கம்போடியா நினைவுகள்
- நரசய்யா
- தமிழ் மரபு அறக்கட்டளை சொற்பொழிவு
• பரப்பளவு 1,81,035 சதுர மைல்கள்
• கெம்பவ் ஸ்வாயம்பூவ என்ற பனராஸ் பார்ப்பனரால் கம்பூசியா தோற்றுவிக்கப்பட்டது.
• நாடு முழுவதும் நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டிருந்ததால் அதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலோர் உடல் ஊனமுற்றவர்களாக இருந்தார்கள்.
• உலக வங்கியின் சார்பாக வேலைக்கமர்த்தப்பட்டார் நரசய்யா.
• கம்போடியா மன்னன் விருந்தில் இராமாயண காப்பிய நாடகம் நடத்தப்படுகிறது.
• விருந்துக்கு அதிகமாக செலவு செய்கிறார்கள்.
• அன்னாசி பழத்தில் உள்ளே உள்ளவற்றை எடுத்துவிட்டு அதை கூடாக வைத்து மெழுகுவர்த்தி ஏற்றி வைக்கும் அளவுக்கு ஆடம்பரமாக செலவு செய்தனர்.
• ஆடம்பர உணவு வகைகள் பரிமாறப்பட்டன. பெருமளவில் உணவு பண்டங்களை வீணாக்கினர்.
• கம்போடிய பெண்கள் கடுமையான உழைப்பாளிகள்.
• பணம் கொடுத்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளும் பழக்கம் பெண்களிடம் உண்டு.
சியாம் ரீப்
• நுழைவு நகரமாக உள்ளது.
• டோன்லா சோ என்ற ஏரி உள்ளது. கோடைக் காலங்களில 120 சதுர மைல் கொள்ளவும் மழைக் காலங்களில் 310 சதுர மைல் கொள்ளவும் நீரைக் கொண்டது.
• 1000 கோயில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன.
நாம்பென் என்ற நகரம்
• 200 கி.மீ. தொலைவில் உள்ளது.
• போல்பாட் ஆட்சி செய்த காலங்களில் படித்தவர்கள் என்றால் சுட்டு கொன்றுவிடுவார்கள்.
• 1113 முதல் 1150 ஆண்டுகளில் சூரிய வர்மன் 37 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.
• கம்போடிய மக்களின் பெயர்களில் ‘ரத்னா’ என்பது முன் ஒட்டாகவோ பின் ஒட்டாகவோ இருக்கும்.
• எல்லா இடங்களிலும் புத்தர் சிலையை ஒளித்து (புதைத்து ) வைத்திருப்பார்கள்.
அங்கோர்வார்ட் கோயில்கள்
• 14.5 மீட்டர் உயரம், 1025 மீட்டர் நீளம், 802 மீட்டர் அகலம் உடையது.
• சுற்றி அகழி காணப்படுகிறது. கோயில்களின் சுவர்களில் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன. குடைவரை சித்தரம் 6 உள்ளது.
• வலது பக்கச் சுவர்களில் குருசேத்திர போர், இடது பக்கச் சுவர்களில் ஸ்ரீலங்கா யாத்திரி, பாற்கடல் கடையும் கதை போன்றவை காணப்படுகின்றன.
• கம்பூசியாவில் பால் கடையும் போது எடுக்கப்பட்ட பாலை பிள்ளையார் திருடிக் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள திருக்கடையூர் என்ற இடத்திற்கு போய்விட்டார். இன்றும் திருக்கடையூரில் கள்ளப் பிள்ளையார் என்ற பிள்ளையார் உண்டு.
• கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கும் காட்சிகள் காணப்படுகின்றன.
• பிரஞ்ச் மக்கள் ஆதிக்கம்
• வருணன் என்பதுதான் மணிமேகலை என்று மாறிவிட்டது.
• கம்போடிய பெண்கள் மங்கோலியர் மாதிரி இருப்பார்கள். வயதைக் கண்டுபிடிக்க முடியாது.
No comments:
Post a Comment