காரல் மார்க்ஸ் பற்றி எஸ். ரா. உரை
காரல் மார்க்ஸ் 18 நூல்கள் 7000 பக்கங்கள் .
70 புத்தகங்களை தேர்வு செய்தேன். அவற்றுடன் ஆறு, ஏழு மாதங்கள் வாழ்ந்தேன் என்று சொல்ல வேண்டும்.
ஸ்டாலின் ஆட்சியில், மார்க்ஸ், லெனின் படங்களுடன் கூடிய பேனர்களுடன் ஒரு நீண்ட பேரணி நடைபெற்றது.
காரல் மார்க்ஸ் அவர்களின் இறுதி ஊர்வலத்தில் 11 பேர் கலந்து கொண்டனர். அவருடைய உற்ற நண்பர் ஏங்கல்ஸ் அவர்கள் இரங்கல் உரை ஆற்றினார்.
இங்கிலாந்தில் ஹைவே கேட்டில் காரல்மார்க்ஸ் கல்லறை உள்ளது.
கல்லறையை துப்புரவு செய்வது கடினம். அங்கு பணியாற்றும் துப்புறவாளர்கள், தாங்கள் துப்புறவு பணி முடிந்ததும் ஒவ்வொரு நாளும் அவருக்கு செவ்வணக்கம் செய்வோம் என்று கூறினார்கள்.
தான் இறக்கும்போது தேசமற்ற மனிதனாக இறந்தார் காரல்மார்க்ஸ்.
பிரஷ்யா என்ற பெரிய கூட்டமைப்பில் இருந்த 18 நாடுகளில் ஜெர்மனியில் ரைன் நதி பாயும் டிரையர் என்ற நகரில் பிறந்தார். இந்த ஊர் தொழிற்சாலைகள் நிறைந்த ஊர்.
காரல் மார்க்ஸ் அப்பா ஒரு யூதர். ஒரு வழக்கறிஞர், வணிகர், அறிவாளி.
தாயார் டச்சுக் குடும்பத்தைச் சேர்ந்தவர். காரல்மார்க்ஸ் உடன் பிறந்தவர்கள் 9 பேர். 5 பேர் இறந்துவிட்டனர்.
காரல் மார்க்ஸ் அக்கா சோபியா.
காரல் மார்க்ஸ் அவர்களின் தங்கை மூர்க் எமிலி.
கிறுத்துவ மதத்திற்கு மாறலாமா என்று யோசிக்கிறார் காரல் மார்க்ஸ் அவர்களின் தந்தை. அவருடைய பொருளாதாரம் மாறியது. அவரின் பெயர் மாறியது. திருச்சபை வரி பெற்றுக் கொண்டார்.
12 வயது வரை வீட்டில் கல்வி கற்றார் காரல் மார்க்ஸ்.
தன் தாய் குறித்து காரல் மார்க்ஸ் அவர்கள், என் தாய் பாசமானவர். கண்டிப்பானவர் என்று எழுதுகிறார்.
´ப்னாசிம் என்பது காரல் மார்க்ஸ் படித்த பள்ளியின் பெயர்.
காரல் மார்க்ஸின் தந்தையார் நிறைய படிக்கக் கூடியவர். நண்பர்களை அழைத்து நிறைய விருந்து கொடுப்பார். அந்த வகையில் நண்பரானவர் வெஸ்பாலன் குடும்பம். இவர்தான் பிற்காலத்தில் காரல்மார்க்ஸின் மாமனார். எட்கர், ஜென்னி அவரின் குழந்தைகள்.
முற்போக்கான குடும்பம்.
மார்க்ஸ் கவிஞராக இருந்தார்.
நீ குழந்தையாக இருந்த போதே உன்னை எனக்குத் தெரியும் என்றார் ஜென்னி.
காரல் மார்க்சும் ஜென்னியும் 38 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தனர்.
சமூகத்தைப் பற்றி மட்டும் சிந்தியுங்கள் என்று அனுமதி கொடுத்தவர் ஜென்னி.
மார்க்சின் வலது கை ஜென்னி. இடது கை ஏங்கல்ஸ்.
