Friday, December 27, 2019

நாவலரும் ஈழத்தில் சைவ மறுமலர்ச்சியும்: கலாநிதி ஆறு திருமுருகன்


நாவலரும் ஈழத்தில் சைவ மறுமலர்ச்சியும்
கலாநிதி ஆறு திருமுருகன்
(சைவ மன்றம் சிட்னி, ஆஸ்திரேலியா 28.04.2012 அன்று ஆற்றிய உரை)

நல்லூர் கைலாச பிள்ளையார் கோவில் அருகே உள்ள வீட்டில் பிறந்தார்.
இப்போதுள்ள நல்லூர் கந்தசாமி கோவில் மூன்றாவது கோவிலாகும்.

 முதலாவது கோவில் நல்லூர் முத்திரை சந்தடி என்ற இடத்தில் இருந்தது. பின்பு அங்கிருந்து சங்கிலத் தோப்பு வளைவில் அமைக்கப்பட்டது. இறுதியாக தற்போது உள்ள இடத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் அமைக்கப்பட்டது. மாப்பாணர் முதலியார் நல்லூர் கந்தசாமி கோயிலை கட்டினார்.

யாழ்ப்பாணத்தில் 250 ஆண்டுகள் சிவன் கோயிலே இல்லாமல் இருந்தது.  ஒல்லாந்தார் ஆட்சிக் காலத்தில் ஒரு செட்டியார் அரச மன்னரிடம் அனுமதி பெற்று பட்டினத்து சிவன் கோவிலை கட்டினார்.

நாவலரின் பெற்றோர்கள் கந்தப்பிள்ளை-சிவகாமி அம்மையார்.
ஆறுமுகம் என்று பெற்றோர்கள் பெயரிட்டனர்.

நல்லூரில் சின்னதம்பி புலவர் என்று ஒரு சிறுவன் இருந்தான். அவனிடம் ஒருவர் கனகராஜப் பிள்ளை வீடு எது என்று கேட்டார். அதற்கு பாடலிலியே விடை சொன்னான் அந்தச் சிறுவன். வியந்து போனார் வினா தொடுத்தவர்.
வெஸ்லிக் கல்லூரியின் ஆங்கில பாடசாலையை பெர்சீவல் பாதிரியார் நடத்தி வந்தார்.  அங்கு பயின்றார் ஆறுமுக நாவலர். ஆங்கிலக் கல்வியிலும் தமிழ்க் கல்வியிலும் புலமைப் பெற்றவராக விளங்கினார். ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்கு மேல் படிப்பதற்கு தீட்சை பெற வேண்டும். ஆனால் நாவலரின் புலமையை அறிந்த பெர்சீவல் பாதிரியார் அவர் தீட்சை பெறாமலே பாடசாலையில் படிக்க அனுமதித்தார்.

16 அகவை வரை பாடசாலையில் படித்தார்.  ஆங்கிலம் மூலம் தமிழ் கற்றுத் தர வேண்டும் என்று கூறி பெர்சீவல் பாதிரியார் ஆறுமுக நாவலிடம் தமிழ் கற்றார். 18 ஆம் அகவையில் அவரை அதே பாடசாலையில் ஆசிரியராக நியமித்தார் பெர்சீவல் பாதரியார்.

ஒரு நாள் பெர்சீவல் பாதிரியார், ஆறுமுக நாலரிடம், நான் இந்தியாவுக்குப் போகிறேன் வருகிறாயா? என்று கேட்டார். சரி என்று தமிழகம் போனார் ஆறுமுக நாவலர்.

சென்னையில் வைத்து பைபிளை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் செய்வாயா?என்று கேட்டார்.

