ஒரிசா பாலு - மனம் இதழுக்கு அளித்த பேட்டி... யூடிபிலிருந்து....
லெமுரியாவிலிருந்து தமிழ் இலக்கியங்கள் அடிப்படையாக வைத்து குமரிக் கண்ட வரலாறு உருவாகிறது. கடல் கொண்ட தென்னாடு உருவாகிறது. இந்த அடிப்படையை வைத்து, அரசு தொடர்பாகMeetings தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன. என்ன காரணம்? ஏனென்றால் அது தொடர்பானவர்கள் யாரும் கிடையாது. ஏனென்றால் கடல் தொடர்பானதில் கப்பல் தொடர்பானவர்களைக் கொண்டுவந்து நிறுத்தினால் அவர்களுக்கு என்ன தெரியம்?
கடல் என்பது கப்பலில் போகின்றவர்களை வைத்து மட்டும் கடல் கிடையாதுல்ல.... மீனவர்கள் போகிறார்கள். ஆழ்கடல் மீனவர்கள் போகிறார்கள். மீனவர்களிலேயே பல பிரிவுகள் இருக்கிறது. கடலில் பலதுறை ஆய்வாளர்கள் இருக்கிறார்கள். தாவரங்கள் பற்றி ஆய்வு செய்கிற ஆய்வாளர்களுக்கு கடலில் முழ்கி போயிருக்கிற நிலங்களைப் பற்றி தெரியாது.
இப்ப நீங்க சொல்லுங்க... கடந்த 50 ஆண்டுகளில் கடல் சார்ந்த ஆய்வாளர்களை, குறிப்பாக கடல் தொல்லியல் துறை ஆய்வாளர்களை உருவாக்கி இருக்கிறோம்?
இன்றைக்கும் இந்தியாவில் முதன் முறையாக தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில்தான் கடல்சார் துறை பிரிவு ஆரம்பித்தார்கள். 1984 இல். ஆனால் இன்று வரைக்கும் எத்தனை பேரை கடலாய்வில் ஈடுபடுத்தியிருக்கிறது? தமிழ்நாடு கடல் சார் தொல்லியல் துறை இதுவரை எத்தனை பேரை கடலாய்வில் ஈடுபடுத்தியிருக்கிறார்கள்?
என்னை பொறுத்தவரையில் .... துறைக்கு 45 இலட்ச ரூபாய் கொடுத்து விடுவார்கள். அவர்கள் சொல்வதுதான் ஆய்வு. 72 , 73 துறைகளை ஒருங்கிணைத்து, தமிழ் இலக்கியங்களையும் கடலோடிகளையும் சேர்க்கிற போதுதான் இந்த ஆய்வு முழுமையாக வரும்.
எனக்கே இந்த ஆய்வை கடல்சார் மீனவர்களைக் கொண்டு செய்தேன். கப்பலில் செல்கிறவர்களுக்கு இதுபற்றி தெரியாத சூழலில், அவர்களுக்கு முறைபடுத்தப்பட்ட வழி உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த வழியின் அடிப்படையில்தான் கப்பலில் போக முடியும். ஆனால் மீனவர்கள் மீன்கள் எங்கெங்கு கிடைக்குமோ அதை தேடிக்கொண்டு போவார்கள். குறிப்பாக ஆழ்கடல் மீனவர்களை வைத்துக் கொண்டுதான் இந்த ஆய்வை முழுமையாக செய்ய முடிந்தது.
மராஸ்கா விலிருந்து கன்னியாகுமரி வரைக்கும் கடல் பகுதியை வைத்து முடிவு செய்ய வேண்டும். முதல் மூன்று சங்கங்கள் கடலில் முழ்கிவிட்டது. முதல் சங்கத்துக்கு தலைவனான இறைவன் சிவனை குறிப்பிடுகிறோம். சிவனை என்ன சொல்லுவாங்கன்னா, தென்னாடுடைய சிவனே போற்றி! என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி! என்பார்கள்.
தென்னாடுடைய சிவனே போற்றி என்பது கரெக்ட். ஏன் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்கிறார்கள்? ஏனெற்றால் சிவன் வாழ்ந்த பகுதி உலகத்தோடு தொடர்புடைய பகுதி. உலகத்தில் எந்தெந்த மக்களெல்லாம் இந்த பகுதியோடு தொடர்பு இருந்ததோ அவர்களெல்லாம் சிவனை இறைவனாக பார்த்தார்கள். எனவே முதல் சங்கம், இரண்டாம் சங்கம் என்பவற்றை கற்பனை என்று விட்டுவிட முடியாது.
