Friday, December 27, 2019

கம்பன் திருவுள்ளம் - பேரா. கு. அரசேந்திரன்

கம்பன் திருவுள்ளம் 
- பேரா. கு. அரசேந்திரன் 

தமிழ் இணைப் பல்கலைக் கழக உரை

தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மலருக்காக தனித்தமிழ் காப்புப் போராளி என்ற தலைப்பில் ஒரு கட்டுரை கம்பனைப் பற்றி எழுதியிருக்கிறேன்.

அதில் கம்பர் சுயமரியாதை, திராவிடர்இயக்கத்தாரால் எவ்வாறு இழிவு படுத்தப்பட்டார் என்பதை விளக்கியிருக்கிறேன்.

பாவாணர் அவர்கள், கம்பன் தமிழ்க் காவலன், இராமன் வட திராவிட மன்னன் என்றும் தெளிவுபடுத்தினார்.

4000 ஆண்டுகளுக்கு முன் இந்தியா முழுமையும் பேசப்பட்ட மொழி தமிழ். பண்டைய தமிழகம்தான் இந்தியா.

சோழ மரபினன் இராமன். குலமுறை கிளத்து படலம்- இராமன் வரலாற்றை விளக்குகிறது.

அந்தணன் பாவை நீ அரசின் வந்தோன்.

'இராவணன் ஆரிய மன்னன்' என்றார் கம்பர்.

11 ஆம் நூற்றாண்டில் கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார், மூவர் உலா எழுதிய ஒட்டக்கூத்தர், பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் ஆகியோரோடு கம்பர் வாழ்ந்த காலம்.

இராமர் காதை மணிப்பிரவாள நடையில் இருந்தது. கம்பராமாயணம் என்று எழுதினார் கம்பர்.

‘கல்லிடை பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லையில் மறைகளாலும் இயம்பரும் பொருள் ஈது என்னத்
தொல்லையின் ஒன்றே ஆகித் துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பலபெரும் சமயம் சொல்லும் பொருளும்போல் பரந்த தன்றே (19)’

- ஒரே ஆறு பல கால்வாய்களாகப் பிரிந்து பரந்து செல்கிறது என்பது ஒரே தெய்வம் பல தெய்வங்களாகப் பார்க்கப்படுகிறது.

‘பூவிரி பொலன் கழல் பொருஇல் தானையான்
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஒரீஇத்
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான்’

காவிரி நாடு என்றால் கழனிகள் உடைய நாடுதான் - மரவுரி தரித்துப் பரதன் செல்வதைப் பார்த்து எல்லா உயிரும் இரங்கி அழுதன.

கம்பன் மகன் அம்பிகாபதியை சோழ மன்னன் கொன்றான் என்று ஒரு செய்தியும் உண்டு.

‘உலகம் யாவையும் தாமுள வாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே’

என்று கம்பராயணத்தை தொடங்கிய கம்பன், கடவுள், சிவனா அல்லது திருமாலா என்பதை கூற மறுத்தார் .

- இந்த உலகத்தினைப் படைத்தும், காத்தும், அழித்தும் - இப்படி விளையாட்டாய் அனைத்தையும் நடத்திக் கொண்டிருக்கும் அந்த ஒருவரே எங்கள் தலைவர், அவரது தாளினைகளையே நாங்கள் சரணடைகிறோம்
கடவுள் பூசலை ஏற்காதவர் (11.35).

‘அரன், அதிகன், உலகளந்த அரி அதிகன்
என்றுரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடை வரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்
சுர நதியின் அயலது, வால் தோய்க் குடுமிச்
சுடர்த் தொகைய தொழு தோர்க் கெல்லாம்,
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால்’
செல்லுங்கள் என்று சுக்கீரவன் கூறுகிறான்.

இப் பாடல் மூலம் அரன் அதிகம், அரி அதிகம் என்று வழக்காடும் சமய வேறுபாட்டைக் கம்பன் கண்டிக்கிறார்.

திருமேனி தீண்டுவார் - இராவணன் உடலை திருமேனி என்றார் கம்பன்.
‘வண்மையில்லை  ஓர் வறுமையின்மையால்; திண்மையில்லை நேர் செறுநர் இன்மையால்;
உண்மையில்லை பொய்உரை இலாமையால்; ஒண்மை இல்லை பல் கேள்வி மேவலால்’ என்றார்.

(மக்களிடத்தில் பொறாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் வறுமை இல்லை. அனைவரிடமும் பொருட் செல்வம் இருந்தது. அறியாமை இல்லை. ஏனெனில் அவர்களிடம் கல்வி இருந்தது. அந்நாட்டில் உண்மை இல்லை. ஏனெனில் அவர்களிடம் பொய் இல்லை)

கூற்றம் இல்லை ஓர் குற்றம் இலாமையால் ; சீற்றம் இல்லைதம் சிந்தையின் செய்கையால் ; ஆற்றல் நல்லறம் அல்லது இல்லாமையால் ஏற்றம் அல்லது இழிதகவு இல்லையே

(கோசல நாட்டு மக்களிடம் கூற்றுவன் செய்யும் கொடுமைகள் இல்லை ; ஏனெனில் மக்களிடத்தில் குற்றங்கள் இல்லை. அவர்கள் தூய்மையான உள்ளம் கொண்டவர்கள் ; ஆதலால் அவர்களிடம் சினம் இல்லை. சினம் இல்லாததால் குற்றங்கள் இல்லை. அவர்கள் நல்ல அறங்களையே செய்ததால் தவறுகள் இல்லை. எனவே அவர்களுக்கு புகழ் மட்டுமே உண்டு.)
தேவர்க்கும் தானவர்க்கும் திசைமுகனே முதலிய தேவ தேவர்க்கும் மூவர்க்கும் முடிப்பரிய காரியத்தை முற்றுவிப்பான் முன் நின்றோம்.
ஆபத்தின் அபயம்

அரசு இழந்த இராமனை, கொற்கை வேந்தே என்றான் அனுமான்.


1 comment:

  1. கம்பர் திருவுள்ளம் - முனைவர் கு.அரசேந்திரன் சிறப்புரை | Ku Arasendran speechhttps://www.youtube.com/watch?v=s7NSez40nGQ

    ReplyDelete