அம்பேத்கர் பார்வையில் சட்ட எரிப்பு : அதிஅசுரன்
1931 மார்ச்சு 27 முதல் 30 வரை கராச்சியில் காங்கிரசு மாநாடு. பிரஜா உரிமை திட்டம் என்று ஒன்று தீர்மானமாக அறிவிக்கப்படுகிறது. அதில் மக்களின் பழக்கவழக்கங்கள் பாதுகாக்கப்படும் என்று குறிப்பிடுகின்றனர். இது குறித்து 1931 ஏப்பரல் 13 இல் Associate Press’ என்ற செய்தி நிறுவனத்தில் செய்தி வருகிறது.
19.7.1931 குடிஅரசு இதழில் பெரியார் கண்டித்து அறிக்கை எழுதுகிறார்.
26.4.1947 இல் 'விடுதலை'யில் அறிக்கை -ஆகஸ்ட் துரோகிகள்
1930 களில் சட்ட மறுப்பு இயக்கம், அந்நியநாட்டுப் பொருள்கள் புறக்கணிப்பு போன்ற போராட்டங்களை காங்கிரசு நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரசின் முக்கிய தலைவர்கள் ஆங்கில அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். இதை பெரியார்,
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், ஆங்கில அரசுக்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.
கோபால்சாமி அய்யங்கார் ஜமீன்தார்களுக்கு ஆலோசகராக இருந்து வந்தார்.
டி.டி. கிருஷ்ணமாச்சாரி -‘Home Appliance’பொருட்களை இங்கிலாந்திலிருந்து இறக்குமதி செய்து விற்று வந்தார்.
ஆனால் காந்தியார், நோயாளியான தன் மனைவிக்கு வெளிநாடுகளிலிருந்து மருந்து பொருட்களை வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதனால் அவருடைய மனைவியை காப்பாற்ற முடியாமல் போய்விட்டது.
- அரசியல் நிர்ணயசபை உறுப்பினர்களாக இவர்களுக்குப் பதில், முத்துராமலிங்கத் தேவரை அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக அனுப்பியிருக்கலாம்
இதையெல்லாம் தன் அறிக்கையில் குறிப்பிடுகிறார் பெரியார்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை முதலில் எழுதியவர் B.N. ராவ்.
இந்திய அரசியலமைப்பு சட்ட முன்னரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், ஜபர்சன் (அமெரிக்காவின் அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதியவர்) கருத்தான ‘தேசிய இனம் என்பது தலைமுறை’ என்பதை மேற்கோள் காட்டி பேசுகிறார்.
கனடா நாட்டின் சட்டத்தை எளிதில் மாற்றலாம் என்பார்கள். அதைவிட எளிதாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை 3 இல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால் மாற்றிவிடலாம் என்று கூறுகிறார் அம்பேத்கர்.
இதையும் பெரியார் எதிர்க்கிறார்.
-1953 செப்டம்பர் 9 இல், ஆந்திர பிரிவினை விவாதம் வரும் போது, டாக்டர் அம்பேத்கர் அவர்கள், 'நான் ஒரு வாடகை குதிரை போன்றுதான் இந்த சட்டத்தை எழுதினேன். இதை எரிக்கும் முதல் ஆளாக நான் இருப்பேன்' என்று கூறுகிறார்.
'தாழ்த்தப்பட்ட மக்களை பாதுகாக்க செய்யப்பட்ட நடவடிக்கைகள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை' என்றார் அம்பேத்கர்.
தனித்தமிழ்நாடு
‘வலிமையான இந்தியா’ என்ற கருத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்.
1952 கான்பூரில் நடைபெற்ற அகில இந்திய பிற்படுத்தப்பட்டவர்கள் சம்மேளனத்தின் செயலாளராக பெரியார் இருந்தார்.
22.9.1944 அம்பேத்கர் சென்னை வருகிறார். பெரியாரை சந்திக்கிறார்.
திராவிடநாடு கோரிக்கையை ஆதரிக்கிறார். 'மகாராஷ்ட்ராவையும் திராவிடநாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்கிறார் அம்பேத்கர்.
30.9.1944 விடுதலை - எம். என். ராவ்
இந்து மகாசபை தலைவர் மூஞ்சே- பொது உடன்படிக்கை பொது வேலைத்திட்டம் ஏற்படுகிறது.
அதில்,
இந்து - என்பதில் மத ஆச்சாரம் கூடாது.
இந்தியர் என்பது இனம், மதம் மாறக் கூடாது.
பார்ப்பனியம் ஒழிக்கப்பட வேண்டும்
பழக்கவழக்கங்கள், சம்பிரதாயங்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும்.
பார்ப்பனர் ஒருத்தர் கூட அமைச்சராக இருத்தல் கூடாது.
No comments:
Post a Comment