைவு நாளில் தினமணி தொடங்கப்படுகிறது.
டி.எஸ். சொக்கலிங்கம் ஆசிரியர், ஏ.என்.சிவராமன் துணை ஆசிரியர். 1944 இல் டி.எஸ். சொக்கலிங்கம் தினமணியிலிருந்து விலகுகிறார்.
பாபநாசத்தில் தொடங்கி புன்னைக்காயல் வரை செல்லுகிறது தாமிரபரணி ஆறு.
பத்மவிபூன் விருதி ஏ.என். சிவராமனுக்கு வழங்கப்பட்டது.
கீழாம்பூரில் 220 குடும்பங்கள் இருக்கின்றன. அதில் யாரும் அரசாங்க பணிகளில் இல்லை என்கிறார் ஏ.என். சிவராமன்.
No comments:
Post a Comment