நகரத்தார் கண்ணதாசன் விழா
சுடுகாட்டு எலும்புகளை சோதிட்டுப் பார்க்கையிலே வடநாட்டு
எலும்பு என்று வந்த எலும்பு இல்லையடி!
தென்னாட்டு எலும்பு என்று தெரிந்த எலும்பு இல்லையடி!
இந்நாட்டி எலும்பு என்று எழுதி வைக்கயில்லையடி
ஓரின மாந்தரை ஓராயிரம் பிரிவாக்கும் சாதியை கொளுத்தாவிடில்
எந்நாளும் தொல்லையடி!
.....
போட்ட கணக்கு ஒரு புள்ளி குறையாமல்
கூட்டி கழித்து கறையா பொருள் சேர்க்கும்
நாட்டுக்கோட்டை மரபில் நானும் வந்தவன்தான்
ஆனாலும் நான் போடும் கணக்கு அத்தனையும் தவறாகும்
கூட்ட வேண்டிய நண்பர்களை கழிப்பேன்
கழிக்க வேண்டிய நண்பர்களை கூட்டுவேன்
ஏதோதோ திட்டங்கள் வகுப்பேன்
அத்தனையும் தவறென்று துடைப்பதால் பெருக்குவேன்
அடடா! நான் கடவுள் கையில் பொம்மை!
.....
கல்லூரி படிப்பில் கால்பதிக்க காலமெல்லாம் காத்திருந்தேன்
எட்டாம் வகுப்பை எட்டத்தான் என் பெற்றோர் எனை இட்டார்!
கல்வி காணா வாழ்வு கரைதேறா தோணியயன
கலங்கினேன். கற்றாரைக் கண்டு கரையில் நின்றேன்
தந்தாயே நாவில் சரம் சரமாய் தமிழ்ப் பாடல்!
உனை நான் பாடாது இருப்பேனா!
....
தான் பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம் என்றுதான்
தாய் அன்று மாண்டு போனாள்
தந்தைçயும் இப்பிள்ளை உருப்படாது என்றுதான்
தணலிலே வெந்துபோனான்
ஊன் பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்
உயரத்தில் ஒளிந்துகொண்டான்
உதிரத்தின் அணுவிலே தமிழ் அன்னை
மட்டுமே உறவாக வந்து நின்றான்
வான்பெற்ற பேருரு போல் யான் பெற்ற தமிழிலே
வாழ்கிறேன் வண்ண மயிலே!
எட்டு பிள்ளை பெற்றால் கூட இலாபமாகலாம்
எட்டாவது பிள்ளை கூட மேதையாகலாம்
எட்டாவது மேதைக்காக கர்ப்பம் தாங்கினாள்
அந்த ஏழு முட்டாள்களை காலமெல்லாம் பூமி தாங்குமா?
No comments:
Post a Comment