டி.எம். நாயரின் ஸ்பெர்டெங் ரோடு பேச்சு
- திராவிட வாசிப்பு
நால்வருண பிறப்பாக முகத்தில் பிறந்தவன் பார்ப்பனன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசீயன், காலில் பிறந்தவன் சூத்திரன் என்று சொல்கிறது. நான் 30 ஆண்டுகளாக மருத்துவம் பார்க்கிறேன். இப்படி ஒரு பிறப்பை நான் பார்த்ததில்லை என்கிறார் டி.எம். நாயர்.
தியாகராய செட்டியார் ஒரு பெரிய தனவணிகர். ஒரு தேவாங்க பார்ப்பனர் பெயர் சொல்லி அழைப்பார். சம்புகன் கதைதான் தியாகராய செட்டியாருக்கு ஏற்படும் என்கிறார் டி.எம். நாயர்.
நான் மருத்துவர். ஆனால் கேரளாவுக்குப் போனால் சூத்திரன்தான். சங்கர் என்று ஜட்ஜ் இருந்தார். அவர் கேரளாக்காரர். அவரை கேரளாவில் உள்ள ஒரு நம்பூதிரி பார்பனன், ‘ஏய் சங்கரா! எப்படி இருக்கே?’ என்றுதான் கேட்பான்.
காலணா கொடுத்து ஒரு பூணூலை வாங்கி, எங்க ஊர் வந்து, எங்களை ஏமாற்றி, எங்களிடமே பொறுக்கி தின்கிறாய் என்று கூறுகிறார் டி.எம். நாயர்.
நாம் மதம் மாறலாம். சாதி மாறமுடியாது என்று நூறு ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார் டி.எம். நாயர்.
அறியாமை பேயை போக்க வேண்டும். நம்மவர்கள் பார்ப்பன தாசர்களாக இருக்கிறார்கள்.
நண்டை சுட்டு நரியை காவல் வைப்பது போல...
No comments:
Post a Comment