Friday, December 27, 2019

பாரி -கபிலர் நட்பு : தமிழருவி மணியன்

பாரி -கபிலர் நட்பு : தமிழருவி மணியன்

பத்துபாட்டு, குறிஞ்சி பாட்டு ஆகிய நூல்களை எழுதியவர் கபிலர். பிரகதத்தன் என்னும் அரசனுக்கு தமிழ் அறிவதற்கு உதவி செய்தவன். குறிஞ்சி பாடுவதில் இணையற்ற கவிஞர்.

பிறந்தது பாண்டி நாட்டில். திருவாதவூரில் பிறந்தார்.  அவ்வூர் மன்னன் 300 ஊர்களை புலவர்களுக்கு பரிசாகக் கொடுத்தான்.

‘புலன் அழுக்கற்ற அந்தணலான்’.

பரம்பு மலையை முற்றுகையிட்டார்கள்.  பரம்பு மலை சிற்றரசன் மலையின் உச்சிக்கு சென்றுவிடுகிறான். பழங்களை உண்கிறான். புலவர்களுக்கு 300 ஊர்களை பரிசாகக் கொடுத்தவன். எல்லாவற்றையும் தானமாக கொடுத்த பின், கபிலர் , ‘யானும் பாரியும் உளமே’ என்று பாடுகிறார்.

போரில் பாரி கொல்லப்படும் முன், கபிலரிடம் ‘இருந்து வா’ என்று கூறுகிறான்.  பின்பு பாரி கொல்லப்படுகிறான். அவனின் மகள்கள் அங்கவையும், சங்கவையும் அழைத்துக் கொண்டு போகிறார் கபிலர். அவர்களை கரையேற்ற வேண்டும் என்ற பொறுப்பு அவரிடம் இருக்கிறது.
அன்று பவுணர்மி. அங்கவையும், சங்கவையும் சொல்கிறார்கள், கடந்த பவுர்ணமி அன்று என் தந்தை இருந்தார். பரம்பு மலை இருந்தது என்று. 'அற்றைத் திங்கள், அந்நிலவே!.......'

பாரியின் மகள்களுக்கு திருமணம் முடிக்க, விச்சிகோன் என்ற மன்னனைச் சந்திக்கிறார் கபிலர்.

வேளிர் குலத் தலைவன் இருங்கோவேள் அவர்களை சந்திக்கிறார் கபிலர், அப்போது,

ஊருடன் இரவலர்க்கு அருளினான், தேருடன் முல்லைக்கு ஈந்த பாரின் மகளிர்; யானோ தந்தை தோழன் இவர் என் மகளிர்.

பின்பு ஓர் ஓலைக் குடிசையில் தங்குகிறார்கள். சாலையில் வரிசையாக உப்பு வண்டிகள் செல்கின்றன. பாரியின் மகள்கள் ஒரு மேட்டின் மீது ஏறி நின்று அவற்றை ஒவ்வொன்றாக எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

செல்வ கருங்கோ வாழியாதன்
நூறாயிரம் பொற்காசு தருகிறான். ‘திருப்தி யில்லையா கபிலரே’ என்று கூறி, குன்று மேல் ஏறி, பார்வைக்குத் தெரியும் வரை உள்ள ஊர் அனைத்தும் பரிசு என்றான்.

 மலையமான் திருமுடிக்காரி
பரிசு கொடுக்கிறான் மன்னன். ‘தரம் அறிந்து பரிசு கொடுக்க மாட்டீரோ’ என்கிறார் கபிலர்.

மன்னிக்க வேண்டும் ... என்ன வேண்டும் கபிலரே!

பாரியின் மகள்களை உன் மகன்களுக்கு திருமணம் செய்து வை என்கிறார்.
பாரியின் மகள்களை என் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்க எனக்கு பாக்கியம் கொடுக்கிறீர்களா? என்று கூறி தன் மகன்களுக்கு திருமணம் செய்து வைக்கிறான்.

பொருநை ஆற்றங்கரையில் வடக்கிருக்கிறார் கபிலர்.  ‘வடக்கிருத்தல்’ சமணர்கள் கையாளும் முறை.

1 comment:

  1. வள்ளல் பாரி கபிலரது உன்னத நட்பு/ நண்பனின் துயரை துடைப்பதே நட்பு https://www.youtube.com/watch?v=R5R58cRA-fU

    ReplyDelete