இதை முழுமையாக ஆய்வு செய்தால் தமிழர் வாழ்வியல், தமிழர்கள் வாழ்ந்த நிலப்பகுதி முழுமையாக கிடைக்கும். இதன் மூலம் அடுத்த சுனாமியால் பாதிக்கப்படாத அளவுக்கு காப்பாற்றலாம்.
அடுத்து முழ்கி போகலாம். இதெல்லாம் கற்பனைக் கிடையாது. நடந்து முடிந்த கதையைப் பற்றி ஒரு ஆய்வு. அப்புறம் இன்னொரு விடயம்.
நீங்கள் ஒரு ஆட்சிப் பணிக்கு துறைக்கு போகிற போது அதிகாரியாக ஒரு வெளி மாநிலக்காரர் வரும்போது அவருக்கு எப்படி தெரியவைக்க முடியும். ஒரு அரியானா மாநிலத்துக்காரர் ஆட்சி அதிகாரியாக வரும் போது அவருக்கு எப்படி நம் கடல்சார் துறையை பற்றி தெரிவிக்க முடியும்? இது ஒரு மிகப் பெரிய சிக்கலாக எல்லாருக்கும் இருக்கிறது. இன்னொரு சிக்கல் மீன்வளத்துறை.
மீன்வளத் துறை இந்தியாவினுடைய அக்ரிகல்ட்சர். இந்தியாவினுடைய உழவுத் துறைக்கு கீழ் இருக்கக்கூடிய (வெட்னரி துறை). விலங்கியல் துறைக்கு கீழ் மூன்றாவது துறையாகத் தான் மீன்வளத் துறை வருகிறது. மீன்வளத்துறையில் ஒரு பகுதியை உழவு மக்கள் தான் ஆய்வு செய்வார்கள் என்றால் எப்படி மெய்ப்பிக்க முடியும்? இதைதான் நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
மீன்வளத்துறைக்கு தனியாக ஒரு துறை ஆரம்பியுங்கள். அதன் மூலம் நீரில் முழ்கி போன நிலங்களை, மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் இடங்களாக மாற்றிக் கொடுங்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
லெமுரியா கண்டத்தை யானையை பார்த்து குருடர்கள் சொன்ன கதையாகத்தான் சொல்லி வருகிறார்கள்.
எங்களை மாதிரி பலர் இதற்காக நாட்களை செலவிட்டவர்கள் இருக்கிறார்கள்.
நம்முடைய வாழ்வியல் முறைகள், குறிப்பாக இறைவழிபாடு பின்னால் வந்த சங்க கால இலக்கியங்களில் வந்தாலும் கூட, அதற்கு முந்தைய பண்டைய வாழ்வியலில் சூரியனையும் சந்திரனையும் பார்த்து, அதே சமயத்தில் நட்சத்திரங்களையும் கோள்களையும் பார்த்து மேகங்களையும் பார்த்து அன்றாட வாழ்வியலை பின்பற்றி இருக்கிறார்கள். குறிப்பாக சூரியனுடைய வட செலவு, தென் செலவு.
ஆறு மாதங்கள் சூரியன் வடக்கிலிருந்து தெற்கு போறப்ப நிகழக்கூடிய மழைக் காலத்தையும் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி போகக் கூடிய அந்த உழவு முறைகளையும் முழு நிலவு, இருள் நிலவு என்று சொல்லக் கூடிய அந்த 15 நாள், 17 நாள் நிகழக்கூடிய சந்திரனின் மாற்றங்களையும் கோள்களுடைய தருணங்களையும் இதை வைத்துதான் தமிழர்களுடைய வாழ்வு மிக மிக அழகாக இருந்தது.
பின்னாடி குளோபலைசேன் வந்தப்ப , முதல் குளோபலைசேனை சந்தித்த இடம் தமிழ்நிலம்தான். ஏனென்றால் உங்களுக்கு ஆதிச்சநல்லூர் ஆய்வை பற்றி தெரியும், ஆதிச்ச நல்லூரில் இருக்கக் கூடிய 113 ஏக்கர் நிலப்பரப்பில் இன்றைக்கு நாம் பண்ணக் கூடிய 3500 சதுர மீட்டர் ஒரு காலத்தில் அதற்கு முன்னாடி 2000 சதுர மீட்டர் ஆய்வில் கிடைத்த எலும்பு கூடுகள் .
