Friday, December 27, 2019

புலவர் செந்தில் நாயகம் எழுதிய சிலப்பதிகாரச் சுருக்கம்

புலவர் செந்தில் நாயகம் எழுதிய சிலப்பதிகாரச் சுருக்கம்

-தலைமையுரை பேரா. வளன் அரசு

37 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்தான் கோவலன். கோவலனும் கண்ணகியும் 8 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தார்கள்.

கோவலனும் மாதவியும் 13 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தனர். அரசவை நடன அழகியாக தலக்கோல் வழங்கப்பட்டு பல்லக்கில் அழைத்துச் செல்லப்படுகிறாள் மாதவி. கோவேறு கழுதையில் கோவலன் செல்கிறான்.

யாழ் தான் இன்று வீணை என்றழைக்கப்படுகிறது. நரம்புக்கருவியாக யாழ் இருக்கிறது.

எழுநிலை மாடம் என்ற மாளிகையில் வாழ்ந்தாள் மாதவி. சூரிய குண்டம், சோம குண்டத்தில் முழ்கினால் கோவலனுக்கு ஏற்பட்ட துன்பம் நீங்கும் என்று சொன்ன தோழியிடம் 'பீடு அன்று என்று' சொன்னாள் கண்ணகி.

 கோட்டம் என்பதுதான் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோட்டம் என்று சிலப்பதிகாரத்தையும் நினைவு கூருவதற்காகத்தான் வள்ளுவர் கோட்டம் என்று பெயர் வைத்தார் கலைஞர்.

திருக்குறக்குள்ள மரியாதை சிலப்பதிகாரத்திற்கும் தந்தார் கலைஞர்.
----

நூலாய்வு :பாவலர் இராஜகோபால்....
சிலப்பதிகாரக் காப்பியம் முதல் தனித்தமிழ்க் காப்பியம். ஐம்பெருங் காப்பியங்களில் முதல் காப்பியம்.
இயற்கையை வைத்து முதன் முதலில் வாழ்த்துப் பாடிய காப்பியம்.
பெண்ணை காவிய நாயகியாக ஆக்கிய காப்பியம்.

'விதியை வெல்வேன்' என்று கூறி துறவறம் மேற்கொண்ட இளங்கோவடிகள், 'ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்' என்பதை மூன்று அறங்களில் ஒன்றாக வைத்து காப்பியம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.

நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்ற மணி ஆரம் படைத்த தமிழ்நாடு என்று பாரதி பாராட்டிய காப்பியம். இதையாவது படியுங்கள் என்ற ஆதங்கத்தில் இந்நூலை எழுதியதாக ஆதங்கவுரையில் எழுதியுள்ளார்.

30 காதைகள் - புகார் காண்டத்தில் 173 அடிகளில் அரங்கேற்றுக் காதையில் 44 அடிகளில், 11 வகை ஆடல்களை 37 அடிகளிலும் வர்ணிக்கிறார். கோவலன் கூடிய மாதவி என்ற பகுதியில் 39 அடிகளில் வர்ணிக்கப்படுவதை 5 அடிகளில் எழுதுகிறார் நூலாசிரியர்.

14 ஆவது காதை ஊர்க்காண் காதை - 85 அடிகளில் வர்ணிக்கிறார் இளங்கோவடிகள்.  இதை 12 அடிகளில் கூறுகிறார் நூலாசிரியர்.  (நூலாசிரியர் வீ. செல்வநாயகத்தை அம்பாசமுத்திரத்தில் யானை மீது உட்கார வைத்து சிறப்பு செய்தார்கள்).

ஏற்புரை : வீ. செந்தில் நாயகம்

தேவாரம் 8000 பாடல்கள் கிடைத்திருக்கிறது. கம்பராமாயணத்தில் சுந்தர காண்டம் மட்டுமாவது படிக்க வேண்டும்.

1967 இல் பூம்புகாரில் சிலப்பதிகார விழா - சிலம்பொலி செல்லப்பன், கம்பன் அடிப்பொடி சா. கணேசன், பேரா. சுந்தரமூர்த்தி, நான் ஆகியோர் பொழிவு செய்தோம். திங்கள், ஞாயிறு, மாமழை எல்லாமே கண்ணகியைத்தான் குறிக்கிறது. புகார் எப்படி கண்ணகியைக் குறிக்கிறது என்று எப்படி கூறுகிறீர்கள் என்று கேட்டார் சிலம்பொலி செல்லப்பன். வள்ளுவர்தான் வழி காட்டினார்.

வஞ்சிக் காண்டத்திற்குள் யாரும் செல்வதில்லை.  புகார் காண்டத்தில் கண்ணகி அதிக வார்த்தையை பயன்படுத்தவில்லை. பீடு அன்று என்று மட்டும் சொல்கிறாள்.  சூரிய குணடம், சோம குண்டத்தில் மூழ்குவது உனக்கும் பெருமையில்லை, எனக்கும் பெருமையில்லை என் கணவருக்கும் பெருமையில்லை என்று கூறுகிறாள் கண்ணகி. 42 அடிகளில் கோவலன் கண்ணகியை பலப்பட பாராட்டுகிறான்.

தேரா மன்னா - அறிவுகெட்ட மன்னனே என்று மன்னரை விளிக்கிறாள் கண்ணகி. யாரையோ நீ மடக் கொடியாய் என்று மன்னன் கேட்கிறான். மாசாத்துவான் மகன் கோவலனின் மனைவி என்கிறாள். (மாமனார் பெயரையும் சொல்கிறாள், கணவன் பெயரையும் சொல்கிறாள்)
தேமொழி உரைத்து நன்மொழி...  வாய் முதல் தெறித்தது என் முதல் பிழைத்து ஆயுள் கெடுக! என்றான் மன்னன்.

தென்னவன் தீதிலன் யான் அவன் தன் மகள் என்றாள் கண்ணகி.


No comments:

Post a Comment