சுபவீ (மலேசியா)
உத்தர காண்டம் யாருக்கும் தெரிவிதில்லை. யாரும் பதிப்பிக்கவில்லை. குடும்பத்துக்கு ஆகாது என்று காஞ்சிப் பெரியவர் கூறிவிட்டார். அதனால் பதிப்பிக்கவில்லை என்கிறார்கள் பதிப்பகத்தார்.
உத்தர காண்டத்தில் 73 முதல் 76 பாடல்களில் சம்பூக வதைப்படலம் வருகிறது.
அதில் 74 ஆவது செய்யுள் தபஸ்தி காணும் சர்க்கம் என்று வருகிறது.
இராமர் அரசவைக்கு ஒரு பிராமணர் வருகிறார். தனது 14 வயது மகன் இறந்து போய்விட்டான் . காரணம் அங்கே ஒரு சூத்திரன் தவம் செய்கிறான் என்று அந்த பார்ப்பனர் இராமனிடம் கூறுகிறார்.
இராமன் நேராக அந்த இடத்திற்கு செல்கிறான். சம்பூகனைப் பார்த்து இராமன், நீ பிராமணனா என்று கேட்கிறான். மேலும் சொல்லுகிறான் தவம் செய்யும் போது பொய் சொல்லக் கூடாது என்றும் கூறுகிறான். சம்பூகன் நான் பிராமணன் இல்லை என்று கூறுகிறான். இராமன் சம்பூகனின் தலையை தன் வாளால் வெட்டி வீசுகிறான்.
சூத்திரன் கடவுளை வணங்கினால் தண்டனை. இதுதான் இராம ராஜ்யம்.
அமைச்சரவையில் ஒருவர் கேட்கிறார், நீங்கள் எப்படி சீதையை சேர்த்துக் கொண்டீர்கள் என்று. 10157 ஆவது பாடலில், ஊன் திறம உவந்தனன் என்று இராமன் சீதையைப் பார்த்து கேட்கிறான்.
ஆள் இல்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு வா என்று இராமன் இலட்சுமணனிடம் சொல்கிறான்.
உத்தர காண்டத்தில் சீதை அழத காட்சியை எப்ப சொல்லப்போகிறீர்கள்?
No comments:
Post a Comment