அடிப்படையில் பார்க்கிறப்ப, ஆதிச்ச நல்லூர் மட்டுமே, இதுவரை கிடைத்த ஆய்வில் காக்கத்தியன் மலையில் இருந்த மக்களுடைய எலும்புகூடும் ஈக்ரா எலும்பு கூடும், ஆஸ்திரேசியா எலும்பு கூடும் மங்களா எலும்பு கூடும் உலகத்தில் பல மக்களுடைய எலும்பு கூடு கிடைத்ததிலிருந்து தமிழர்கள் உலகத்தில் பல இடத்தில் தொடர்புடையவர்களாக இருந்து அதன் தொடர்பாக பல மக்கள் இங்கு வந்ததற்கான தரவுகள் சங்க இலக்கிய காலத்திற்கு முன்பே நமக்கு கிடைத்திருக்கிறது.
இந்த இடங்கள் கடல் நீரோட்டத்தில் கிழக்கையும் மேற்கையும் தெற்கையும் வடக்கையும் இணைக்கக் கூடிய இடமாக இருப்பதாலேயும் ஒரு கிரேக்கர்களுடைய மிளகு வழி பாதையிலும் சீனர்களுடைய பட்டு வழி பாதையிலும் மிக மையமான பகுதியைக் கொண்டு கிரேக்கர்களுக்கு நேரடியாக சீனர்களை தெரியாது. சீனர்களுக்கு கிரேக்கத்தை நேரடியாக தெரியாது. ஆனால் தமிழர்களுக்கு நேரடியாக இரண்டு பேரையும் தெரியக் கூடிய அளவிலும் அதே சமயத்தில் இரண்டு மொழிகளையும் தெரிந்து கொள்ள கூடிய சூழல் அந்த காலத்தில் உருவாகியிருக்கிறது.
இன்னும் பார்க்க போனால் உலகளவில் தமிழர்களுக்கு எந்த அளவில் ஆளுமை இருந்தால், பட்டின பாலையிலும் மதுரைக் காஞ்சியிலும் யவணர்கள் இங்கே வந்து காவல் புரிந்ததை பற்றி இருக்கும்! ஒரு வெளிநாட்டில் இருக்கிற மக்களை நம் நாட்டில் காவல் புரிய வைக்கிற அளவுக்கு இந்த இனம் இருந்தது என்றால், எந்த அளவிற்கு உலகத்தில் டல் மேலாண்மையிலும் கடல் ஆளுமையிலும் இருந்திருப்பார்கள் என்பதை பார்க்க வேண்டியிருக்கிறது.
இப்ப நடுநிலக் கடல் என்று பார்க்கிறப்ப, கட்லா என்ற இன மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பாஸ்க் என்ற மக்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் இருக்கக் கூடிய எத்தியோப்பியா, கேமருன், டான்சானியா போன்ற பல நாடுகளில் தமிழர்களுடைய ஆளுமையும், எகிப்திலும், ஓமனிலும், குவைத்திலும் தமிழர்களுடைய பானை ஓடுகள் கிடைத்திருக்கிறது. தாய்லாந்தில் தமிழர்களுடைய பானை ஓடு கிடைத்திருக்கிறது.
கொரியாவில் இன்றைக்கும் 4000 சொற்கள் தமிழில் பேசுகிறார்கள். கொரியாவில் இன்றைக்கும் குடுமி மாறன் என்று சொல்லக்கூடிய ஊர் இருக்கிறது. கொரியர்களுடைய பண்பாட்டில் முழுக்க முழுக்க தமிழ் மரபும் தமிழ்ப் பண்பாடு இருக்கிறது. அதுமட்டுமல்ல காம்சாட்க் என்ற ஆர்டிக் கடல்ல அமெரிக்காவுக்கு போகக் கூடிய ரஷ்யாவினுடைய கடைசி ஊர். அந்த ஊர்ல பார்க்கிறப்ப அலையூட்டர் என்ற மொழி பேசுகிறார்கள். அங்கே நெமிலன் என்ற மக்கள் வாழ்கிறார்கள். கரையோக்கு என்ற மக்கள் வாழ்கிறார்கள். இது மட்டுமல்லமா ரஷ்யாவையும் சீனாவையும் இணைக்கக் கூடிய ஆமுர் என்ற தமிழ் பெயர் கொண்ட ஒரு ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது.
ரஷ்யாவிலிருந்து ஆப்கானிஸ்தான் வழியா முருகாப் என்ற ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. எங்களுக்கு ரஷ்ய காக்கசியன் மலையில் கிடைத்திருக்கக் கூடிய சின்னங்கள் பார்க்கிற போது, குறிப்பாக டால்மென்ட்ஸ் என்று சொல்வார்கள் ஸ்டோன்ஜின்ஸ் என்று சொல்வார்கள். இந்த கல்லால் அமைக்கப்பட்ட இடுகாடுகள் என்று பார்க்கிறப்ப, உலக முழுவதும் கொரியாலிருந்து ஸ்காட்லாந்து வரைக்கும் இந்த ஊரால் ஆர்டிக் ஈரோப்பிய மொழிக் குடும்பங்களை இணைக்கக் கூடிய மொழியாக தமிழ் இருந்திருக்கிறது.