நல்ல முறையில் தமிழில் மொழி பெயர்த்தார் ஆறுமுக நாவலர். ஆறு மாதங்கள் நின்றும் நடத்தும் தமிழில் பைபிளை மொழி பெயர்த்தார்.  இந்த நூலுக்கு ஒரு பெயர் இட்டு அழைக்க வேண்டும் என்பது தமிழ் மரபு. உங்களின் வேதமாக இருப்பதால் இதை வேத ஆகம நூல் என்று பெயரிட்டார்.
இதன் தொடர்ச்சியாக வேம்புரி மகளிர் கல்லூரியில் தமிழில் பிரார்த்தனை செய்யப்பட்டது. எல்லோருக்கும் இலவசமாக வேத ஆகம நூல் கொடுக்கப்பட்டது. எல்லோரும் கையிலும் ஆறுமுக நாவலர் மொழிபெயர்த்த நூல் இருந்தது.

கிறுத்துவ மதத்தை பரப்புவதற்காக வீடு தோறும் வரும் கிறுத்துவ மதப் பிரச்சாரகர்களை, வேதக் காரர்கள் வருகிறார்கள் என்று மக்கள் சொல்லத் தொடங்கினர். இதைக் கண்ட நாவலர் கவலையுற்றார். வேதம் என்பது ரிக், யூசுர், சாம, அதர்வண வேதங்களைக் குறிக்கும். சைவ மறை என நான் மறையைக் குறிக்கும். அது மறைந்து போய் கிறுத்துவ நூலை வேத நூல் என்று சொல்லும்படி ஆகிவிடுமோ என்று கவலையுற்றார்.

இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று எண்ணி, பெர்சீவல் பாதிரியாரின் பாடசாலையிலிருந்து விலகினார். செல்வாக்கு மிகுந்த பெர்சீவல் பாதிரியாரின் நட்பு கிடைப்பது அரிது. அதுவும் அவரிடம் பணி செய்கிறார் நாவலர். இப்போது வேலையை விட்டு விடுகிறேன் என்கிறார். புதிதாக வேலை கிடைப்பது என்பது அரிது.

சைவ சமயத்தைக் கட்டமைக்க புதிய பாடசாலை கட்டுவேன் என்றார். எல்லோரும் கேலி பேசினார்கள். அருகில் உள்ள பிள்ளைகளை அழைத்து பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

இதைக் கவனித்த பெர்சீவல் பாதிரியார் மீண்டும் ஆறுமுக நாவலரை தனது கல்லூரிக்கு அழைத்தார். சிவனை வைத்து வழிபாடு செய்து பாடம் நடத்துவதை பார்த்த பார்சீவல் பாதிரியார், உள்ளே இருப்பது கல். அதை இறைவன் என்று சொல்லி பாடம் நடத்துகிறீர்களே என்று கேட்டார்.

உடனே மிகுந்த பணிவுடன் ஆறுமுக நாவலர், உங்கள் மகளும் பெண், உங்கள் மனைவியும் பெண்.  இருவரையும் ஒன்றாகப் பாவிப்பீர்களா என்று கேட்டார். வாயடைத்து போன பார்சீவல் பாதிரியார் ஒன்றும் பேசாமல் திரும்பிச் சென்றார்.

நாவலர் வீதியில் ஒரு இடத்தில் கொட்டில் போட்டு பாடசாலைத்  தொடங்கினார். சைவ பிரகாச வித்யாசாலை என்று பெயர் வைத்தார். பிள்ளைகள் நிறைய பேர் வரத் தொடங்கினார்கள்.

பட்டினத்து சிவன் கோவிலில் நற்சிந்தை பற்றி பேச ஆறுமுக நாவலருக்கு வாய்ப்பளித்தார் செட்டியார்.

ஆயத்தம் இல்லை என்ற தலைப்பில் அற்புதமாகப் பேசினார் ஆறுமுக நாவலர். பிரசங்க மரபு (மேடை பேச்சு) அன்றுதான் தொடங்கியது.
தனது பாடசாலையில் மாணவர்களுக்கு இலவச கல்வியோடு சோறும் வழங்கினார். நெல் அறுவடை செய்யும் இடத்தில் நின்று நெல் கொடுங்கள் என்று கேட்டார்.

தங்களிடம் பயின்ற மாணவர்களையே ஆசிரியராக நியமித்தார்.
சிதம்பரத்தில் காலால் இயக்கப்படுகின்ற அச்சு இயந்திரம் ஒன்றை வாங்கினார். ஓலைகளை ஏடுகளாக நூலில் அச்சிட்டார்.