போன் பல்கலைக் கழகம் - நீராவி கப்பலில்தான் கல்லூரிக்குச் செல்லவேண்டும். படகில் ஏற்றிவிட வருவார் காரல்மார்க்ஸ் தந்தை. சட்டம் படி என்றார் காரல்மார்க்சின் தந்தை.
தந்தையை ஏமாற்றினார் காரல்மார்க்ஸ்.
குடிகாரர் சங்கத்தில் உறுப்பினரானார். பீர் குடிப்பார், கவிதை படிப்பார், சீட்டு ஆடுவார். இந்த சங்கத்தில் யஹகல் பற்றி விவாதிப்பார்கள். தத்துவத்தில் ஈடுபாடு கொண்டனர்.
மாறிக் கொண்டே இருப்பது உலகம் என்றார் யஹகல். எல்லாமே மாறிக் கொண்டே இருக்கிறது. அதன் உரு மாறிக் கொண்டே இருக்கிறது. இதை தவிர்க்க முடியாது என்றார் ஹகல்.
உலகம் என்ற ஒன்று இல்லாவிட்டால் கடவுள் என்ற ஒன்றுக்கு என்ன தேவை என்று கேட்டார் ஹகல். எனவே உலகத்தை உருவாக்கியதில் கடவுளுக்கு ஒரு பங்கு இருக்கிறது. அந்த கடவுள் எப்படி இருக்கிறார்? நேரடியாக இல்லை. ஒரு சக்தியாக இருக்கிறார்.அவர்தான் மன்னராக இருக்கிறார் என்று யஹகல் சொன்னார்.
உடனே பிருஷ்யா அரசு, யஹகலை கொண்டாடத் தொடங்கியது.
மார்க்ஸ் ஹகலைப் படித்தார்.
எல்லாமே மாறும் என்றால் இந்த மன்னனும் மாறுவானே! மாற்ற வேண்டுமே என்று சிந்தித்தார் மார்க்ஸ்.
மன்னன் மாறமாட்டான். சட்டம் மாறாது என்றால் யஹகல் சொல்வது போதுமானதாக இல்லை என்று கருதினார் காரல் மார்க்ஸ்.
தத்துவத்தின் பக்கம் போனார் காரல் மார்க்ஸ். அந்த சிந்தனை திருப்பத்தைக் கொடுத்தவர் ஹகல்.
பெர்லின் பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்தார். டாக்டர் பட்டம் பெற்றார். அவரது ஆய்வு நாத்திகத்தைப் பற்றியது. இந்த உலகம் கடவுளால் படைக்கப்பட்டதன்று. கடவுள் என்பது கற்பனைதான்.
அது எப்படி நிறுவனமயமாயிற்று என்றால் இந்த உலகத்தின் ஆதாரம் என்ன? தனித்துவம் என்ன? என்பது பற்றி ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றார்.
தன்னுடன் சண்டை போடுகின்ற மாணவர்களை மிரட்டுவதற்காக துப்பாக்கி வைத்திருந்தார் காரல் மார்க்ஸ்.
இதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படுகிறார் . துப்பாக்கி பறிமுதல் செய்யப்படுகிறது.
காட்டிக் கொடுத்தவனை நேருக்கு நேர் வா என்று சண்டைக்கு அழைக்கிறார்.
செல்வமும் (இலாபமும்), வறுமையும் ஒரே தொழிற்சாலையில் தான் தோன்றுகிறது என்று கண்டுபிடித்தார் காரல் மார்க்ஸ்.
ஜெர்மன் ஒரு தத்துவத்தின் நாடு.
இமானுவேல் காண்ட் - யஹகலின் குரு. மனிதனின் அனுபவம்தான் உலகம் என்றார் காண்ட்.
உலக அரசியலைத் தெரிந்துகொள்ள பொருளாதாரத்தை பயில விரும்பினார். பொருளாதாரத்தை தனியாகப் படிக்க முடியாது. மனித குல வரலாற்றைப் படிக்கிறார்.
மார்க்சைக் கொண்டாடினார் ஜென்னியின் அப்பா. இரவெல்லாம் மார்க்சுடன் பேசிக் கொண்டே இருப்பார் ஜென்னியின் அப்பா. நான் ஜென்னியோடு பேசியதை விட அவர் அப்பாவோடு பேசியதுதான் அதிகம் என்றார் காரல் மார்க்ஸ். சிந்தனை வாதிகளை ஜென்னியின் அப்பாவுக்கு மிகவும் பிடித்திருந்தது.
