தமிழ் இணையப் பல்கலைக் கழகம் சொற்பொழிவு
திரு.வி.க. முருகன் அல்லது அழகு
56 நூல்கள் எழுதியிருக்கிறார்.
மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூல் எழுதினார்.
காந்தியடிகள் தமிழ்நாட்டிற்கு வந்த போது அவருடைய பேச்சுகளை மொழி பெயர்த்தார்.
‘குமரன்’ இதழுக்கு ‘முருகன்’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதினார். இது 1927 இல் முருகன் அல்லது அழகு என்ற தலைப்பில் நூலாக வெளிவருகிறது. 1953 இல் திரு.வி.க. காலமாகிறார்.
இந்நூல் 1950 வரை எட்டு பதிப்புகளைக் கண்டது.
இந்நூலில் 12 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது.
1. முருகு என்றால் மனம், இளமை, கடவுள் தன்மை, அழகு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
2. அழகு என்றால் அழியா அழகு என்று பொருள்.
திருமுருகாற்றுப் படை பாடிய நக்கீரர்
‘இயற்கை புனைந்ததே அழகு’ என்கிறார்.
இயற்கை அழகு அனைத்தும் பெண்மையில் இருக்கிறது.
‘முருகு’ என்பதற்கு ‘அன்’ விகுதி சேர்ந்து முருகன் என்றனர்.
‘தந்துழி’ - மாறாத தத்துவம்
சொக்கன் - சுண்டி இழுக்கும் அழகுக்கு உரியவன்.
3. முருகன் என்பதன் தொன்மை
மலைக் கிழவோன் முருகன்
குறிஞ்சிக் கடவுள்
சேய் - மால், வேந்து, வண்ணம்.
No comments:
Post a Comment