சிதம்பரம் கோவிலுக்குச் சென்றார் ஆறுமுக நாவலர். கோவில் வாயிலில் தீட்சிதர்கள் வெற்றிலை பாக்கு போட்டு துப்பி வைத்திருந்தனர்.

தீட்சிதர்களிடம் ஒழுங்கு இல்லை என்பதை கண்டு மனம் கலங்கினார்.
அங்கிருந்த ஒரு தீட்சிதரை அழைத்து சீர்காழியில் பாடப்பெற்ற தேவாரப்பாடலை பாடச் சொல்லிக் கேட்டார். அதற்கு தேவராமா? அது தெரியாது என்றார் தீட்சிதர்.

புதியதாக வாங்கிய அச்சு இயந்திரத்தில் முதன் முறையாக, சிதம்பரம் தீட்சிதருக்குக் கண்டனம் என்று ஒரு பிரசுரம் செய்து வெளியிட்டார். வெள்ளிக் கிழமை அன்று சிதம்பரம் கோயில் வாயிலில் நின்று கொண்டு கொடுத்தார். தீட்சிதர்கள் அவரை சூழ்ந்து கொண்டு மிரட்டினார்கள்.

பிறகு கடவுள் விட்டவழி என்று கூறிக் கொண்டு யாழ்ப்பாணம் புறப்பட்டார். பருத்தித்துறை செட்டியார் அவர்கள் இவர் அருகில் வந்து விசாரித்து, சித்தி விநாயகர் கோவிலில் வந்து சொற்பொழிவு ஆற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
அவரது பொழிவைக் கேட்ட செட்டியார், உங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன் என்றார்.

யாழ்ப்பாணம் முழுவதும் நடந்தே சென்று சொற்பொழிவாற்றினார் ஆறுமுக நாவலர்.

‘Morning Star’என்ற பத்திரிக்கை நாவலரைக் கண்டித்து பிரசுரம் செய்திருந்தது. உடனே அவர்களுக்கு மறுப்பு தெரிவித்து ஒரு பிரசுரம் வெளியிட்டார் நாவலர்.

இரவில் இலுப்பை எண்ணை விளக்கு வெளிச்சத்தில் பெரிய புராண வசனத்தை அச்சிலேற்றி மாணவர்களுக்குக் கொடுத்தார். பைபிளுக்கு இணையாக பெரிய புராணத்தைப் படிக்கும்படியாக செய்தார்.

கொழும்பில் பொன்னம்பலம் இராமநாதனுடைய மாமா நல்லதம்பி அவர்களிடம் ஆறுமுக நாவலரைப் பற்றிக் கூறினார்கள். நல்லதம்பி அவர்கள் ஆறுமுக நாவலருக்கு தங்களுக்கு வேண்டிய உதவிசெய்யத் தயாராக இருப்பதாக ஒரு கடிதம் எழுதினார்.

எங்கள் சைவ பாடசாலைக்குக் கூரை வேய காசில்லை என்று எழுதினார் ஆறுமுக நாவலர்.

மிட்டாய்கடை சந்து வீதியில் எனக்குத் தெரிந்த நண்பர் ஐந்து கடை வைத்துள்ளார். அவற்றை வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறினார். 400 ரூபாய்க்கு விலை பேசப்பட்டது. அந்தத் தொகையை 45 தவணைகளில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தார் நல்லதம்பி.

ஒரு கடையில் இயந்திர அச்சு சாலையும் இன்னொரு கடையில் புத்தக சாலையும் வைத்துக் கொண்டு மற்று மூன்று கடைகளை வாடகைக்கு விடுத்தார் ஆறுமுக நாவலர். அதிலிருந்து வருமானத்தைக் கொண்டு சைவ பாடசாலையை நடத்தினார்.

ஆறுமுக நாவலர் தன் வாழ்நாளில் 71 நூல்களைப் பதிப்பித்தார். 86 ஆம் அகவையில் இறந்தார்.