காரல் மார்க்சை திருமணம் செய்ய ஏழு ஆண்டுகள் காத்திருந்தார் ஜென்னி.
அந்த ஊரிலேயே மிகவும் அழகான பெண் ஜென்னி.. ஜென்னியின் உறவினர் ஒருவர் உயர் அதிகாரியாக இருக்கிறார். ஜென்னியை திருமணம் செய்துகொள்ள தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறார். ஆனால் ஜென்னி திருமணம் செய்துகொள்ள மறுத்துவிடுகிறார்.
காரல் மார்க்சின் தாயார் ஒரு பழைமைவாதி. அவர் சொல்கிறார், நாம் யூதர்கள். நம் வீட்டுக்கு வரும் பெண் யூதர் பெண்ணாக இருக்க வேண்டும் என்கிறார்.
ஜென்னிக்கு 9 மொழிகள் பேசவும் எழுதவும் தெரியும்.
தம் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாரிஸ் போகிறார். கலைஞர்களின் கூடாரமாக இருப்பது பாரிஸ். பாரிசுக்கு போனால் சுதந்திரத்தை அறியலாம். புதிய கருத்துகளை அறியலாம்.
இவர்களின் திருமணம் எளிய முறையில் நடந்தது. மார்க்ஸ் வீட்டிலிருந்து யாரும் கலந்துகொள்ள வில்லை. இந்த திருமணம் பதிவு திருமணம். திருமணத்திற்கு வந்தவர்கள் 5 பேர்தான். திருமணத்தை திருச்சபையில்தான் பதிவு செய்ய வேண்டும்.
மார்க்சின் காதலுக்காக காத்திருந்தேன். எனக்கு தெரியும், மார்க்ஸ் ஒரு நாள் உலகத்தின் மகத்தான மனிதராக வருவார். அவருக்கு துணை செய்வதற்காகத்தான் நான் காத்திருந்தேன் என்கிறார் ஜென்னி.
ஜென்னியின் அப்பா மார்க்ஸிடம், நீங்கள் எப்போதும் புத்தகம், சிந்தனை என்று இருக்கிறீர்கள். நீங்கள் என் மகளுடன் ஹனிமூன் போங்கள். சுவிட்சர்லாந்து போங்கள் என்று கூறி அனைத்து செலவுகளையும் தானே செய்கிறார்.
பணத்தை ஜென்னியிடம் கொடுத்து சுவிட்சர்லாந்து அனுப்பி வைக்கிறார்.
படிப்பதற்கு நிறைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு போனார் காரல்மார்க்ஸ். இந்த புத்தகங்களை நாம் இருவரும் சேர்ந்து படிக்கலாமா என்று கேட்டார் ஜென்னி. உடல் கவர்ச்சி மட்டும் ஹனிமூன் அல்ல. உனக்கு இணையான அறிவுத் துணையகவும் நான் இருப்பேன் என்றார் ஜென்னி.
அறையில் காரல் மார்க்சும் ஜென்னியும் ஆளுக்கொரு புத்தகம் படித்துக் கொண்டிருப்பார்கள். நீங்க இரண்டு பேரும் சேர்ந்து புத்தகம் படிப்பதற்கு நூலகம் செல்ல வேண்டியதுதானே? ஏன் சுவிட்சர்லாந்துக்கு வந்தீர்கள் என்று நண்பர்கள் கேட்டார்கள்.
யாராவது நண்பர்கள் வருவார்கள் என்பதற்காக அறையை எப்போதும் பூட்டாமல் செல்வார் காரல் மார்க்ஸ். இதனால் அறையில் இருந்த பணம் திருடு போய்விட்டது. பரவாயில்லை. நாம் இருவரும் உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக ஆகிவிட்டோமல்லவா என்றாராம் ஜென்னி.
அங்கு அதன்பின் நான்கு மாதங்கள் தங்கியிருந்தனர். அங்குதான் உபரி கோட்பாடு‘(Surplus theory)’ உருவாகிறது.
