Friday, December 27, 2019

பாரதிதாசன் -மறைமலை இலக்குவனார்

பாரதிதாசன் : மறைமலை இலக்குவனார்
தமிழ் இணையப் பல்கலைக் கழக உரை

ஒரு மணி நேரத்தில் பாரதிதாசனைப் பற்றி பேசுவது என்பது பசிபிக் கடலிலிருந்து ஓர் ஆழக்கு தண்ணீர் எடுத்தல் போன்றது.

சென்னை தங்க சாலையில் ஏழு கிணறு என்று ஒரு பகுதி. அது வள்ளலார் வாழ்ந்த பகுதி.

கோபால கிருஷ்ண பாரதியை ஒரு புளிய மரத்தில் கட்டி வைத்து அடிக்கிறார்கள். அதைக் கேள்விபட்டு அங்கு வருகிறார் மாயூரம் வேதநாயகம் பிள்ளை. அப்போது அவர் மாயூரம் முன்சீப். இவரை பார்த்ததும் அவர்கள் ஓடிவிட்டனர். வேநாயகம் பிள்ளை அவர்கள், கோபால கிருஷ்ண பாரதி அவர்களிடம் என்ன தவறு செய்தீர்கள் என்று கேட்கிறார்.

அதற்கு கோபால கிருஷ்ண பாரதி அவர்கள், 'ஒரு தாழ்த்தப்பட்டவர் தண்ணீர் கேட்டார், கொடுத்தேன். ஏன் தாழ்த்தப்பட்டவருக்கு தண்ணீர் கொடுத்தாய் என்று இவர்கள் திட்டினார்கள். அப்படியா அந்த தாழ்த்தப்பட்டவருக்கு மதியம் அன்னமே கொடுப்பேன் என்றேன். என்னை இந்த புளிய மரத்தில் கட்டிவைத்தார்கள்' என்றார் .

 மனம் வருந்திய வேதநாயகர், 'தற்போது என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்கள்' என்று கேட்டார். அதற்கு கோபாலகிருஷ்ண பாரதி, 'திருநீலகண்டர் சரித்திரம் எழுதிக் கொண்டிருக்கிறேன்' என்றார். அதை நிறுத்தி விட்டு, 'நந்தனார் சரித்திரம் எழுதுங்கள் என்றார்' வேதநாயகர்.

'பிரதாப முதலியார் சரித்திரத்தில்' முக்கியமான பாத்திரம் ஞானாம்பாள். இப்படி பெண் பாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதினார் வேதநாயகர்.

இவர்களுடைய தாக்கம் தான் பாரதிதாசனை உருவாக்கியது.
மறைமலையடிகள் தன்னுடைய குருவாக மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையை கொண்டிருந்தார்.

அகில உலக சமயங்களின் மாநாட்டில், 'வேதாந்தமே சிறந்த மறை' என்று கூறியது தவறு என்று விவேகானந்தரிடம் கூறினார் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்கள்.

சென்னை ஐஸ்ஹவுசில் அனைத்து சமயத்தவர்களையும் அழைத்து விவேகானந்தர் வீற்றிருக்க, 'சைவ சித்தாந்தமே சிறந்தது' என்று பேச வைத்து, வேதாதந்மே சிறந்த தத்துவம் என்று பேசியது தவறு என்பதை விவேகானந்தருக்கு அறிவுறுத்தியவர் மறைமலையடிகள்.

அறிவியல் சொல்லகராதியை உருவாக்கியவர் மனோன்மணீயம் சுந்தரனார். சாஸ்திர சங்ரக நூற்தொகை எழுதியவர்.

வள்ளலார்- மாயுரம் வேதநாயகர்- மனோன்மணியம் சுந்தரனார் ஆகிய மூவர்தான் பாரதிதாசனின் முன்னோடிகள்.

பாரதிதாசன் பரம்பரை என்ற பெயரில் முருகு. சுப்பிரமணியம் தனது பொன்னி இதழில் 47 பாவலர்களை அறிமுகப் படுத்தினார். அதில் நாஞ்சில் மனோகரனும் ஒருவர் என்பது வியப்பான செய்தி.

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் என்றார் அப்பர்.

சித்திரை சோலைகளே...

ஏடு எடுத்தேன் கவி எழுதினேன்...

கூடத்திலே மனப்பாடத்திலே....

தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் கோயில்களில் ஒலிக்க வேண்டும் என்றார் பாரதிதாசன்.

எல்லா வகையான யாப்புகளிலும் பாட்டு எழுதினார் பாரதிதாசன்.

‘கையார்’ என்பவர் பாரதிதாசனுக்கு 17 வயதில் ஆசிரியர் வேலை கொடுத்தார்.

தமிழ் மொழி, தொழிலாளர் துயரம், பெண் விடுதலை என்று பலவற்றை பாடினார் பாரதிதாசன்.

ஜீவாவும், தா. பாண்டியனும் பாரதிதாசனைத் தூற்றினார்கள்.

No comments:

Post a Comment