சிதம்பரம் மேற்குவீதியில் மாலைக்கட்டித் தெருவில் சைவ பிரகாச பாடசாலையை அமைத்தார். பாடசாலையில் தேவரா பாடல் முதல் வணக்கப் பாடலாகச் சொல்லி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
பால பருவ பாடம் 1, பாடம் 2 என்ற முறையில் பாடத்திட்டங்களைக் கொடுத்தார்.

சைவ வினாவிடை என்ற முறையில் நூல்களை அச்சிட்டுக் கொடுத்தார். இந்த முறைகளை முதன் முதலில் அறிமுகப் படுததியவர் ஆறுமுக நாவலர்.
கோவில்களில் வேள்வி என்ற முறையில் உயிர்களை பலியிடுவதை எதிர்த்தார்.

நல்லூர் கந்தசாமி கோயில் தேரோட்டத்தின் போது, தேரின் சக்கரங்களில் ஆட்டின் தலையை வெட்டி வைப்பதும், சேவல்தலை அறுப்பதும் மரபாக இருந்து வந்தது. இதற்கு நாவலர் எதிர்ப்புத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு நடைபெறுவதை அறிந்து கொண்டு முன்னதாக வந்திருந்து கோழி, ஆடு பலியிடுவதை எதிர்த்தார். விடப்பிடியாகப் போராடினார். இறுதியில் கோழி, ஆடு பலியிடுவது நிறுத்தப்பட்டது.

நாடு முழுவதும் ஏராளமான பாடசாலைகளை உருவாக்கினார். ஏறத்தாழ 144 பாட சாலைகளை ஏற்படுத்தினார். இதன் காரணமாக அந்தந்த ஊர்களில் ஆடு, கோழி உயிர் பலியிடுவது நின்று போனது.

சுதுமலையில் சி.வை. தாமோதரம் பிள்ளை மற்றும் கரோல் விசுநாதப் பிள்ளை ஆகிய இருவரை கிறித்துவ பாதிரிமார்கள் இந்தியாவுக்கு அனுப்பி படிக்க வைத்து ஆறுமுக நாவலருக்கு எதிராகத் திருப்ப முனைந்தனர். இதில் சி.வை. தாமோதரம் பிள்ளை சென்னையிலே தங்கி தமிழ் இலக்கிய நூல்களைப் பதிப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சென்னைப் பல்கலைக் கழகத்தின் முதல் பட்டதாரி இவர்.

கரோல் விசுவநாதப் பிள்ளை யாழ்ப்பாணம் வந்து ஆறுமுக நாவலருக்கு எதிராகச் செயல்பட்டார். இறுதியில் ஒரு நாள் நாவலர் வரும்போது அவருக்கு முன்பாக, பழுக்கக் காய்ச்சிய ஊசியால் நாக்கைக் குத்திக் கொண்டு உங்களுக்கு எதிராக பாவச் செயலை செய்துவிட்டேன் என்று கூறி துன்பப்பட்டார்.

சிவ வழிபாடு மறுக்கப்பட்ட நிலையில், சிவன் கோயில்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிலையில், சூலத்தை  வீட்டில் உள்ள கிணற்றுக்கருகில் வைத்து வழிபடத் தொடங்கினார்கள். ஒல்லாந்தர்களின் ஆட்சியாளர்கள் வரும்போது ஓலையால் ஆன பட்டையைக் கொண்டு மூடி மறைத்துவிடுவார்கள்.

வசன நடையில் வல்லுநர் ஆறுமுக நாவலர் என்று பெயர் பெற்றார். இலக்கண இலக்கிய வளர்ச்சியை ஏற்படுத்தியவர்.

சென்னையில் அகராதி பதிப்பில், ஆறுமுக நாவலருக்கும் சதாவதானி கதிரைவேற் பிள்ளைக்கும் நன்றி தெரிவித்து எழுதப்பட்டுள்ளது.