பத்திரிக்கை தொடங்க வேண்டும். அதன் ஆசிரியராக வேண்டும் என்று நினைத்தார் காரல் மார்க்ஸ்.
அவருடைய கட்டுரைகள் அரசுக்கு எதிராக இருக்கும். அரசு தணிக்கை முறை இருக்கும். பத்திரிகையிலிருந்து விலகினார்.
காரல் மார்க்சுக்கு முதல் மகன் பிறந்தார். ஹலன் தேமூட்ஸ் என்ற பணிப்பெண் கடைசி வரை காரல் மார்க்சு குடும்பத்துடன் இருந்தார்.
கவிஞர் ஹன்ட்ரிச் ஹநே அவர்கள் மிகப் பெரிய கவிஞன். அந்த தேசம் போற்றும் கவிஞன். நாடே அவரைக் கண்டு பயப்படும். அரசு அஞ்சும். புரட்சியைப் பாடுகிற கவிஞர். காரல் மார்க்ஸ் அவர்களை பார்க்க அடிக்கடி வீட்டிற்கு வருவார். காரல் மார்க்சின் குழந்தைகளை குளிப்பாட்டி விடுவார்.
காரல் மார்க்ஸ் பெல்ஜியம் போகிறார். ஏங்கல்ஸ் வந்து சந்திக்கிறார். ஒரு உணவகத்தில் சந்திப்பு நடைபெறுகிறது. இருவரும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர். காரல் மார்க்ஸின் கடைசி மருத்துவச் செலவு வரை ஏற்றுச் செலவு செய்தார் ஏங்கல்ஸ்.
தனது சொத்துக்களை நான்காகப் பிரித்து மார்க்சின் குழந்தைகளுக்கு எழுதி வைத்தார் ஏங்கல்ஸ். கடைசி வரை திருமணம் செய்து கொள்ளாதவர் ஏங்கல்ஸ்.
பார்மன் என்ற ஊரில் குடும்பம் இருந்தது. கவிதை எழுத தொடங்கினார் ஏங்கல்ஸ்.
ஏங்கல்ஸின் தந்தை மான்செஸ்டரில் விக்டோரியா மில்லை வாங்கினார்.
ஏங்கல்ஸை வேலை செய்ய அனுப்பினார் அவருடைய தந்தையார்.
மார்க்ஸ் எழுதுவதற்கு கடைசிவரை உதவி செய்தார் ஏங்கல்ஸ்.
பிரயஸல்ஸ் நகருக்கு இணைந்து போனார்கள்.
மனித குல வரலாற்றை இருவரும் இணைந்து எழுதினார்கள்.
உழைப்புதான் மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்தியது என்றனர்.
முதலில் மனிதர்கள் வேட்டையாடினார்கள். வேட்டையாடி பொருள்கள் எல்லோருக்கும் சொந்தம். கூடி வேட்டையாடுவது, கிடைப்பதை எல்லோரும் பகிர்ந்து கொள்வது . இதுதான் உலகத்தின் நியதி என்றனர்.
உழைப்பை பகிர்ந்து கொண்டார்கள்.
கருவிகளாக வேல், அம்பு இருந்தன. அவற்றைச் செய்யக் கூடியவர்கள் வேட்டைக்குச் செல்வதில்லை. வேட்டையில் ஒரு பங்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் அவர்கள் தொழிற் கலைஞர்கள் ஆனார்கள்.
கருவிகள் மாறத் தொடங்கியது. விவசாயக் கருவிகள் வரத் தொடங்கின. வேட்டையை விட்டுவிட்டு வேளாண்மை சமுகமாக மாறினார்கள்.
வேளாண் சமூகத்தில் யாருக்கு நிலம் இருக்கிறது? யார் கூலியாக வேலையக செய்யப் போகிறார்? யார் அதனுடைய பயனை அடையப் போகிறார்கள்?
மெல்ல அடிமைச் சமுதாயம் உருவாயிற்று. மனிதனை மனிதன் அடிமைப் படுத்தினான். நிலம் விற்கப்படும்போது நில அடிமைகளும் விற்கப்படுகிறார்கள். நில அடிமைகளுக்கு மீட்சியே இல்லை.