இப்ப உங்களுக்கு தெரியும். உலகில் முதல் நாகரிக மொழி எது என்ற ஆய்வு நடந்துகொண்டிருக்கிறது. அந்த ஆய்வில் திராவிட மொழிக் குடும்பம் என்ற சொல்லக் கூடியதாக தமிழ் மொழி இருக்கிறது. இப்ப திராவிடம் என்ற சொல்லே இப்ப நிறைய பேருக்கு குழப்பமாக இருக்கிறது.
அது எந்த இடம்னா...இங்கே தமிழ்நாட்டையும் ஆந்திராவையும் இணைக்கக் கூடிய திரையன் நாடு என்ற நாட்டை பற்றி சங்க இலக்கியத்தில் ஒரு குறிப்பு வரும். அந்த திரையன் நாட்டைத்தான் திராவிட நாடு என்று பின்னால் குறிப்பிடுகிறார்கள். இந்த திரவிடம் என்பதற்கு பொருள் பார்க்கிறப்ப திரை மீளர் என்ற பொருளாக இருக்கிறது. கடல் கடந்து போய் திரும்பி வந்தவர்களுக்கு திரை மீளர் என்ற சொல் இருக்கிறதனால்தான் இன்றைக்கும் நடுநிலக் கடலை திரமிளம் என்று சொல்கிறார்கள். ஒரிசாவில் திரமிளம் என்று சொல்கிறார்கள். திரமிளா என்கிறார்கள். இதையயல்லாம் பார்க்கிறப்ப, திரை மீளர் என்ற அடையாளத்தை தமிழ் மொழி பேசக்கூடிய மக்களுக்கு அந்த காலத்தில் சொல்லியிருப்பார்களோ என்ற கேள்விக்குறி வந்து, அதை ஆய்வு செய்யக் கூடிய சூழலும் இருக்கிறது.
இரண்டு வகையான சிக்கல் இருக்கிறது. ஒன்று வந்து, கால்டுவெல் காலத்தில் சொல்லக்கூடிய திராவிட மொழிக் குடும்பம். அன்றைக்க இருந்த சூழலில் அன்றைக்கு இருந்த குமரிலபட்டர் எழுதிய நூல்களையயல்லாம் வைத்துதான் அன்றைக்கு அவருடன் இருந்த நண்பர்களை வைத்துதான் திராவிடம் என்ற சொல்லை கையாண்டு அது இன்றைக்கு திராவிட மொழிக்குடும்பத்திற்கு அடையாளமாக அதன் முக்கிய மொழியாக தமிழ் இருக்கிறது.
.....
இன்று பார்க்கிறப்ப, உலகம் முழுக்க, மக்களுடைய இடம் மாற்றம், புலம் பெயர்தலை பார்க்கிறப்ப 70,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்க மக்கள் போனார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க மக்கள் நடந்து போனதாக சொல்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் கடல் வழியாக போயிருக்கிறார்கள். கடல் நீரோட்டம் வழியாக பாய்மரக் கப்பல் கண்டுபிடிப்பதற்கு முன்னாடி ஒவ்வொரு இடத்துக்கும் மாற்றம் செய்யப்படுகிறார்கள். தெரிந்தோ தெரியாமலோ அவர்கள் மாற்றம் செய்யப்பட்ட போது அங்க போய் வாழ்க்கை அமைத்துக் கொண்டு வாழக் கூடிய சூழல் இருக்கிறது.
பின்னால் முறைவழிப்படுத்தப்பட்ட மீள வரக்கூடிய, திரும்ப வரக்கூடிய சூழல் வந்தப்ப குடும்பத்தோடுதான் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனென்றால், ஒரு ஊர் பெயரை தமிழ்ப் பெயராக வைக்க வேண்டுமென்றால் ஒரு குடும்பத்தோடு போனால்தான் வைக்க முடியும். தனியான ஒரு ஆள் போய் ஒரு ஊருக்கு பெயர் வைக்க முடியாது. அல்லது அவன் அந்த ஊர்ல ஒரு சாதனை பண்ணியிருந்தால்தான் அந்த பெயர்ல, உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர். நகர், ராஜிவ்காந்தி நகர் என்று வைக்க முடியும்.
அப்ப ஒரு மரபுகளை கொண்டு போய் வைத்திருக்கிறார்கள். கூளம், ஆழியான், குமரி, குறள் என்று பெயர் இருக்கிறது.
எழுத்து வடிவம் : கவி
No comments:
Post a Comment