ஒரு முறை தமிழகத்தில் திருவாடுதுறை ஆதினத்தில் சொற்பொழிவு ஆற்றினார் ஆறுமுக நாவலர். அவரது உரையைக் கேட்டு வியந்த மடாதிபதி அவரை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்து நாவலர் என்ற பட்டத்தை வழங்கினர்.

ஒரு காலக் கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பெரியம்மை நோய் பரவியது. ஏராளானமானவர்கள் இறந்து போனார்கள். பெரியம்மை பாதிக்கப்பட்டவர்களை யாரும் தொடமாட்டார்கள். வீட்டில் ஒரு ஓரத்தில் இருக்க வைத்துவிடுவார்கள். அங்கே இருந்து அவர்கள் இறந்துவிடுவார்கள்.
இந்நிலையில் தன்னுடைய பாடசாலை மாணவர் ஒருவருக்கு பெரியம்மை வந்ததை அறிந்த ஆறுமுக நாவலர், ஒரு நாள் இரவு அந்த மாணவனின் இல்லத்திற்குச் சென்று அவன் அருகிலேயே இருந்து அழுதுகொண்டே இருந்தார். பிறகு தெருவுக்கு வந்து உங்களுக்கெல்லாம் மனச்சாட்சியே இல்லையா என்று ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.

பஞ்சமும் பசியும் தலைவிரித்தாடுகின்ற நிலையில் பெரியம்மை பரவிக் கொண்டே இருந்தது. இதனால் மக்களின் பசியைப் போக்க கஞ்சித் தொட்டி வைத்து உணவு வழங்கப்பட்டது. வீட்டிற்கு முன்பாக சங்கிட பலகை வைக்கும் முறை இதனால் ஏற்பட்டது.

விதை நெல் வைத்திருப்பவர்களிடம் சென்று உங்களுக்கு இரக்கமே இல்லையா, அவனவன் பசியில் இறக்கிறான், நீங்கள் அடுத்த விளைச்சலுக்கு நெல்லை வைத்திருக்கிறீர்கள் என்று சத்தம் போட்டார்.

விவசாயத்திற்காக கடன் வாங்கிய மக்களிடமிருந்து காணி நிலங்கள் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டன. யாழ்ப்பாணத்திலிருந்து அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அவர்கள் எல்லாம் மன்னார், கிளிநொச்சி பகுதிகளுக்கு அடித்து விரப்பட்டனர்.

நிலங்களை உழும் போது அம்மன் சிலை கிடைத்தது. அதை பிரசுரம் செய்து வெளியிட்டார். இதன் பயனாக கோயில்கள் உருவாகின.

ஆறுமுக நாவலருக்கு எதிரான கில்­ர் ஆங்கில பாடசாலையை தொடங்கினார்கள் கிறித்துவ பாதிரிமார்கள். மாமிச உணவு, படிப்பு முடித்ததும் மலேசியாவில் வேலை வாய்ப்பு என்று முழக்கங்களைச் செய்து மாணவர்களை பாடசாலையில் சேர்த்தனர்.

இவர்களின் முயற்சியை முறியடிக்க, ஆங்கில பாடசாலைகளைத் தொடங்குங்கள் என்று தனவந்தர்களை, செல்வந்தர்களை ஆறுமுக நாவலர் மன்றாடிக் கேட்டுக் கொண்டார். துண்டு பிரசுரங்களை வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நாவலர் இறந்த பின்பு பசுபதி செட்டியார் போன்றவர்களின் உதவியால் யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக இந்து ஆங்கிலக் கல்லூரி ஏற்படுத்தப்பட்டது.

நாகலிங்கம், பசுபதி செட்டியார், சபாபதி பிள்ளை போன்ற அறிஞர்கள் வீடு வீடாகச் சென்று படி அரிசி எடுத்து கல்லூரித் தொடங்க ஆதரவு கேட்டார்கள்.
இவை யெல்லாம் இந்து கல்லூரி 150 ஆண்டு மலரில் உள்ளது.






2 comments:

  1. https://www.youtube.com/watch?v=CcqfZ9JWE5s

    ReplyDelete
  2. https://www.youtube.com/watch?v=0oKxFGh47PM

    ReplyDelete