காரல் மார்க்ஸ் அவர்களை நாடு கடத்தவேண்டும் என்று அரசு முடிவெடுத்த போது தன்னை ‘Stateless Person’என்று அறிவித்தார்.
தனது 7 குழந்தைகளில் 4 குழந்தைகளை இழந்தார்.
மார்க்ஸ் ஒரு இலக்கிய வாதி. எல்லா இலக்கியங்களையும் படிப்பார்.
கம்யூனிசம் சித்தாந்தம் உருவாக்கக் குழுவில் 14 பேர் இருந்தனர். கேள்வி பதில் முறையில் முன் வரையறை செய்யப்பட்டது.
200 மொழிகளில் 24 பக்க அறிக்கைதான் கம்யூனிஸ்ட் அறிக்கை.
ஏங்கல்ஸ் 2 வரையறைகளையும் யஹக்ஸ் 1 வரையறைகளையும் உருவாக்கினர்.
இதையயல்லாம் இணைத்து முழுவரையறை உருவாக்கினார் மார்க்ஸ்.
இலண்டனில் ஜெர்மன் மொழியில் 800 பிரதிகள் அச்சிடப்பட்டன. பச்சை நிற வண்ண அட்டை. அதில் யார் பெயரும் இருக்காது.
200 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளனர்.
உழைப்பு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் புரட்சியை ஏற்படுத்த முடியும்.
பிரஞ்சு புரட்சி கண்டு மார்க்ஸ் மகிழ்ச்சி அடைந்தார்.
பிரஞ்சு எழுச்சிக்கான காரணங்களைக் கண்டு எழுதினார் மார்க்ஸ்.
சூழலும் எழுச்சியும் வர வேண்டும்.
ஏங்கல்ஸ் முடிவு செய்தார். மான்செஸ்டருக்கு மார்க்ஸை அழைத்துச் சென்றார்.
மூன்று தேசங்கள் மார்க்ஸ் உருவாக்கியது. பிரிட்டன் பொருளாதாரத்தை உணர வைத்தது.
மார்க்ஸ்- டார்வின்
மார்க்ஸ் டார்வினுக்கு கடிதம் எழுதினார். டார்வினை பாராட்டி கடிதம் எழுதினார்.
டார்வின் புத்தகம் ஒரே நாளில் 2000 படிகள் விற்றது. டார்வினை ஏற்றுக் கொண்டதுமாதிரி மார்க்ஸை உலகம் ஏற்றுக் கொள்ளவில்லை.
மூலதனத்தின் ஒரு தொகுதிதான் மார்க்ஸின் வாழ்நாளில் வெளிவந்தது.
மற்ற தொகுதிகளை யயல்லாம் ஏங்கல்ஸ்தான் தொகுத்து வெளியிட்டார்.
யார் வேண்டுமானாலும் பிரிட்டனுக்கு வரலாம். பிரிட்டனில் தொழில் தொடங்கலாம். சிறந்த சந்தையாக இருந்தது.
உணவு இல்லாத, வசிக்க இடம் இல்லாத, நோய் வாய்ப்பட்டிருந்த மக்கள் இவை யயல்லாவற்றையும் பார்த்தார் மார்க்ஸ்.
இலண்டனில் 5000 இலிருந்து 10000 குதிரை வண்டிகள் ஓடும். குதிரை சாணத்தை அள்ளி தேம்ஸ் நதிகளில் போட்டுவிட அராசங்கம் முடிவு செய்தது. அந்நதி கழிவு நதியாக மாறியது. காலரா பரவியது.
அயர்லாந்தில் பஞ்சம். சொற்பக் கூலி கொடுத்து அதிக லாபம் அடைந்தனர். குழந்தைகள் தொழிலாளிகள் தோன்றினர்.
டிக்கன்ஸ் ஒரு நாவல் எழுதினார். அவரும் ஒரு குழந்தை தொழிலாளியாக இருந்தார். இருட்டறையில் குழந்தைகள் வேலை செய்தனர்.
இங்கிலாந்தின் முதலாளித்தத்துவத்தை பயிலத் தொடங்கினார். பிரிட்டிஷ் மியூசியத்தில் உள்ள ரீடிங் ரூமை பயன்படுத்தினார்.
No comments:
Post a Comment